Posts

Showing posts from May, 2018

ஹிக்மத்! ஓர் பார்வை.

ஹிக்மத்! ஓர் பார்வை. ஹிக்மத் என்ற வார்த்தையை இன்று படித்த முஸ்லிம் முதல் பாமர முஸ்லிம் வரை பாவிக்கின்றனர்! ஆனால் ஹிக்மத் என்றால் என்ன? என்ற விடயத்தில் வஹியின் பார்வையில் ஹிக்மத் என்ற சொல்லுக்கு வழங்கப்பட்டுள்ள அர்த்தம் பற்றி சிலர் புரிந்து மறுக்கின்றனர்! சிலர் புரியாது பயன்படுத்துகின்றனர் என்பதே கசப்பான உண்மையாகும்! ஒரு தேசியத்தின் சிறுபான்மை எல்லைக்குள் வரையறுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் அதிகாரத்திலுள்ள பெரும்பான்மை சமூகத்திடம் தனக்கான வாழும் உரிமையை பெற அவர்கள் அச்சப்படும் அல்லது கேள்விக்குட்படுத்தும் மார்க்க அடையாளங்களை விட்டுக் கொடுத்து அல்லது பெரும்பான்மையை திருப்திபடுத்தும் அளவுக்கு மாற்றங்களுடன் வெளிப்படுத்தும் சரணடைவு அரசியலையும் ஒரு பக்கம் ஹிக்மத் என்ற வார்த்தையை கொண்டு வரைவிலக்கணம் தருகின்றனர்! நகைப்புக்கிடமான இன்னொரு விடயம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களிலும் இஸ்லாத்தை அமுலாக்கம் செய்யும் விடயத்திலும், ஆளும் குப்ரிய மேலாதிக்க உலகை திருப்திப்படுத்தும் வெளிநாட்டு அரசியலிலும் (foreign policy ) உள்நாட்டு அரசியல் வழிமுறைகளிலும்  (Internal Policies) இந்த ஹிக்மத் என்ற நியாய

முதலாளித்துவ முரண்...

ஒரு சிலர் நலனுக்காக ஒட்டு மொத்த உலக மக்களையும் சுரண்டி பிழைக்க உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தமே #முதலாளித்துவம்... அந்த முதலாளித்துவ சித்தாந்தத்தின் கருத்தியல் செயலாக்க #உட்பிரிவே #தேசியவாதம் #மதச்சார்பின்மை #ஜனநாயகம் அதாவது முதலாளித்துவத்தின் உட்பிரிவான ஜனநாயகத்தை அறிந்தோ, அறியாமலோ ஏற்றுக் கொண்டு அதையே செயலாக்க வாழ்வியலாக அமைத்து கொண்டும் நடைமுறை வாழ்வியல் சிக்கல்கல் ஏற்ப்படும் போது ஜனநாயக போராட்டம் நடத்தி தாய் அமைப்பான முதலாளித்துவத்தையே எதிர்ப்பது #முரண்தானே!!! மக்கள் ஏற்றுக் கொண்ட சித்தாந்த அமைப்பையே நாளொரு பொழுதும் வாழ்வியலுக்கான #தீர்வை வழங்காததால் போராட்டம் நடத்தி எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்ப்படும் போது அந்த சித்தாந்தம் தோற்று விட்டதாகதானே அர்த்தம்... ஓட்டு போட்டு முதலாளித்துவ #ஏஜெண்டை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்து விட்டு பிறகு அந்த ஏஜெண்ட் மக்களுக்கு சேவை செய்வான் என கருதுவது முரணின் மொத்த உச்சம்!!! இஸ்லாத்தின் பார்வையில் #அரசு என்பதே மக்கள் சேவை செய்யத்தான். அதனால்தான் இந்தியாவின் தேசப்பிதா #காந்தி கூட இஸ்லாமிய கலிபா #உமர் (ரலி) ஆட்சி இந்தியாவுக்கு வேண்டும் என்றார்...

இப்னு சவுது முதல் சல்மான் வரை!!!

Image
Source:-  https://soundcloud.com/sschannel/s1_ep017_20180523

ஷைத்தானின் கொம்புகள் - சவுதி....

Image
ஷைத்தானின் கொம்புகள் - சவுதி.... புனித கஹ்பாவை சுற்றி அமெரிக்காவின் சல்லாப நகரான லாவேகாசைப் போல், கண்கவர் மாடமாளிகைகளை ,சஹாபிகளின் அடக்கஸ்தலம் களை எல்லாம் அழித்து , அதன் மேல் கட்டி , ஆடம்பரப் பொருட்களைக் குவித்து ஹஜ்ஜாஜிகளை உலக இச்சையின் பால் இடறச் செய்யும் , முதலாளித்துவ சதிகளின் ஒரு ஏஜென்ட் ஆக தொழில் படுபவன்  இந்த , பின் சல்மான் . அநேகமான தீமை பயக்கும் , இஸ்ரேலின் உயிரியல் போரின் ,ஓர் அங்கமாக உள்ள, துரித உணவு ஆயுதம் மூலம், புனித கஹ்பாவை சுற்றியும் ,முழு அரேபியாவிலும் உள்ள ,மெக்டோனல்ட் ,KFC ,PIZZA HUT , உணவு நிருவனம்களின், ஒரு முக்கிய பங்குதாராகவும் இவன் உள்ளமை இங்கு குறிப்பிடத்  தக்கது. மரபணு  மாற்றம் செய்யப் பட்ட , பன்றியின் கொழுப்பை, உருமறைப்புச் செய்து உணவு ஆய்வு கூடம்களில் உருவாக்கப் பட்ட, உணவு வகைகள், ஹலால்  முத்திரை  பதிக்கப்  பட்டு, மேற்படி துரித உணவு நிறுவனம் களில் விற்கப்படுகின்றன , இதன் மூலம் மனிதனின்  ,ஹார்மோன்ஸ் களில் கட்டுக்கடங்காத காம வெறியையும் , ஓரினச் சேர்க்கை மோகத்தையும், உருவாக்குவதில், இஸ்ரேல் வெற்றி அடைந்துள்ளது. பின்நவீன விபசார உலகை நிறுவிட

பயனற்ற மேற்க்கத்திய கல்விமுறை...

கற்றலினால் ஆன பயன்தான் என்ன ??... ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும் போது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. 26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு புலி இளைஞனை கொன்றது. கற்றலினால் ஆன பயன் என்ன? ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக் கொடுக்கவே இல்லையே. ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன் அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்.. கூச்சலிடுகிறார்கள்... அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது. இவை எல்லாமே தவிர்க்கப்பட்டு இருக்கலாம். காரணம். பதட்டத்தில் என்ன செய்வது என்கிற அறிவின்மை. மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்

மத்ஹப் சட்டவியல்...

மத்ஹப் இமாம்களின் மூல விதிகளாகட்டும் அல்லது அத்தகு முஜ்தஹித் அறிஞர்கள் வகுத்த கிளை சட்டங்களாகட்டும் இரண்டுமே மிக துள்ளியமானவை. ஆனால் அவைகளை சிலர் கொச்சைப் படுத்தி கேளி பேசி வருவதை காண்கிறோம். அரபியில் இறங்கிய வஹீயை புரியவோ சட்டமியற்றவோ அடிப்படை சட்டவியல் ஆற்றல் அவசியம். அதாவது இஜ்திஹாத் எனும் ஆய்வில் ஈடுபடுவதற்கு ஆழமான சட்டவியல் திறன் தேவை. வெறும் மொழியாக்கத்தை வைத்துக் கொண்டே சட்டவியலின் அனைத்து எல்லையையும் தொட்டுவிட இயலாது. முஃப்ரத் , முரக்கப் , முகய்யத் , கதயீ , ளன்னீ , ஹகீகி , மஜாஸி , ஆம் , ஹாஸ் , இல்லத் , முதவாதிர் ,  கியாஸ் என  பல பதங்களை உள்ளடக்கித்தான் சட்டவியல் துறை இயங்க முடியும். இது போக அந்தந்த முஜ்தஹிதின் தனித்துவமான உஸூலின் அடிப்படையிலும் ஃபிக்ஹில் வித்யாசம் உண்டாகக்கூடும். அவரவருக்கான புரிதலின் அடிப்படையில் சட்டம் யாக்கப்படுகையில் அதில் வித்யாசமிருக்க தாராளமாக  இடமுண்டு. எனவே ஒருவர் ஒன்றை மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என சொல்லியதை இன்னொருவர் முபாஹ் (ஆகுமானது) என சொல்ல முடியும். இன்னொருவர் வாஜிப் (கடமை) என்றதை வேறொரு முஜ்தஹித் முஸ்தஹப் (விரும்பத்தக்கது) என விளக்கம் தர முட

அரசியல் சிந்தனை வீழ்ச்சி - ஜனநாயக அரசியல்!!!

Image
அரசியல் சிந்தனை வீழ்ச்சி - ஜனநாயக அரசியல்!!! ஒரு நூற்றாண்டு காலமாக முஸ்லிம் லீக் தொடங்கி தற்போதைய எஸ்டிபிஐ உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம் சமூகத்துக்கான விடியலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த முப்பது ஆண்டுகளாக இஸ்லாமிய இயக்கங்களின் எண்ணிக்கை கூடினாலும் சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் எவ்வாறு எகிப்தில் இஹ்வான்கள் தங்களுடைய தேசிய மக்கள் சார்ந்த அரசியலை கையிலெடுத்து இன்னமும் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இன்றளவும் கொடுமைகார அரசிற்கு பலியாக்க கூடிய சூழ்னிலைதானே தவிர அங்கே கூட முஸ்லிம்கள் பாதுகாக்கப்படவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கு எகிப்தின் ஆட்சி கிடைத்தும் கூட தக்க வைக்க இயலவில்லை. இப்படிப்பட்ட ஜனநாயக அரசியல் முஸ்லிம்களுக்கு உலகம் முழுவதிலும் நன்மை பெற்று தரவில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே சகோதரர்கள் ஜனநாயக அரசியலின் பார்வையை விட்டு சற்று கோணத்தை திருப்பினால் மட்டுமே நம்முடைய வெற்றிக்கான வழி என்பது மட்டும் உறுதி. சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமா

ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது?

Image
ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது? கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப் பிறகு நாளடைவில் முஸ்லிம்களின் மனதில் ஒருவித விரக்தி தோன்றியிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையும் சிறிது சிறிதாக வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.  இன்றைய இஸ்லாமிய உலகானது, ஒற்றுமையின்மை, பாதுகாப்பின்மை, வீழ்ச்சி போன்றவற்றில் சிக்கி, ஒரு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. உலக அரங்கில் இந்த நாடுகள் ஒருபொருட்டாக மதிக்கப்படவில்லை.  எதிரிகளின் ஆதிக்கத்தில் கீழடங்கி இரண்டாம்  நிலைநாடுகளாக வீழ்ந்தே கிடக்கின்றன. அதற்கும் ஒருபடி மேலாக அங்கு ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களும் எதிரிகட்கு கீழ்ப்படிந்து, இஸ்லாத்தை ஒதுக்கிவைத்து, அதனை எதிர்த்துப்போராடும் முஸ்லிம்களை கொடுமைக்குள்ளாக்குகின்றனர். இந்தப் பரிதாப நிலையில் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் சில முக்கிய கேள்விகள்எழுவது இயற்கையே. ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது? இஸ்லாமிய நிலங்களை ஆள்வோர் கொடுமைக்காரர்களாக இருக்கின்றனர்.  எந்தவிதவிசாரணையுமின்றி ஆயிரமாயிரம் முஸ்லிம்களை சிறைப்பிடிக்கக் காரணம் என்ன?இத்தகைய ஒடுக்கப்பட்ட சூழ்நிலையிலும் மு

வரலாற்றுச் சுவடுகளில் பாலஸ்தீனப் போராட்டம் ...

Image
வரலாற்றுச் சுவடுகளில் பாலஸ்தீனப் போராட்டம்.... ஒரு குறும் பார்வை பாலஸ்தீன் போராட்டத்தை ஒரு தேச, தேசிய விடுதலை பார்வையோடு பார்க்க முடியாது . யாசிர் அரபாத், அபூஜிஹாத், அபூநிடால், ஜோர்ஜ் ஹப்பாஸ், லைலா காலித் என்பவர்களைத்தான் மனக்கண் முன் நிறுத்தி பாலஸ்தீன் அவதானிக்கப் பட்டதன் தவறு அன்று திருத்தி சொல்லப் படவில்லை !  அல்லது 'இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் ' யூத ஆக்கிரமிப்பு என்பவற்றோடு மட்டும் வரலாற்றை பார்ப்பதும் ஒரு இடைக்கால வரலாற்று சுருக்கம் தான் என்பதும் அன்று உணர்த்தப் படவில்லை. ஆனால் அதற்கும் முன்னாள் சலாகுதீன் ஐயூபி(ரஹ் ),சிலுவைப்போர் எனவும் ,அதற்கும் முன்னாள் கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் தொடர்பு ,மிஹ்ராஜில் குறிப்பிடப்பட்ட ரசூல் (ஸல் ) அவர்களின் பைத்துல் முகத்திஸ் சம்பவம் ,பின் சுலைமான் (அலை ) இப்படி தொடர்ச்சியாக பின்னோக்கி சென்றால் எமக்கெல்லாம் முஸ்லீம் என பெயரிட்ட எம் தந்தையாக உதாரணப் படுத்தப்படும் இப்ராகிம் (அலை ) வரை பாலஸ்தீனின் வரலாறு நீளமானது, ஆழமானது. உண்மை என்னவென்றால் பாலஸ்தீன் பூமி குறிப்பிட்ட ஒரு இன, கோத்திர சார் துண்டங்களாக, தேசங்களா

கிலாபத் அரசாங்கம் மத்ஹப்களை எவ்வாறு கையாளும்...

கிலாபத் அரசாங்கம் மத்ஹப்களை எவ்வாறு கையாளும்:- முஸ்லிம் ஒருவருக்கு இஜ்திஹாத் செய்யும் திறன் இருந்தால் ஷரிஆ ஆதாரங்களில் இருந்து அவர் இறைச் சட்டங்களை சுயமாக எடுத்துக் கொள்கிறார். அத்தகைய திறன் இல்லாதவர்கள் ஒரு முஜ்தஹிதின் மத்ஹப் மூலமாக இறைச்சட்டங்களை எடுத்து கொள்ளும் வகையில் அவரை பின்பற்றுகிறார். எனவே இஸ்லாமிய அகீதாவை தழுவியுள்ள அனைத்து பிரிவுகளும் அனைத்து மத்ஹப்களும் ஷரிஆ சட்டங்களை பின்பற்றுவதால் அவையனைத்தும் இஸ்லாமிய தீனின் அங்கங்களாகவே கருதப்படும். இஸ்லாமிய அகீதாவிலிருந்து விலகிச் செல்லாதவரை இந்த பிரிவுகள் விவகாரத்திலும், மத்ஹப்கள் விவகாரத்திலும் இஸ்லாமிய அரசு தலையிடாது. இவற்றில் ஏதேனும் ஒன்று தனிமனித அளவிலோ அல்லது குழுக்கள் என்ற முறையிலோ இஸ்லாமிய அகீதாவில் இருந்து விலகி செல்லும் பட்சத்தில் இஸ்லாத்தில் இருந்து வெளியேறி விட்டதாக  கருதப்பட்டு முர்தத் சட்டம் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டங்களால் கட்டுப்படுத்தப் படுகிறார்கள். இஸ்லாத்தில் சில சட்டங்கள் தெளிவாகவும்  ஒரே ஒரு அர்த்தம் மட்டும் கொடுக்க கூடியதாக உள்ளன உதாரணமாக தொழுகை நிறைவேற்றுதல்,