Posts

Showing posts from August, 2019

இமாம் மஹ்தி (அலை) – பாகம் 1

இமாம் மஹ்தி (அலை) – பாகம் 1 ============================== . “மஹ்தி” (நேர்வழி பெற்றவர் / எதிர்பார்க்கப் படுபவர்) எனும் பெயரில் அறியப்படும் ஆட்சியாளர் குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ் அறிவிப்புகள் உள்ளதாகச் சொல்லப் படுகிறது. . ஆனால், இதில் 90% இற்கும் அதிகமான அறிவிப்புகள் பலவீனமானவையும் இட்டுக்கட்டப் பட்டவையுமே. . இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட / பலவீனமான செய்திகளுள், தமது மனோ இச்சை விளக்கங்களுக்குத் தோதாக இருக்கும் சில அறிவிப்புகளை மட்டும் ஆதாரம் காட்டுவதன் வாயிலாக இன்று மஹ்தியின் பெயரில் பலரும் மக்களைக் குழப்பி வருவது வழக்கமாகி விட்டது. . இவ்வாறான குழப்பவாதிகளுள் அனேகர் ஷீயா, மற்றும் காதியாணி சார்ந்தோராக இருப்பதே வழமை. . இது போன்ற குழப்பவாதிகளிடம் ஏமாறுவதன் வாயிலாக, விரைவில் வரவிருக்கும் உண்மையான மஹ்திக்குப் பதிலாகக் கண்டவனையெல்லாம் மஹ்தியென்று நம்பி ஓர் அப்பாவி முஸ்லிம் வழிகேட்டில் வீழும் அபாயமும் உள்ளது. . எனவே, குழப்பங்களிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வசதியாக, மஹ்தி குறித்து இறைத்தூதர் (ஸல்) முன்னறிவித்த ஆதாரபூர்வமான செய்திகளின் தொகுப்பை உள்ளடக்கி இ