Posts

Showing posts from December, 2019

மஹ்தி (அலை) ஹதீஸ்...

மஹ்தி காலம் ஹதிஸ்: *மினா சண்டை* 1) அம்ர் இப்னு ஷுஅய்ப் ரஹ் அவர்கள் தன் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்: துல்காயிதாவில்  கோத்திரத்தார்களுக்கு மத்தியில் சண்டை (வாக்குவாதம் சச்சரவு) ஏற்பட்டு வரம்பு மீறுவார்கள் ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் (தாக்கப்பட்டு) கொள்ளையிடப்படுவார்கள். மினாவில் (மல்ஹமா) சீற்றமான போர்  ஏற்படும் அங்கு மக்கள் பலரின் இரத்தம் சிந்தப்படும் எதுவரையெனில் இரத்தம் ஜும்ராத் அல் அக்பா (ஷைத்தானுக்கு கல் எரியப்படும் இடம்) வரை ஓடும். அப்போது அவர்கள் ஒரு மனிதரை தேடி ஓடுவார்கள், அவரை (ஹஜ்ருல் அஸ்வத்) முனைக்கும் மகாமே இப்ராஹிம் இடத்திற்கும் இடையே காண்பார்கள், வழுகட்டாயமாக அவருக்கு ( இந்த உம்மத்தை தலைமையேற்று நடத்த) பையத் செய்வார்கள். (அச்சமயம்) அவரிடம் (மஹ்தியிடம்) கூறப்படும் நீர் பையத் வாங்க மறுத்தால் உம் கழுத்தை வெட்டிவிடுவோம் என்று அப்போது பையத் செய்யும் மக்களின்  எண்ணிக்கை பத்ரு போரில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும் (313). அதன்பின் வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அவரைக் கொண்டு திருப்தி அடைவார்கள் என்று நபி ஸல்  கூறினார்கள். நூல் : நுஅயிம் இப்னு

தற்க்கால இந்தியா...

#தற்கால_இந்தியா முகலாயரிடமிருந்து பிடுங்கி ஹிந்தை ஆட்சிசெய்த கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டல்கள் மக்களின் வெறுப்பை தேடித்தந்தது.  அந்நியர்களை வெளியேற்றும் முடிவுக்கு இந்தியர்கள் வர, இங்கிலாந்துத் தலைமை புது உத்தி வகுத்து, தனது நேரடி காலனியாதிக்க ஆட்சிமுறையை மறைமுக காலனியாதிக்க வடிவத்துக்கு மாற்றி ஆட்சியை தக்க வைத்தது. இதற்கென நம்பகமான அரசியல்வாதிகளை  காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வாயிலாக வார்த்தெடுத்து, செக்யூலரிஸ்டுகளை மட்டும் அதில் நுழையுமாறு சீதோஷண நிலையுண்டாக்கி, உள்ளூர் போராட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தியது. இதுபோக இத்தகு இயக்கங்களின் பார்வைகளில் முந்தைய ஆட்சியாளர்கள் பின்பற்றிய இஸ்லாமிய ஷரீஆவின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும், முஸ்லிம்களின் கவனத்தை ஆட்சியியலிருந்து திசை திருப்பவும் இந்துத்துவ ஆர் எஸ் எஸ்ஸை  இன்னொரு பக்கமாக லண்டன் வளர்த்தது. ஆங்கிலேயரின் டைரக்‌ஷனில் இயங்குகிற இக்கட்சிகள் கணகச்சிதமாக ஹீரோ, வில்லன் மற்றுமுண்டான குணச்சித்திர ரோலில்களில் தேவைக்கேற்ப களமாட, செலிப்ரிடி அந்தஸ்தை அடைய முடியாத உண்மையான போராளிகளும், தலைவர்களும் ஒதுக்கப்பட்டு, ஒரு கட்டத்தில்

முஸ்லிம் உலகும் மதச்சார்பின்மையும் பற்றிய சில குறிப்புகள்.

இப்போது இஸ்லாமிய அடிப்படையிலான அரசியல் விழுப்புணர்வு உம்மத்திடையே அதிகரிக்கின்றது! இந்நிலையில் மதச்சார்பின்மை பற்றிய தீவிர பிரச்சாரமும் அதை நோக்கிய பல்வேறு வகையான அழைப்பும் மறுபக்கம் அதிகரித்துள்ளது. எதிர்கால சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தும் வகையில் முஸ்லிம் உலகின் கல்வி பாடதிட்டத்தின் மீது இதன் திணிப்பும் அதிகரிக்கின்றது. மற்றும் மேற்கின் மீதி விரோதம் கொள்ளக்கூடாது, ஜிஹாதை தூண்டக்கூடாது, யூத தேசத்துடன் (சட்டவிரோத) அமைதி மற்றும் இயல்பு நிலையை கடைபிடிக்க வேண்டும், சகிப்புத்தன்மை, மற்றவரை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் கலப்பு காலாச்சாரத்தை நோக்கி அழைப்பதாக குறிப்பிட்டு அதை மாற்றுவதற்கான தேவை குறித்த சர்வதேச பரிந்துரைகளின் பிரச்சாரங்கள் அதிகரிக்கிறது. இது செப்டம்பர் 11 அன்று நடந்த நிகழ்வுகளை தொடர்ந்து சவூதி அரேபிய பாடதிட்டத்தில் தவ்ஹீது பாடத்தில் ‘அல்-வலாஅ’ மற்றும் அல்-பராஅ’(விசுவாசம் மற்றும் கைவிடுதல்) எனும் தலைப்பை முழுமையாக நீக்கி மாற்றம் ஏற்படுத்தியதை போன்றது! அல்லது மொராக்கோவில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு பின்னர் ஒவ்வொரு பள்ளி புத்தகத்திலிருந்தும் ஜிஹாது எனும் வார்த்தையை அழிக்கும் அளவ