அரசியல் சிந்தனை வீழ்ச்சி - ஜனநாயக அரசியல்!!!

அரசியல் சிந்தனை வீழ்ச்சி - ஜனநாயக அரசியல்!!!


ஒரு நூற்றாண்டு காலமாக முஸ்லிம் லீக் தொடங்கி தற்போதைய எஸ்டிபிஐ உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம் சமூகத்துக்கான விடியலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த முப்பது ஆண்டுகளாக இஸ்லாமிய இயக்கங்களின் எண்ணிக்கை கூடினாலும் சமூகத்திற்கெதிரான பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

இதற்கு காரணம் எவ்வாறு எகிப்தில் இஹ்வான்கள் தங்களுடைய தேசிய மக்கள் சார்ந்த அரசியலை கையிலெடுத்து இன்னமும் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இன்றளவும் கொடுமைகார அரசிற்கு பலியாக்க கூடிய சூழ்னிலைதானே தவிர அங்கே கூட முஸ்லிம்கள் பாதுகாக்கப்படவில்லை.

இத்தனைக்கும் அவர்களுக்கு எகிப்தின் ஆட்சி கிடைத்தும் கூட தக்க வைக்க இயலவில்லை. இப்படிப்பட்ட ஜனநாயக அரசியல் முஸ்லிம்களுக்கு உலகம் முழுவதிலும் நன்மை பெற்று தரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
ஆகவே சகோதரர்கள் ஜனநாயக அரசியலின் பார்வையை விட்டு சற்று கோணத்தை திருப்பினால் மட்டுமே நம்முடைய வெற்றிக்கான வழி என்பது மட்டும் உறுதி.

சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானால் விடியல் பிறக்கும் என்றிருந்தால் கேரளா,காஷ்மீர் பிரதேச முஸ்லிம்கள் பிரச்சினை இல்லாமல் இருந்திருப்பார்களே....

பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் ஈராக் போன்ற நாட்டு பாரளுமன்றம் முழுவதும் முஸ்லிம்களின் கட்டுபாட்டில் இருந்தாலும் அந்த பகுதி முஸ்லிம்களின் வாழ்வில் நிம்மதி உள்ளதா???? சிந்தியுங்கள் சகாக்களே.... 

இங்கு பிரச்சினையே வேறு....
உலகில் உள்ள 150 கோடி முஸ்லிம்கள் மற்றும் 750 கோடி உலக மக்கள் பிரச்சினையும் இணைத்து பார்க்காமல் வெறும் 25 கோடி முஸ்லிம்களை குறித்து குறுகிய அளவில் நாம் சிந்திப்பதால்தான் மேற்கத்தியர்களின் வெற்றி அடங்கி இருக்கிறது...

அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் ரஷ்ய அரசியல் விமர்சகர்களின் பார்வை உலகளாவிய அளவில் இருப்பதும் இந்திய,எகிப்திய முஸ்லிம்களின் பார்வை தேசிய அள்வில் இருப்பதும்தான் நம்முடைய வீழ்ச்சிக்கு காரணம்....

உலக அரசியல் பெட்ரோல் வடிவில் நம்முடைய பைக் மற்றும் கார்களையும், சமையல் எரிவாயு வடிவில் அடுப்பங்கரையயும் அரிசி வடிவில் உலக மக்கள் வயிற்றிலும் அடிக்கும் போது கியாமத் நாள் வரை சத்தியத்தை கையில் வாய்த்துக் கொண்டு உலகை காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கான விடியலை நோக்கி சிந்திக்காமல் எவ்வாறு சுய நல அரசியலை கையிலெடுக்க முடியும்????

நமது மீட்சிக்கான ஒரே வழி 57 முஸ்லிம் நாடுகளின் பரப்பும் அதன் ராணுவ வலிமையும் ஒருங்கே பெற்ற கிலாஃபாவை ஏற்படுத்துவதுதான் ….

இதற்கான பணி உலகம் முழுவதிலும் நடைபெற்று பல்வேறு முஸ்லிம் நாடுகளின் மக்கள் மற்றும் அதன் ராணுவத்தின் ஆதரவையும் பெற்று விட்டனர்....
இன்ஷா அல்லாஹ் நம்முடைய ஆதரவையும் வழங்கி அல்லாஹ்வுடைய அருளை பெறுவோமாக....

- Mannai Bava

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!