உதுமானிய கிலாபா!!!

2. கலீஃபா முஹம்மத் அல் ஃபாதிஹ் அவர்களுக்குப் பின் உதுமானிய கிலாஃபத்  (Ottoman Empire) தனது பாதையில்...!


கலீஃபா முஹம்மத் அல் ஃபாதிஹின் பின் வந்த உஸ்மானிய கலீஃபாக்களில், பின்வருவோர் மிக முக்கியமானவர்களாவர்.
சுல்தான் முதலாம் சலீம்(1512-1520) மம்லூக்கியரையும், பாரசீகத்தின் சபாவி ஷிஆ வம்ச ஆட்சியாளர் ஷா இஸ்மாயிலையும் வெற்றி கொண்டு எகிப்து, சிரியா, பலஸ்தீன், ஹிஜாஸ் போன்ற பகுதிகளையும் தமது ஆட்சியுடன் இனைத்துக் கொண்டார். 

அத்துடன் கடற்படை ஒன்றை உருவாக்கி செங்கடலில் நிலை நிறுத்தினார். உஸ்மானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலமிக்க பேரரசு எனும் நிலையை அது அடைந்தது.
சுல்தான் முதலாம் சுலைமான்(1520-1566) 1521ல் பெல்கிறேட் நகரை கைப்பற்றினார். 

1526ல் வரலாற்று முக்கியத்துவமிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்று இன்றைய ஹங்கேரி(மேற்குப் பகுதி தவிர்ந்த பகுதிகள்) மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பாவின் நிலப்பகுதிகளிலும் உஸ்மானிய ஆட்சி நிறுவினார். இவரது ஆட்சியின் இறுதிப்பகுதியில், பேரரசின் மொத்த ஜனத்தொகை ஏறத்தாழ 15,000,000 மக்கள் மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்து காணப்பட்டனர்.

இவரது சக்திவாய்ந்த கடற்படை மத்தியதரைக்கடலின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. அத்துடன் சுல்தான் முதலாம் சுலைமான் தனது ஆட்சியில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பல்லின மக்கள் வாழ்ந்த பேரரசில் அனைத்து பிரிவினரும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான பல்லின சமூகத்துக்கும் பொருந்தும் வகையில் ஒரு சட்ட யாப்பை உருவாக்கினார். இதனால் இவருக்கு 'சுலைமான் அல் கானூனி' என சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் செனட் சபையில் தொங்கவிடப்பட்டுள்ள சட்டவாக்க அறிஞர்களின் பட்டியலில் இவரது பெயரும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சுல்தான் 2ம் அப்துல் ஹமீத்(கி.பி 1876 - 1909) பிரித்தாணியா, ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து இஸ்லாமிய ஆள்புளத்தை பாதுகாப்பதில் உருதியாக இருந்ததுடன் தனது ஆட்சிக்காலத்தில் பாரிய சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். 

1882 தொடக்கம் 1994 வரை இஸ்தான்பூல், சீனாவின் தலைநகர் பீஜிங் போன்ற வற்றில் பல்கலைக்ககழகங்களை நிறுவினார், 51 இரண்டாம் நிலை பாடசாலைகளை நிறுவினார், முதலவாது நீதி அமைச்சும் சுல்தானின் காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது, டெலிகிராம் என்று அழைக்கப்படும் தந்தி சேவை விஸ்தரிக்கப்பட்டது, ஹிஜாஸ் ரயில்வே திட்டமும் சுல்தானின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

*மதீனா மற்றும் துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூலை இணைப்பதும், ஐரோப்பாவில் இருந்து ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு இலகுவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதும் சுல்தான் அவர்களின் இலக்காக இருந்தது. ஹிஜாஸ் ரயில்வே கட்டமைப்பு 1903ம் ஆண்டு முதல் 1920ம் ஆண்டு வரை இயங்கியது. 

((T. E. Lawrence என்ற பிரித்தானிய உளவாளியின் தலைமயில் இயங்கிய அரபு கொள்ளையன் சவூத் கூட்டு புரட்சிப்படையினர் ரயில்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஹிஜாஸ் ரயில்வே கட்டமைப்பு முழுமையாக சீர்குலைந்தது)* இவ்வாறு
உலகளாவிய முஸ்லிம்களின் ஒரேத்தலைமையாகவும், பாதுக்காப்பு அரணாகவும், கி.பி 1326 முதல் கி.பி 1924 வரை 38 உஸ்மானிய சுல்தான்கள் ஆட்சி செய்தனர்.

-Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!