Posts

Showing posts from October, 2019

வறண்ட நிலப் பகுதிக்கேற்ற பாசன முறை...

Image
*Waste water Dripping Irrigation system.* *கழிவு நீர் சொட்டுப் பாசன திட்டம்.* *வறண்ட நிலப் பகுதிக்கேற்ற பாசன முறை.* வீட்டுக் கழிவு நீரை இரண்டு வகையாக பிரிக்கலாம்.  ஒன்று waste water இரண்டாவது Foul water. Foul or sewage water என்பது மலக்கழிவுகளுடன் கூடியது.  இதனையும் பாசனத்திற்கு பயன்படுத்தலாம் எனினும் சுத்தகரிப்பு Treatment அவசியமாகிறது. Waste water என்பது நமது வீடுகளில் குளிக்க, பாத்திரம் கழுவ, வாஸ் பேசினில் பயன்படுத்திய நீர், வாஷிங் மெஷினில் பயன்படுத்திய நீர் waste water ஆகும். Waste water ஐ பாசனத்திற்காக பயன்படுத்த இரண்டு sump pit (நீர் சேமிக்கும் பள்ளம்) வேண்டும். மேலும் உயரே வைக்க  water tank, மற்றும் sump pit உள்ள நீரை டேங்கிற்கு ஏற்ற ஒரு water pump தேவை. Waste water ஐ குழாய் வழியாக வரும் இறுதிப் பகுதியில் வெளியே நிலத்தில் இரண்டு sump pit (நீர் சேகரிக்கும் பள்ளம்) அதனில் ஒன்றில் நிரப்ப அதன் பக்கத்திலேயே மற்றோரு sump pit அமைத்து இரண்டிற்கும் by pass குழாய் முதல் பிட்டில் over flow ஆகும் நீரை 4" குழாய் வழியாக மற்றோரு sump pitஅடியில் இருந்து அரை அட

உலக உணவு தினம் Oct16...

* உலகில் தற்ப்போது உற்ப்பத்தி செய்யப்படும் உணவு உலக மக்கள் அனைவருக்கும் போதுமானது ஆனால் உலகில் 82 கோடி மக்கள் தினமும் இரவு பசியோடு தூங்குகின்றனர். * உலகின் 70% உணவு உற்ப்பத்தியை சிறு விவசாயிகள், மீனவர்கள், மேய்ப்பாளர்கள் பூர்த்தி செய்கிறார்கள் ஆனால் அவர்களே பாதிக்கப்படகூடிய உணவு பாதுகாப்பின்மை நிலையில் உள்ளனர். * ஐநா அறிக்கைபடி உலகில் 850 மில்லியன் மக்களில் 489 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். * 155 மில்லியன் குழந்தைகளில் 122 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 மில்லியன் குழந்தைகள் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். நவீன கால மாறிப்போன உணவு சூழலில் ஊட்டச்சத்து முற்றிலுமாக இல்லாமல் போனது இல்லை அது இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அப்போதுதானே பலகீன குறைபாட்டால் நோயாளியாக மக்கள்  மருத்துவமனைக்கு செல்வார்கள் பில்லியன் டாலர் கார்ப்பரேட் வர்த்தகம் ஆச்சே. பாரம்பரிய அரிசி, காய்கறிகளை தவிர்த்து ஊட்டச்சத்து குறைவான புதிய, மரபணுமாற்றம் செய்யப்பட்ட அரிசி, காய்கறி உணவு வகைகளை பயன்படுத்தியதன் விளைவு. முதலாளித்துவம் கார்ப்பரேட் கல்லா கட்ட கடை

கம்யூனிச தேசத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் இனப்படுகொலை!!!

Image
உலகத்தில் முஸ்லிம் மக்கள் அனைத்து பகுதிகளிலும் கொடுமைகளை சந்தித்து வருபவர்களாக உள்ளனர். இதில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில், லட்சங்களில்,கோடிகளில் கொல்லப்படுகின்றனர். இந்த பட்டியலில் சீன அரசு, சீனாவில் உள்ள முஸ்லிம்களை கொடூரமான முறையில் அடக்குமுறைக்கு உட்படுத்தி ஓர் இனப்படுகொலையையே அரங்கேற்றி வருகிறது. ஆனால் இந்த கொடுமைகளை சர்வதேச நீதிமன்றங்கள் மட்டுமல்ல முஸ்லிம் நாடுகள் கூட கண்டுகொள்ளவில்லை. சீன அரசு, கிட்டத்தட்ட பத்து லட்சம்(தற்போது மூன்று லட்சம் என சில பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன.)  உய்கூர் முஸ்லிம்களை சித்ரவதை முகாமில் அடைத்துள்ளது.  ஆனால் இந்த சித்ரவதை முகாமிற்கு சீன அரசு வைத்த பெயர் " மறுகல்வி நிலையம்". இங்கே அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கையை விட்டு விடும் படி உளவியல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களையும் அனுபவிக்கின்றனர். முகாமில் இருக்கும் மக்கள் கண்டிப்பாக கம்யூனிஸ சித்தாத்தங்களை படிக்க வேண்டும். சீன தலைவருக்கு விசுவாசமாக நடப்பது எப்படி என்று பாடமும் நடத்தப்படுகிறது. சீனாவில் தன்னாட்சி உரிமைகளை பெற்ற பகுத

கம்யூனிச அரசின் வதை முகாம்!!!

Image
சீனாவில் உள்ள உய்கூர் முகாமில் பல்வேறு சித்ரவதைகளை அம்மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இதனை முகாமில் இருந்து வெளிவந்த நபர்களே தெரிவிக்கின்றனர். மறுகல்வி முகாம் எனும் பெயரில் சித்ரவதை முகாம் காய்ராட் சமர்காண்ட், தான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அருகில் இருக்கும் கஜகஸ்தானுக்கு பயணம் செய்ததற்காக என்னை கைது செய்தனர்.  கைது செய்து மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்கு பிறகு "மறுகல்வி முகாம்" என்று அழைக்கப்படும் சித்ரவதை முகாமில் மூன்று மாதம் அடைத்தனர். அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் மூளைச்சலவைக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.  ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு கம்யூனிஸ சித்தாந்தங்களை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அதே போல் சீன அதிபர் XI ஜிங்பிங்கை புகழ்ந்தும் அவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் பாடல் பாட வேண்டும். யாரெல்லாம் இதை பின்பற்றவில்லையோ, படிப்பதற்கு தாமதாக வந்தார்களோ, பாடுவதற்கு மறுத்தார்களோ அவர்களை 12 மணி நேரத்திற்கு கைகளிலும், கால்களிலும் விலங்கு போட்டு கட்டி வைப்பார்கள். அதன்பிறகும் இப்படியான தவறுகள் நடக்

சித்ரவதை முகாமில் நிகழும் கொடுமை!!!

Image
பெகாலி, உய்கூரில் வாழும் முஸ்லிமான இவர் சீன அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார், முகாமில் கொடுக்கப்படும் உத்தரவுகளை சரியாக பின்பற்றவில்லை. அதனால் ஐந்து மணி நேரம் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார். இதன் பிறகு இவர் தனிமை சிறைக்கு மாற்றப்படுகிறார்.  அங்கே தூங்கவே முடியாது. நாமே நம்மை அழித்து விடும் அளவுக்கு உளவியல் தாக்குதல் நடத்தப்படும் என்கிறார். முகாம்களில் இஸ்லாத்தின் ஆபத்துக்கள் என்ற தலைப்பில் நான்கு மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படும். அந்த வகுப்பின் முடிவில் கேள்விகள் கேட்கப்படும் சரியாக பதில் சொல்லாதவர்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.  மொத்தம் 50 பேருக்கு ஒரு வகுப்பு என்று நடத்தப்படும். இதில் முகாமில் உள்ள அனைவரும் கலந்து கொள்வார்கள். வகுப்பு முடிந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் எப்படி இருக்குமானால்.. நீங்கள் சீன அரசின் சட்டத்திற்கு கீழ்படிவீர்களா? அல்லது ஷரியா சட்டத்திற்கா?, மதம் ஏன் ஆபத்தானது என்று புரிந்து கொண்டீர்களா?... என்ற கேள்விகள் கேட்கப்படும்.  இதற்கு தகுந்தாற்போல் பதில் கூறுபவர்கள் இந்த முகாமை விட மேலான இன்னொ

சிறையில் அடைக்கப்படும் முஸ்லிம் பெண்மணிகள்!!!

Image
முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஒரு உய்கூர் முஸ்லிம் பெண்மணி சொல்கிறார், எங்களுக்கு பாடம் எடுப்பார்கள். அப்படி எடுக்கும் போது உய்கூர் பெண்கள் வரலாற்றில் எப்போதும் உள்ளாடை அணிந்ததில்லை. ஒவ்வொருவரும் எக்கச்சக்க ஆண்களுடம் சுகம் அனுபவிப்பவர்களாக் இருந்தனர் என்று சொல்லிக்கொடுப்பார்கள்.  அப்போது கத்தி எங்கள் இதயங்களில் குத்துவது போல் இருக்கும். இன்னும் அவர்கள் சொல்லிக்கொடுத்த இந்த கதை ஆறாத வடுவாக இருக்கிறது. முகாமில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் நிலை ஆண்களுக்கு மட்டுமல்ல இந்த முகாம். இந்த முகாம்களில் பால் தரும் தாய்மார்கள் தொடங்கி 80 வயது முதியவர்கள் வரை அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.  முகாம்களுக்குள் எல்லா பகுதியிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். கழிவறைகள் கூட விதிவிலக்கல்ல அங்கும் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். முகாமில் இருக்கும் பெண்கள் உள்ளாடை அணியக்கூடாது. முகாமில் அடைக்கப்பட்டவுடன் பெண்கள் முடியை மழித்து மொட்டையடிக்கப்படுவார்கள்.  இதற்கு சொல்லப்படும் காரணம் தான் கொடுமையானது, முடியை முழுதாக மழித்தால் தான் மாடர்ன் ஹேர்ஸ்டைல் வரும் என்று இந்த

சீனா வரையறுத்துள்ள தீவிரவாதம்!!!

Image
சீன அரசு, முஸ்லிம்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி அவர்களை நம்பிக்கையிலிருந்து வெளியேற்றி கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் கலாச்சார போரை தீவிரமாக நடத்தி வருகிறது.  இதற்கு முதற்கட்டமாக ஜிங்ஜாங் பகுதியில் உள்ள மெஜாரிட்டியான உய்கூர் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் வேலையை செய்து வருகிறது. தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனக் கூறி அந்த முஸ்லிம்களின் இனத்தையே சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறது. தீவிரவாதத்தை அழிக்கும் நடவடிக்கையாக இந்த நடைமுறை உள்ளது என்றும் உலக நாடுகளிடம் அறிக்கை விடுகிறது. அப்படி உய்கூர் முஸ்லிம்களில் யாரெல்லாம் தீவிரவாத செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு 75 முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களை பட்ட்டியலிட்டு, இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அந்த 75 பழக்க வழக்கங்களில் சில , 1) முனங்கால்களுக்கு மேலே ஆடை அணிவது 2) கால்களை விரித்து வைத்து தொழுவது 3) தொழும் போது நெஞ்சு பகுதிக்கு மேலாக கைகட்டி தொழுவது 4) முடிக்கு மருதாணி தடவிக்கொள்வது 5) நீளமாக தாடி வளர்ப்பது 6) நீளமான உ