Posts

Showing posts from February, 2020

ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )!!!

“ Desert Fox எர்வின் ஜோகன்னஸ் யூகன் ரொமெல்." இந்தப்பெயர் பலருக்குத் தெரியாது . இரத்தம் சிந்தும் அரசியலான யுத்தத்தை ஒரு சர்வாதிகாரியின் சுயநலத்துக்காக வெற்றிகளாக குவித்துக் கொடுத்த ஒரு களத் தளபதி . ஹிட்லர் யுகத்தின் கீழ் ஆச்சரியமாக  உறுதி மிக்க யுத்த தர்மம் பேணிய ஒரு வீரன். அவர் தான் ஜெனரல் எர்வின் ரோமல்.   முதல் உலக யுத்தம் 1914இல் தொடங்கியது. அதில் ரொமெல் பிரான்சிலும், ருமானியா நாட்டிலும் யுத்தத்தில் பங்கு பெற்றார். இந்தப் போர்களில் இவர் காட்டிய தீரமும், வேகமும், சாமர்த்தியமும் இவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தது. முதல் யுத்தம் முடிந்த பல ஆண்டுகள் இவர் ராணுவத்தினரை பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தரை வழிப் போரில் இவர் வல்லவராக இருந்ததோடு, அப்படிப்பட்ட போர்  பயிற்சி பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதியிருந்தார். 1930களில் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி வலுப்பெற்று வளர்ந்து வரும் காலத்தில், ஹிட்லர் ரொமெலுடைய புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாம். அதில் மிகவும் மனதைப் பறிகொடுத்த ஹிட்லருக்கு ரொமெலைத் தனக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது    முதல் உலகப் போரில் பங