ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )!!!

“ Desert Fox எர்வின் ஜோகன்னஸ் யூகன் ரொமெல்." இந்தப்பெயர் பலருக்குத் தெரியாது . இரத்தம் சிந்தும் அரசியலான யுத்தத்தை ஒரு சர்வாதிகாரியின் சுயநலத்துக்காக வெற்றிகளாக குவித்துக் கொடுத்த ஒரு களத் தளபதி .

ஹிட்லர் யுகத்தின் கீழ் ஆச்சரியமாக  உறுதி மிக்க யுத்த தர்மம் பேணிய ஒரு வீரன். அவர் தான் ஜெனரல் எர்வின் ரோமல்.   முதல் உலக யுத்தம் 1914இல் தொடங்கியது. அதில் ரொமெல் பிரான்சிலும், ருமானியா நாட்டிலும் யுத்தத்தில் பங்கு பெற்றார்.

இந்தப் போர்களில் இவர் காட்டிய தீரமும், வேகமும், சாமர்த்தியமும் இவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தது. முதல் யுத்தம் முடிந்த பல ஆண்டுகள் இவர் ராணுவத்தினரை பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

தரை வழிப் போரில் இவர் வல்லவராக இருந்ததோடு, அப்படிப்பட்ட போர்  பயிற்சி பற்றிய நூல் ஒன்றையும் இவர் எழுதியிருந்தார். 1930களில் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி வலுப்பெற்று வளர்ந்து வரும் காலத்தில், ஹிட்லர் ரொமெலுடைய புத்தகத்தைப் படிக்க நேர்ந்ததாம்.

அதில் மிகவும் மனதைப் பறிகொடுத்த ஹிட்லருக்கு ரொமெலைத் தனக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது    முதல் உலகப் போரில் பங்கெடுத்துக் கொண்டு வீரப் பதக்கங்களைப் பெற்றவர் ரொமெல். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய நாஜிப் படையெடுப்பின்போது 1940இல் பிரான்ஸ் மீது நடைபெற்ற போரில் இவரது சாகசங்கள் இவரை ஒரு கதா நாயகனாக அறிமுகப்படுத்தியது.

இருந்தாலும் இவருடைய வட ஆப்பிரிக்க பாலைவன நாடுகளில் நடந்த போரின்போது இவரது வீரதீர பராக்கிரமங்கள், இவரது டாங்கிப் படையின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவம் பின்வாங்கி ஓடியது இவற்றால் இவருக்கு "பாலைவன நரி" என்ற பட்டம் கிடைத்தது.

    உலகத்தில் மிகவும் திறமைவாய்ந்த போர்த் தளபதியாக இவர் கருதப் படுகிறார். கடைசியாக இவருக்கு அளிக்கப்பட்ட பணி, ஐரோப்பாவில் பிரான்ஸ் நார்மண்டி கடற்கரையைக் காக்கும் பணிதான். ஆனால் இவரது துரதிருஷ்டம் இவர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு பிரிட்டிஷ் மற்றும் நேச நாடுகளின் படைகள் கடல் கொந்தளிப்பு எதிர்ப்பாக இருந்தபோதும் அதனையும் மீறி நார்மண்டி கடற்கரையில் தரையிறங்கி முன்னேறத் தொடங்கி விட்டனர்.

அதுவே அவரது வரலாறு முற்றுப் பெறவும் காரணமாக அமைந்துவிட்டது.     இந்த தலைசிறந்த போர்த் தளபதிக்கு பெருமை சேர்த்த மற்றொரு விஷயம் என்னவென்றால், ஜெர்மானிய நாஜிப் படைகள் எல்லா போர் முகங்களிலும் போர்க் குற்றங்களை செய்து வந்த போதும், இவருடைய ஆப்பிரிக்கா கோர் எனும் படைப் பிரிவு போர்க்குற்றங்கள் எதையும் செய்யவில்லை.

மாறாக இவரிடம் அகப்பட்ட எதிரிகளின் போர்க்கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டனர். நாஜிப் படையின் தலைமை இவருக்குச் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளையும், யூத வீரர்களையும், மற்ற எதிரி நாட்டு ஜனங்களையும் கொன்று விடும்படி கட்டளையிட்டிருந்தது.

ஆனால் அவர் அப்படி காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளவில்லை.சரி இவர் பற்றிய குறிப்புகள் எமக்கு என்ன ஆச்சரியத்தை தரப்போகிறது!? இன்றுவரை பல வீரத் தளபதிகளை உலகம் கண்டுதான் சென்றுள்ளதே! அங்குதான் விடயமே உள்ளது அது இந்த ஜெனரல் எர்வின் ரோமல் தரைப்போர் பற்றி எழுதிய பயிற்சிப் புத்தகம் பற்றிய தகவலாகும். இதுவரை இராணுவ வியல் பற்றி வெளிவந்த பதிப்புகளில் கிடைக்க அரிதான இந்தப் புத்தகம் நம்பமுடியாத சில உண்மைகளை சொல்லிப் போகின்றது.

கற்ற ஆசானை மறைத்து தனது பெயரை கொடிகட்டி பறக்கவிட நினைக்கும் உலகில் தான் போரியலை கற்ற ஒரு வரலாற்று நாயகன் பற்றி பெருந்தன்மையோடு வாய் திறக்கிறார் இந்த ஜெனரல் எர்வின் ரோமல். அந்த மாவீரன் வேறு யாருமல்ல 'ஸைபுல்லாஹ்'(அல்லாஹ்வின் வாள்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல் )அவர்களால் அழைக்கப்பட்ட காலித் இப்னு வலீத் (ரலி ) அவர்களே!!! 

ஒரு குதிரை யுக வீரனின் யுத்த வியூகங்கள் நவீன' டாங்கி ' யுகம் வரை கைகொடுத்ததை தயங்காமல் ஏற்றுக் கொள்கிறார் ஜெனரல் எர்வின் ரோமல். இன்னும் அவர் இதுபற்றி அவர் சொல்லும் போது எப்போதாவது இராணுவ ரீதியான ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது காலித் இப்னு வலீத்(ரலி) உடைய நகர்வுகளுக்குள் பின் சென்று அதன் வியூக உத்திகளை பிரயோகித்த போது முன்னேற்றம் கிட்டியதாகவும் ஒத்துக் கொள்கிறார்.

பெருந்தன்மை மிக்க இந்த வார்த்தைகள் மூலம் முஸ்லீம்களாகிய எமக்கு பல படிப்பினைகளை முஸ்லிம் அல்லாதவன் சொல்லிப் போகிறான்! யுத்த வெற்றி என்பது வெறுமனே சாதனங்களோடும் தொழில் நுட்பத்தோடும் மட்டும் சம்பந்தமானது அல்ல. அதற்கும் அப்பால் ஆற்றல் மிக்க மனிதர்களின் உத்திகள் பற்றிய வரலாற்றுப் பாடம் மிக முக்கியமானது. வெறும் மனிதப் புனிதர்களாக சஹாபாக்களை பேச்சிலும் எழுத்திலும் பார்க்கும் தவறை முஸ்லீம் அல்லாதவன் உணர்த்திவிட்டுப் போகிறான்.

அரசியல், இராணுவ,பொருளியல் ரீதியில் நவீனம் எதிர்பார்க்கும் பல சூட்சுமங்கள் இஸ்லாத்தில் இருந்து இஸ்லாத்துக்காகவே வாழ்ந்த எம் முன்னோர்களிடம் இருக்கிறது. தேடல் மூலம் அதனை பிரயோக தரத்தில் வடிவமைத்துக் கொடுக்கும் பணியில் முஸ்லீம்களாகிய நாமில்லை!? வெட்டியாக எம்மக்குள் சில உசூல் விடயங்களில் அவர்களை வைத்து சண்டை பிடிப்பது தவிர.

அபூ அக்ஸா

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!