முஸ்லிம் உலகும் மதச்சார்பின்மையும் பற்றிய சில குறிப்புகள்.

இப்போது இஸ்லாமிய அடிப்படையிலான அரசியல் விழுப்புணர்வு உம்மத்திடையே அதிகரிக்கின்றது! இந்நிலையில் மதச்சார்பின்மை பற்றிய தீவிர பிரச்சாரமும் அதை நோக்கிய பல்வேறு வகையான அழைப்பும் மறுபக்கம் அதிகரித்துள்ளது. எதிர்கால சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தும் வகையில் முஸ்லிம் உலகின் கல்வி பாடதிட்டத்தின் மீது இதன் திணிப்பும் அதிகரிக்கின்றது. மற்றும் மேற்கின் மீதி விரோதம் கொள்ளக்கூடாது, ஜிஹாதை தூண்டக்கூடாது, யூத தேசத்துடன் (சட்டவிரோத) அமைதி மற்றும் இயல்பு நிலையை கடைபிடிக்க வேண்டும், சகிப்புத்தன்மை, மற்றவரை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் கலப்பு காலாச்சாரத்தை நோக்கி அழைப்பதாக குறிப்பிட்டு அதை மாற்றுவதற்கான தேவை குறித்த சர்வதேச பரிந்துரைகளின் பிரச்சாரங்கள் அதிகரிக்கிறது.

இது செப்டம்பர் 11 அன்று நடந்த நிகழ்வுகளை தொடர்ந்து சவூதி அரேபிய பாடதிட்டத்தில் தவ்ஹீது பாடத்தில் ‘அல்-வலாஅ’ மற்றும் அல்-பராஅ’(விசுவாசம் மற்றும் கைவிடுதல்) எனும் தலைப்பை முழுமையாக நீக்கி மாற்றம் ஏற்படுத்தியதை போன்றது! அல்லது மொராக்கோவில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு பின்னர் ஒவ்வொரு பள்ளி புத்தகத்திலிருந்தும் ஜிஹாது எனும் வார்த்தையை அழிக்கும் அளவுக்கான கோரிக்கைகள் எழுந்ததை போன்றதாகும்!

இவ்வாறான நிலை அமீரகம், குவைத்திற்கும் பொறுந்தும், அங்கு  “அமெரிக்காவிலிருந்து ஒரு மொழிபெயர்ப்பாளர் வருவதற்கு முன் நாம் நமது கல்வி பாடதிட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது ஏனெனில் நாம் முஸ்லிம்களாக இருப்பதனால் மதத்தின் அளவை குறைப்பதினால் எவ்வித தீங்கும் ஏற்படாது” என உரக்கக் கூறப்பட்டது!

பள்ளி பாட புத்தகங்களிலுள்ள சித்திரங்களில் ஆண்களின் தாடி மற்றும் பெண்களின் கிமார் (முகத்திரை) மற்றும் ஆடைகளில் மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு ஜோர்டான் இந்த முயற்சியை கையில் எடுத்தது. அது குர்’ஆன் அல்-கரீமில் எண்ணிக்கை எனும் பாடத்தை ஒரு சிறிய புறா என்று மாற்றியமைத்ததை போன்று சூரா அல்-லைல் பற்றிய முழு பாடத்தையும் நீக்கியது அதை நீச்சல் பற்றிய புதிய பாடத்தை கொண்டு மாற்றியமைத்தது. அதேநேரம், அது சில பாடங்களில் குர்’ஆனுடைய ஆயத்தையும் நபிமொழிகள் சிலவற்றை மனனம் செய்வதை ரத்து செய்தது. மேலும் அது இப்னு பதூதா பற்றிய பாடத்தின் மாதிரியை மாற்றியமைத்தது, அதில் எவ்வாறு அவருடைய குழந்தை பருவத்திலிருந்து குர்’ஆனையும் கவிதையையும் பயின்றார் என்று குறிப்பிட்டுள்ள வாக்கியத்தை நீக்கியது. பாலஸ்தீனத்திலும் இதே நிலை தான் அவர்கள் யஹூதிகளுக்கு எதிராக போரிட வலியுறுத்தும் பல குர்’ஆன் ஆயத்துகளையும் ஜிஹாது மேற்கொள்ளவும் மற்றும் குஃப்பார்களுக்கு எதிராக போரிடுவது குறித்தான நபிமொழிகளையும் நீக்கினர்!

அல்ஜீரியாவை பொறுத்தவரை, கல்வி அமைச்சர் பெங்காபிரிட் ஏற்படுத்திய மாற்றங்கள் பெரும் விவாதத்தை தூண்டியது. பிரஞ்சு மொழி உபயோகிக்கும் திசையை நோக்கி ஆழமாக செல்லும் இவருடைய மந்திரிசபை அரபு ஃபுஸ்’ஹாவுக்கு (பாரம்பரிய) பதிலாக பேச்சுவழக்கு அல்ஜீரிய தெரு மொழியை கொண்டு பள்ளிக்கூட ஆரம்ப நிலைகளில் உபயோகிக்க முன்மொழிந்தது. கூடுதலாக இந்த முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை பிரஞ்சு வல்லுநர்கள் மேற்பார்வையிடுவார்கள் என அமைச்சகத்தின் துறைகள் குறிப்பிடுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் அவர்கள் நடுநிலை பள்ளியின் முதலாம் ஆண்டு புவியியல் பாட புத்தகத்தில் பாலஸ்தீனம் என்பதற்கு பதிலாக ‘இஸ்ரேல்’ என குறிப்பிட்டனர் பின்பு அது பரபரப்பை ஏற்படுத்தியதால் அமைச்சகம் அச்சுப்பிழை ஏற்பட்டதாக கூறி அதை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்தது! துனீசியாவை பொறுத்தவரை, மாணவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டி, இருபாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற அறிவியல் பாடங்களின் பலுவை குறைத்து இசை மற்றும் நாட்டியம் ஆகியவற்றை போதிப்பதற்கு போதுமான வாய்ப்பை வழங்கும் திட்டத்தை சமீபத்தில் கல்வி அமைச்சர் முன்மொழிந்தார். அதேபோல், வெட்க உணர்வை மீறும் சித்திரங்களை ஆரம்ப நிலைக்கான பாட புத்தகங்கள் கொண்டிருந்தன அது பெற்றோர்ர்களிடையே ஒரு கோப அலையை ஏற்படுத்தியது.

அரபு நாடுகளில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை ஆய்வு செய்யும் ஒருவர், “கல்வி சீர்திருத்தம்” எனும் செயல்முறையின் நோக்கமானது அவர்கள் கூறியது போன்று பாடதிட்டத்தை மெருகேற்றுவது மற்றும் மாணவர்களுடைய அறிவுசார் மற்றும் அறிவின் நிலையை மேம்படுத்துவது என்பது கிடையாது என்பதை உணர்வார். மாறாக, அது அடிப்படையில் தீன், மதிப்புகள், வரலாறு மற்றும் ஷரீ’ஆவை குறிவைக்க ஆணையிடும் கருத்தாக்கங்களை அடிப்படையாக வைத்து கட்டமைக்கும் பாடதிட்டங்கள் கொண்டு மாற்றும் செயல்முறையை மட்டுமே குறிக்கின்றது. இஸ்லாமிய அடையாளத்தை முற்றிலுமாக அழிப்பது என்பது இதை தான் குறிக்கின்றது.

(ஒரு விரிவான கட்டுரையின் சுருக்கம்)

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!