Posts

Showing posts from January, 2018

சிரியா மக்களின் அவலங்களும் பொருத்தமில்லாத தீர்வுகளும்!!!

Image
சிரிய மக்களின் அவலமும் பொருத்தமில்லா தீர்வுகளும்!!! சிரியாவின் அவலம் கண்டு உலக முஸ்லிம் உம்மத் கவலையோடு இந்த அநீதிக்கு ஒரு முடிவு வராதா மீண்டும் சிரியா சுபீட்சம் பெற தீர்வு ஏதும் உண்டா என்று காணப்படுகையில் ஒரு சில உலமாக்களால்  தீர்வுகளாக சிரிய மக்களை பொறுமைகாக்க சொல்வதும், அம்மக்களுக்காக நன்கொடை வழங்குமாறு பணிப்பதும், நம்மால் முடிந்தது துஆ மட்டும்தான் என்று கூறுவதையும் அவதாணிக்க முடிகின்றது!!! அடிப்படையில் மேலுள்ள தீர்வுகள் சிரியா அரசியல் பிரச்சினையின் விளைவான  யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாம் கூறும் தீர்வுகளா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை!!! துஆ கேட்டல், நிதியுதவி  வழங்குதல் போன்ற விடயங்கள் சிரியா யுத்தத்ததை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாம் உரைக்கும் தீர்வினை செயற்படுத்தும் முயற்சியோடு தொடர வேண்டிய நல்லமல்களே தவிர இஸ்லாம் கூறும் உண்மைத் தீர்வை புறக்கணித்து தீர்வாகக் காட்டப்பட வேண்டிய அம்சங்களல்ல. நிஜத்தீர்வை  நோக்கி உம்மத்தை நகரவிடாமல் செய்வது அல்லலுரும் சகோதர முஸ்லிம்கலுக்கு செய்கின்ற மிகப்பெரும்  துரோகமும்,  பாவமும் ஆகும்!!! சிரியா யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர

ஜனநாயகம் VS இஸ்லாம்

Image
ஜனநாயகம் VS இஸ்லாம் கலிபாவை தேர்ந்தெடுப்பதிலும் நவகால ஜனநாயக அரசியலில் ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பதிலும் மக்கள்தான் ஓட்டு போட்டு தெரிவு செய்கிறார்கள் அதனால் ஜனநாயகமும் இஸ்லாமே என்பது சிலரது வாதம்! பன்றியிடமும் மடி இருக்குனு பசுவை விட்டுட்டு பன்றியிடம் பால் கறந்து குடிக்க முடியுமா??? ஓட்டு போட்டு தெரிவு செய்யும் ஒற்றுமை இருப்பதால் மட்டும் ஜனநாயகமும் இஸ்லாமும் ஒன்றாகி விடாது கலிபா படைத்தவன் சட்டத்தை (குர்ஆன், ஹதீஸ்) அமல்படுத்துவார் நவகால ஜனநாயக ஆட்சியாளர் படைக்கப்பட்டவன் உருவாக்கிய "அரசியல் அமைப்பை" அமல்படுத்துவார் இரண்டுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளதே! கலிபா இஸ்லாத்தை தஃவாவை கொண்டும் ஜிஹாதை கொண்டும் நிலை நிறுத்துவார் மாறாக நவகால ஆட்சியாளர் தன்னை மட்டுமே நிலை நிறுத்தி குப்ரை சட்டமாக நிலைநாட்டுவார் வட்டி, மதுவை ஹலால் ஆக்குவார்! இஸ்லாம் ஹராம் ஆக்கியதை இந்த நவகால ஆட்சியாயாளர் மனோஇச்சை சட்டங்களை கொண்டு சரி கண்டு சட்டமாக்குவது உங்கள் கண்ணுக்கும், காதுக்கும் எட்டவில்லையா? ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்கள் கருத்தே சட்ட வடிவம் பெறும் அவை நன்மையா தீமையா என்று ஆராயப்படாது

அல்லாஹ்வை அஞ்சிய கலிபா...

Image
150 மில்லியன் பவுண்ட் தங்கம் தருகிறோம் பாலஸ்தீனத்தை எங்களுக்கு கொடுங்கள்!!! 150 மில்லியன் பவுண்ட் அல்ல இந்த உலகம் முழுவதும் தங்கம் தந்தாலும் உங்களுக்கு பாலஸ்தீனை கொடுக்க முடியாது அது எனக்கு சொந்தமானதல்ல உம்மத்துக்கு சொந்தமானது. அல்லாஹ்வை அஞ்சிய கலிபா அப்துல் ஹமீது 2 அவர்கள் ஜியோனிசவாதிகளை பார்த்து உதிர்த்த வார்த்தைகள் இவை!!! அமெரிக்காவை அஞ்சும் அரபுலகமாக இருந்தால் என்ன கூறியிருப்பார்கள்?????

கிலாபா வரும் வரை நாம் என்ன செய்யலாம்?

Image
கேள்வி:- கிலாபா வரும் வரைக்கும் நாம் என்ன செய்யலாம்? பதில் : முதலில் கிலாபா தானாக வானத்திலிருந்து இறங்குவதில்லை அது முஸ்லிம் உம்மத் மேற்கொள்ளும் சாத்வீகரீதியிலான  அறிவார்ந்த சித்தாந்த போராட்டத்தின் விளைவாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.   வரவிருக்கும் கிலாபாவுக்கான உழைப்பு  முஸ்லிம் உம்மத்துக்கான பொறுப்பு என்பதை மனதில் நிறுத்தி முஸ்லிம்களாகிய நாங்கள் நாளை வரவிருக்கும் கிலாபாவுக்கு சாதகமான கருத்துருவாக்கத்தை இன்று காணப்படும் அநீதியான வாழ்வொழுங்குக்கு மாற்றீடாக இஸ்லாமிய வாழ்வொழுங்கை  முன்வைத்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இதுவே எமது தலையாய பணி .இந்தப் பணியிலிருந்து கொண்டுதான் ஏனைய பிரச்சனைகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் இது சன்மார்க்கக் கடமை . அத்துடன்  நிரந்தர பாதுகாப்பும்  ,கண்ணியமும் , பூரண இஸ்லாமிய பின்பற்றலும் முஸ்லிம்களுக்கு சாத்தியமான ஆட்சிவடிவம் கிலாஃபா மாத்திரம்தான். ஆகவே நமது கேள்வி கிலாபாவுக்காக முஸ்லிம்களாக நாம் என்ன செய்யலாம் என்றளவுக்கு மாறுதல் வேண்டும். சித்தாந்தமாக இஸ்லாத்தை கற்காதவவரைக்கும்  இது சாத்தியமில்லை அடுத்ததாக முஸ்லிம்களாக

சமூக தீமைகளும் தீர்வும்...

Image
இன்று சமூகத்தில் பெரும்பாவங்கள் மலிந்துள்ளது. பொடியன் சமாச்சாரமுதல் அரசியல்வாதிகளது சல்லாபங்கள்வரை. இவற்றிற்கு எல்லாம் இந்த சம்மேளனம் தீர்வுகொடுக்கும் அதிகாரம் பெற்றதா? இன்று செவன டிகட் முதல் பாடசாலையில் ஆண்பெண்கலப்பு வரை அனாச்சாரங்கள் தொடர்கிறது. வட்டிக்கடை முதல் குடுவியாபாரம் வரை சமூகம் சீரழிகிறது. இவையாவற்றையும் தடுத்து நிறுத்த இந்த சம்மேளனத்திற்கு சக்தியுள்ளதா? பகுதியாக சிலவிடயங்களில் அறைகுறை தீர்வுகளை மக்களிடம் சொல்லும் நிலை ஒருவகையான அநீதியே! இஸ்லாம் பற்றி சிந்திப்பவர்கள் அதனது முழுமையான அதிகாரம் பற்றியும் சிந்திக்க வேண்டும். அது இல்லாதவிடத்து நமது சமூக முன்னெடுப்புகள் பக்கச்சார்பாகவும் அநீதிக்கு வழிகோலுவதாகவுமே அமையும். பாவங்களுக்கு தண்டனை கொடுப்பது பற்றி சிந்திக்கும் சமூகம் பாவங்கள் நடைபெற காரணமான இன்றைய குப்ரிய வாழ்வொழுங்கும் அதனை அமுலாக்கும் அரசுபற்றியும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது! இஸ்லாம் அமுலாக்கப்படாத நிலையில் சமூகத்தீமைகள் மலிந்தே காணப்படும். அது தனிநபர் முதல் நிறுவனங்கள் வரை தொடரவே செய்யும். - Ahamed Maryam Mohideen

சமூக அநீதிகளுக்காக எழுந்து நிற்க்கும் போது!!!

Image
சமூக அநீதிகளுக்காக எழுந்து நிற்கும் போது...! சமூக அநீதிகள் மிகைத்திருந்த சமூகத்தில் அந்த அநீதிகளுக்கு எதிராக எழுந்து நிற்கும் அரசியலைத்தான் நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் செய்தார்கள். அசத்தியத்தினது சிரசை உடைத்து அராஜகத்தை அரங்கேற்றிய தாகூதுகளை எதிர்கொண்டு மனித சமூகத்தில் நீதியை நிலைநாட்டிடும் அரும்பணிதான் நபிமார்கள் இத்தரணியில் செய்த உத்தம பணி. இன்றுள்ள சமூக அநீதிகளது தோற்றுவாய் முதலாளித்துவ ஜனநாயக அரசிலாகும். இந்த அரசியல் சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அநீதியையே ஏற்படுத்திவருகிறது. இன்றுள்ள உலகஒழுங்கை தலைமை தாங்கும் மிகப்பெரிய தாகூது அமெரிக்கா இதற்கு சிறந்த உதாரணம். இந்த தாகூதுகளை எதிர்கொண்டு மக்களுக்கான நீதியை பெற்றிட ரப்புடைய உலக ஒழுங்கை மீண்டும் இப்பூமியல் நிறுவிட உழைக்கும் எமது சகோதர முஸ்லிம்கள் உலகெங்கும் இன்றுள்ள தாகூதுகளினால் சொல்லொன்னா துன்பங்களையும் துயரங்களையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்டுவருகிறார்கள். இந்நிலையில் இன்றுள்ள தாகூதுகளினது முதலாளித்துவ அரசியலில் உள்ள ஊழல் மோசடிகள் களையப்பட வேண்டும் என்று இதே தாகூதிய அரசியலூடாக மாற்றம் காண நினைத்த மகனுக்கு இன்ற

தாகூதுகளை உருவாக்கும் முதலாளித்துவ அரசியல்...

Image
தாகூதுகளை உருவாக்கும் அரசியல் ஒழுங்கு முதலாளித்துவ ஜனநாயக முறைமை! மனிதன் தனது ரப்புக்கு முழுமையாக வழிப்பட்டு நடக்கும் அப்தாக இருக்கும்படி விரும்புகிறான். இதற்கு தடையாக இருப்பவர்கள்தான் தாகூதுகள். இந்த தாகூதுகள் ரப்புடைய ஏவல் விலக்கல்களுக்கு வழிப்படாது தமது கட்டளைகளுக்கு வழிப்பட அழைப்பவர்கள். இன்றுள்ள தாகூதுகள்தான் மனிதச் சட்டங்களை ஆக்குபவர்கள். இவர்கள் ரப்பை நிராகரிப்பவர்கள். இந்த இறை நிராகரிப்புக்கு காரணமான அரசியல் முறையைத்தான் இன்றுள்ள முதலாளித்துவ ஜனநாயம் செய்கிறது. மனிதன் சட்டத்தை ஆக்க வேண்டும் என்று சொல்லும் அதேவேளை இறைவனிடம் இருந்து வரும் சட்டங்களை கருத்திற்கொள்ளக் கூடாது என்கிறது. இத்தகைய தாகூதுகளை எதிர்கொள்வதற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் ரஸுல்மார்கள் என அல்குர்ஆன் எடுத்தியம்புகிறது. இதனை இந்த அல்குர்ஆனிய வசனத்தில் இருந்து நாம் உணரமுடியும். “மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; தாகூதுகளை (ஷைத்தான்களை) விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்;” (16:36) எனவே , ஏகத்துவ

காஷ்மீரின் மரண ஓலங்களும் அதற்க்கான தீர்வும்...

Image
கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம். பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள். இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும்

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அரசியல் அதிகாரத்தை அடைந்து கொண்டார்கள்? தொடர் - 5

நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்(சுபு) தனது தீனுக்கு சிறந்த நுஸ்ராவைக்கொண்டு ஆதரவளிக்கும் வரையில் நுஸ்ரா கோருதல் என்ற நடைமுறையை கைவிடாது தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள். இப்னு ஹிஷாமில் இப்னு இஷ்ஹாக் சொல்கிறார், “அல்லாஹ்(சுபு) தனது தீனின் ஆதிக்கத்தை எப்போது நிலைநாட்ட விரும்பினானோ, தனது தூதரை கண்ணியப்படுத்தி அவனது வாக்குறுதியை பூர்த்திசெய்ய நாடினானோ அந்த சமயத்தில்தான் நபி(ஸல்) ஒரு ஹஜ் காலப்பகுதியில் அன்ஸார்களைச் சந்தித்தார்கள். வழமையாக ஹஜ்ஜின் போது கோத்திரங்களுடன் தன்னை அறிமுகப்படுத்துவதைப்போன்று இம்முறையும் அரபுக் கோத்தித்தவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தினார்கள். அந்தவகையில் அல் அகபாவிலே அவர் இருந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்(சுபு) அருள்பாலிக்க நினைத்திருந்த ஹஷ்ரஜ் என்ற கோத்திரவர்களை நபி(ஸல்) சந்தித்தார்கள். ஹஷ்ரஜ் கோத்தரத்தவர்கள் நபி(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவ்ஷ் என்ற கோத்திரத்தவர்களுடன் தங்களுக்கிருந்த பிணக்கை தீர்த்துக் கொள்ள சென்றார்கள். அடுத்த வருடம் அவர்கள் பன்னிரண்டு நபர்களுடன் வந்து அல் அகபாவில் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். இதுதான் முதலாவது அகபா உடன்படிக்கை. பின்னர்

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அரசியல் அதிகாரத்தை அடைந்து கொண்டார்கள்? தொடர் - 4

நபி(ஸல்) பனு கல்ப் எனும் கோத்திரத்தை அவர்களின் இடத்திற்கு சென்று சந்தித்தார்கள். எனினும் நபி(ஸல்) அவர்களை, அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அல் யமாமாஹ்வைச் சேர்ந்த பனீ ஹனீபாவை அவர்களின் இடத்தில் சந்தித்தபோது வேறெந்த கோத்திரத்தவர்களும் நடந்துகொள்ளாத அளவிற்கு மிகவும் கர்வத்துடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள். நபி(ஸல்) பனீ ஆமிர் இப்னு ஸாஃஸா ஐ சந்தித்தபோது அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு தமக்கு அதிகாரத்தை தந்தால்தான் தாம் ஆதரவு நல்குவோம் என நிபந்தனை விதித்தபோது அதனை நபி(ஸல்) நிராகரித்து விட்டார்கள். பின்னர் யெமன் வரையில் சென்று நபி(ஸல்) பனீ கிந்தாவை சந்தித்தபோது அவர்களும் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு அதிகாரத்தை தந்தால்தான் ஆதரிப்போம் என்றார்கள். எனவே அவர்களின் நுஸ்ராவையும் நபியவர்கள் நிராகரித்தார்கள். பக்ர் பின் வைல்லினரை அவர்களின் முகாம்களில் சென்று அழைத்தார்கள். எனினும் தாங்கள் பாரசீகர்களின் எல்லைக்குள் இருந்ததால் நபி(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்க முடியாத நிலையைக்கூறி மறுத்தார்கள். பனீ ரபீஆவின் முகாம்களுக்கு சென்றபோது அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. பார

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அரசியல் அதிகாரத்தை அடைந்து கொண்டார்கள்? தொடர் - 3

நபி(ஸல்) தாயீப்பின் தலைமைகளிடம் நுஸ்ராவைக் கோருதல். நுஸ்ராவைக் கோரும் பணியின் முக்கிய முதற் கட்டமாக, அரேபிய தீபகற்பத்தின் குறைஷிகளுக்கு அடுத்தபடியான பலவாய்ந்த சக்திகளான தாயிபின் தலைமைகளிடம் நுஸ்ரா கோர நபி(ஸல்) தீர்மானித்தார்கள். பலத்திலும், சமூக அந்தஸ்த்திலும் அவர்கள் குறைஷிகளின் போட்டியிடும் சக்திகளாக இருந்தார்கள். ஏறத்தாழ சமதரத்தில் இவர்கள் இருந்த காரணத்தினால்தான் அல்குர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது, வலீத் பின் முகீரா "ஏன் இந்த குர்ஆன் மக்கத்தது பெருந்தகைகளுக்கோ, தாயிப்பின் பிரமுகர்களுக்கோ இறக்கப்பட்டிருக்கக் கூடாது" என்று கூறி அதனை நிராகரித்த சம்பவம் இந்த உண்மையையே உரைக்கிறது. "மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?” (43:31) தாயிப்பின் பலம் எத்தகையது என்றால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறுவப்பட்ட பின்னர் கூட தாயிப்பை கைப்பற்றும் நடவடிக்கை பெரும் பலப்பரீட்ச்சையாகவே இருந்தது. இரு தரப்பிலும் பலத்த இழப்புகளுக்கு பின்னர்தான் அவர்களை ஒரு வழிக்கு கொண்டு வர முடிந்தது. தாயிப் நகரை முற்றாக முற்

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அரசியல் அதிகாரத்தை அடைந்து கொண்டார்கள்? தொடர் - 2

நுஸ்ரா கோருதல்:- நபி(ஸல்) அவர்கள் நுபுவத்தின் பத்தாவது வருடம் அளவில் மக்கா சமூகம் தொடர்பாக ஒரு தெளிந்த நிலைப்பாட்டுக்கு வருகிறார்கள். அதுதான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய அழைப்பு மக்கா சமூகத்தை பொருத்தவரையில் நேர்மறையாக தொழிற்படவில்லை, அந்த சமூகம் இஸ்லாமிய சிந்தனைகளையும், எண்ணக்கருக்களையும் தமது பொதுக்கருத்தாகக் கொள்வதற்கு தயார்நிலையில் இல்லை என்ற அரசியல் புரிதலாகும். இந்தக் காலகட்டத்தில்தான் அல்லாஹ்(சுபு) நுஸ்ரா வைக்கோருவது பற்றிய கட்டளையைப் பிறப்பிக்கிறான். நுஸ்ரா என்பது நல்லாதரவு என்று பொருள்படும். நஸ்ர் என்பது அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைக் குறிக்கும், அன்ஸார்கள் என்போர் நல்லாதரவு நல்குவோரும், ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்போருமாவார்கள். “தக்கீப் கோத்திரத்தவர்களிடமிருந்து நுஸ்ராவைக் கோருவதில் நபி(ஸல்) அவர்களின் முனைப்பு” என்ற தலைப்பில் இப்னு ஹிஸாம் தனது வரலாற்று நூலில் ஒரு தலைப்பிட்டு விளக்குகிறார்கள். அபுதாலிப் இறந்ததன் பின்னால், குறைஷிகளின் துன்புறுத்தல் மிகவுமே அதிகரித்துவிட்டது. அந்தளவிற்கான துன்புறுத்தலை அவர் உயிருடன் இருக்கின்றபோது அவர்களுக்கு செய்யக்கூடியதாக இ