Posts

Showing posts from April, 2018

இஸ்லாம் அனைத்திற்க்கும் தீர்வை கொண்ட மார்க்கம்...

இஸ்லாம், முழு பிரபஞ்சத்தையும் படைத்த வல்லமை பொருந்திய இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை வழிமுறை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று அனைத்து படி நிலைகளையும் கொண்டது இஸ்லாம். அனைத்திற்க்கும் தீர்வு கொண்ட மார்க்கம் இஸ்லாம் என ஏற்றுக் கொண்ட நாம் அதை செயல்படுத்துவது கிடையாது. இஸ்லாம் அனைத்திற்க்கும் தீர்வு கொண்ட மார்க்கம் எனும் போது எவ்வாறு அரசியல் செய்வது அதன் மூலம் எப்படி இஸ்லாத்தை முழுமைப்படுத்துவது என்று இஸ்லாம் கற்று தரவில்லையா??? பின்பு ஏன் ஜனநாயக குப்ரை ஆதரிக்க வேண்டும். இமாம்கள் இஸ்லாம், இஸ்லாம் என மிம்பரில் மணிக்கணக்கில் மூச்சு திணற பேசி விட்டு தேர்தல் சமயத்தில் ஓட்டு போட வரிசையில் நிற்க்கின்றனர் நவுதுபில்லஹ். இஸ்லாம் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என வழிமுறையை வழங்கியுள்ளது. அதை இமாம்கள்தான் மக்களுக்கு கற்று தரவில்லை!!! கற்க்கவும் விடவில்லை மாறாக முஸ்லிம் சமுகத்தின் சிந்தனையை அமலிலேயே புதைத்து விட்டார்கள்!!! அமல் செய்வது மட்டும்தான் இஸ்லாமா??? நபி (ஸல்) அமல் மட்டும்தான் செய்தார்களா? அரசியல் செய்யவில்லையா? ஜனநாயகத்தை ஆதரிப்பதன் மூலம் இஸ்லாத்திற்க்கு மாறு செய்கிறீர்கள் என

அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர்!!!

முஸ்லிம் உம்மத்தின்  தார்மீகக் கடமை! கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை  உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு து}ய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது. இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது. இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்" எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலம

சிறு சிந்தனைகள் தொகுப்பு - 10

1) வஹியை அமலிய சாயலில் ஆழம்வரை சென்று அலசி ஆராய்ந்து அண்டை அமைப்பிடம் விவாதம் அடிதடி தகராறு வரை செல்பவர்கள் அரசியலில் ஆராய தயாராக இல்லை காரணம் அதை செய்தால் ஜனநாயக கடவுள் கோபித்து கொள்ளுமே!!! மார்கத்தை மதமாக்கி விவாதத்திற்க்கு வரியா என வாய்சவடால் விடுபவர்கள் சற்றே சிந்திக்க வேண்டும்!!! இஸ்லாம் ஆன்மீகத்தை மட்டும்தான் போதிக்கிறதா??? அரசியலை போதிக்கவில்லையா??? 2) சத்திய மார்க்கத்தை பற்றி பிடித்து கொண்டால் உலகின் ஆட்சியை வழங்க அல்லாஹ் போதுமானவன் ஆனால் மக்களோ சிங்கத்தின் கோட்டை வேண்டாம் ஜனநாயக மாட்டு தொழுவத்தில் அடிமாடுகளாகவே இருந்து விட்டு போகிறோம் என்கிறார்கள். வாழ்கை என்பது சோதனையே குப்ருக்கு எதிராக வெற்றி அல்லது மரணம் ஆக இரண்டுமே சிறந்து ஜனநாயகத்தை ஏற்ப்பது ஒருபோதும் சிறந்ததல்ல!!! அது திட்டமான வழிகேடு!!! 3) ஜனநாயக தாயே உன்னையே நாங்கள் வணங்குகிறோம் என ஒரு சிலை வணங்கும் குப்பார் கூறலாம், ஆனால் ஒரு முஸ்லிம் கூற முடியாது ஏனெனில் அவன் அல்லாஹ்வின் அடிமை நான் என்ற தன் நிலையை உணர்ந்தவனாக இருக்கிறான். அல்லாஹ்விடம் சரணடைந்து தனது வாழ்வாதாரத்தை தேட வேண்டிய ஒரு முஸ்லிம்  ஜனநாயக கடவுளிடம் தன் கோர

முஸ்லிம்களின் அடையாளங்களும் அழிக்கப்படும் அவலம்....

* கஜகஸ்தான் அரசு வலுக்கட்டாயமாக ஆண்களின் தாடியை மழித்தது... * சீன அரசு முஸ்லிம்களிடம் இருந்த குர்ஆன், ஹதீஸ் புத்தகங்களை பறித்தது... * இந்தியாவில் ஒட்டகம் குர்பானி, முத்தலாக், தனிநபர் வாரிய சட்டத்தில் மோடி அரசு தலையிட்டது... * இப்போ இலங்கையில் அபாயா பறிப்புக்கான போராட்டம்... இவையெல்லாம் ஒரு சின்ன சேம்பில்தான் ஒவ்வொரு நாட்டுலயும் இது போல இன்னும் பல கொடுமைகள் இருக்கு... முதலாளித்துவ சித்தாந்தத்தை ஏத்துகிட்டு மதச்சார்பின்மை மார்கத்தை பின்பற்றுவதுதான் சரினு சொல்லும் ஜனநாயக முஸ்லிம்களே இதற்கான காரணம் என்னவென்று புரிகிறதா... ஏற்க்கெனவே முழுசா மார்கத்தை முதலாளித்துவத்துகிட்ட அடகு வச்சிட்டு அரசியலை ஆட்சியாளனுக்கும், ஆன்மீகத்தை அல்லாஹ்வுக்கும் அப்புடீங்கிற அவன் கொடுத்த மதச்சார்பின்மையை ஏத்துகிட்டது போதாதுனு மிச்சம் மீதி முஸ்லிம் அடையாளத்தையும் ஒவ்வொன்னா அடகு வைக்க நிர்பந்திக்குது ஏகாதிபத்தியம்... அதாவது இஸ்லாத்தோட அடிச்சுடடு கூட இருக்க கூடாதுனு ஏகாதிபத்தியம் நினைக்குது... காரணம் பயம்!!! #கிலாபா இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு கிலாஃபத்தை வீழ்த்திய  பின்னர் 1924 ஜூன் 24

ஜனநாயகம் ஒரு குப்ர்!!!

ஜனநாயகம் ஒரு  குப்ர்!!! இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தெளிவானதும் உறுதியானதுமான வழிகாட்டலை வழங்கியுள்ளது .என்பது முஸ்லீம்களாகிய எமது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும் . அந்த வகையில் தான் இஸ்லாத்தின் அகீதா விற்கும் அது காட்டிநிற்கும் நடைமுறை வாழ்விற்கும் மாற்றமாக சிந்திப்பது, செயற்படுவது (ஹராம் )முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளது . இதன் அடிப்படையில்தான் ' குப்ர், சிர்க்,ரித்தத் .பித்அத்,என்ற பதங்களின் பயன்பாடும் பிரயோகமும் இஸ்லாமிய 'ஷரீஆவின் ' அளவுகோலாக குர்ஆன்,சுன்னாவால் வரையறை செய்யப்பட்டுள்ளது . ஆனால் தெளிவாக ஆராயாத காரணத்தாலும் எமது பொடுபோக்கின் காரணமாகவும் நரகப் படுகுழிக்கு எம்மை ஆரத்தழுவி அழைத்துச்செல்லும் மிகப்பயங்கரமான ஒரு குப்ரின் நிழலில் எம்மில் அதிகமானோர் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது அதுதான் "ஜனநாயகம்" (Democracy ) மக்களால் , மக்களுக்கு ,மக்களுக்காக எனும் பசப்பு வார்த்தைகளின் பின்னால் உள்ள போளித்தன்மையும், பயங்கரமும் உணரப்படாது சர்வ சாதாரணமாக முஸ்லிம் உலகத்தை அதன் கீழ் அணி திரட்ட முயல்வது சில இஸ்லாமிய அறி

கிலாஃபா குறித்த சில இந்திய உலமாக்களின் கருத்துக்கள்...

கிலாஃபா குறித்த சில இந்திய உலமாக்களின் கருத்துக்கள்... ஏராளமான உலமாக்களும் பொதுமக்களும் கலந்துகொண்ட 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 5,6 ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற கிலாஃபத்திற்கான ஆதரவு மாநாட்டில் பல்வேறு உலமாக்கள் கலந்து கொண்டு அங்கே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில கீழ்வருமாறு:- 1. கிலாஃபா தொடர்பில் மக்கள் அபிப்பிராயத்தை ஏற்படுத்த உலமாக்கள் பாடுபட வேண்டும். 2. கிலாஃபத்திற்கு எதிரான அறிஞர்கள் எனப்படுவோரும், முனாஃபிக்குகளும் புறக்கணிக்கப்படவேண்டும். 3. கிலாஃபா பற்றி பேசவும் எழுதவும் தங்கள் உயிரை அர்ப்பணிக்குமாறும்இ தம்மை பின்பற்றுபவர்களிடம் உலமாக்கள் வாக்குறுதி வாங்க வேண்டும். 4. அரசியலமைப்பு ரீதியிலான தேர்தல்களில் இருந்து முஸ்லிம்கள் விலகியிருக்க வேண்டும். --------------------------------- டெல்லியில் 1920 நவம்பர் 19, 20 ம் தேதிகளில் இடம்பெற்ற ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தினுடைய அகில இந்திய மாநாட்டில் கிலாஃபத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இயற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து சில வரிகள்:- “ஆங்கிலேயர்களே முஸ்லிம்களின் பிரதான எதிரிகள், எனவே அவர்களை எதிர்ப்பது ஃபர்ளாகும். உம்

பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு?

பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு? பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் ஆகியமூன்றையும் மக்கள் பங்கிட்டுக்கொள்வார்கள் அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் உப்பளங்கள் போன்ற இயற்கைவளங்கள் நிறைந்த நிலங்களை அளவுக்கு அதிகமாக வைத்திருந்தவர்களிடமிருந்து அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நிலங்களை திரும்பப்பெற்றிருக்கிறார்கள். இன்று வளைகுடா நாடுகளில் ஆட்சியாளர்களாக இருக்கும் மனிதர்கள் எண்ணெய்வளம் எரிவாயுவளம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பெரும்பணத்தை தங்கள் சொந்தநலன்களுக்கு வரம்புமீறி பயன்படுத்துவதோடு கோடிக்கணக்கான பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டுவைத்திருக்கிறார்கள், ஆனால் இஸ்லாமியஅரசு இருக்கும்பட்சத்தில் இயற்கைவளங்களிலிருந்து கிடைக்கும் அபரிதமான வருமானத்தை பொதுமக்களின் நலப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும். ஏனெனில் இஸ்லாத்தின் விதிமுறைகள் அவ்வாறுதான் கூறுகின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், இமாம் (இஸ்லாமிய அரசின் கலீபா) மேய்ப்பர் ஆவார் அவரே உங்களுக்குப் பொறுப்பு ஆவார், (நூல்: புஹாரி. அஹமது. பைஹாகி)

யதார்த்தம் என்ன? நாம் என்ன செய்வது?

யதார்த்தம் என்ன? நாம் என்ன செய்வது? நம்மை ஆபத்துக்கள் தள்ளிவிட்டுள்ள விடயங்களை நாம் கைவிட்டால் தான் வாழமுடியுமென்றால் நாம் கலிமாவை கைவிட்டால் மட்டுமே போதுமானது. ஏனென்றால் முஸ்லீம்களாகிய எமது இன்றைய ஆபத்து எமது அடிப்படையான கலிமாவின் வாழ்க்கை முறை நோக்கி செல்வதிலும், அந்த வாழ்க்கை முறையை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான தகுதியான அரசியல் இராஜதந்திர பாதுகாப்பு இல்லாமையிலேயே தங்கியுள்ளது. எனவே இந்நிலையில்  குப்ராதிக்கத்துக்கு சவால்விடும் அல்லது குப்ராதிக்கம் மாற்ற நிர்ப்பந்திக்கும் ஷரீஆ விதிகளில் நாம் ஏற்றவைகளை ஒவ்வொன்றாக இழப்பதை விட கலிமாவை இழப்பது இலகுவானது. ஆனால் அந்த முடிவில் அற்பமான ஒரு சொற்பமான உலகியல் வாழ்வை தவிர எதுவும் நிச்சயம்  கிடைக்கப் போவதில்லை. எம்மிடமிருந்து வெளிப்படும் பெறுமதியான மார்க்க அடையாளங்களை கலையும்வரை ஆதிக்க குப்பார்களும் அவர்களால் பண்படுத்தப்பட்ட சமூகப் பின்புலங்களும் ஒருநாளும் ஓயப் போவதில்லை. எனவே சிலர் குறிப்பிடுவது போல் இலங்கைக்கென ஒரு பிரத்தியோக உடையை தெரிவு செய்வது முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் ஆபத்துக்களை விட்டும் பாதுகாக்கும் என்பது ஏற்கத்தக்க கருத்தல்ல! இங்க