Posts

Showing posts from October, 2018

இந்திய சுதந்திர போராட்டமும் உலமாக்களும்...

இஸ்லாமிய கல்வி என்பது வெறும் தொழுகை, ஓதுதல், சட்ட திட்டங்களை வகுத்தல் என்பதோடு இன்று முடிந்துவிட்டது, ஆனால் அது கடந்த காலங்களில் செய்த அசாத்திய புரட்சி பற்றி பெரும்பாலானோருக்கு எந்த சிந்தனையுமில்லை. இன்று உலமாக்கள் என்றால் சமூகத்தில் இஸ்லாமிய சட்ட மற்றும் மார்க்க ஆலோசகர் என்ற அளவில் அவர்களை பற்றிய பார்வை சுருங்கிவிட்டது, இது எதேச்சையாக நடந்ததா இல்லை சிறுவட்டத்திற்குள் உலமாக்கள் தங்களை தாங்களே அடைத்துக் கொண்டார்களா? அது பெரும் விவாதம். நாம் அதற்குள் இப்போது செல்ல வேண்டாம். மதரஸாக்கள் ஆற்றிய சமூக அரசியல், தியாகம் இவை தலைமுறைகளை சென்றடையவேண்டும்.. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவில் பெரும் நெருக்கடி கொடுத்து வந்தவர்கள் முஸ்லிம் உலமா பெருமக்கள்,. அவர்களின் ஊடாக சமூகத்தில் பரவிவந்த சுதந்திர வேட்கையை எதிர்கொள்ள முடியாமல் அவர்களையும், அவர்களின் ஆன்ம பலமாக விளங்கிய திருக்குர்ஆனையும் பிரித்தானிய அரசு அழிக்க நினைத்தது.. 1861 ஆம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு ஒரு ராணுவ ஆணை பிறப்பிக்கிறது, அது 3,00,000 திருக்குர் ஆன் பிரதிகளை எரிக்க வேண்டும்.. உலமாக

அரசியல் அகீதாவும் ஆன்மீக அகீதாவும். (01)

மறுமையின் விடயங்களை கற்பதன் அடிப்படை அம்சமாக அகீதாவின் ஆன்மீகம் தொடர்பான பகுதி அமைகின்றது. அதேபோல லௌகீக விடயங்களை கற்பதன் அடிப்படையாக அகீதாவின் அரசியல் பரிமாணம் அமைகின்றது. ஒவ்வொரு விடயம் தொடர்பான சிந்தனையும் அடிப்படை அகீதாவிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. அந்த சிந்தனையிலிருந்து மேலும் பல உப சிந்தனைகள் தோற்றம் பெருகின்றன. அந்த சிந்தனை மறுமை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் ஆன்மீகப்பகுதியிலிருந்தே எழுகின்றது. மாறாக அந்த சிந்தனை இவ்வுலக வாழ்க்கை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் அரசியற்பகுதியிலிருந்து எழுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறுதிதீர்ப்புநாள் விவகாரங்கள், நற்கூலி வழங்குதல், தண்டனை வழங்குதல், வணக்க வழிபாடுகள்; அல்லது இவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களான மறுமை நாளின் விபரீதங்கள், அல்லாஹ்வின் தண்டனை குறித்த எச்சரிக்கைகள், அல்லாஹ்வின் வெகுமதியை பற்றிய சுபசோபனங்கள் போன்ற விடயங்கள் அகீதா எமக்கு எடுத்தியம்பும் ஆன்மீகம் தொடர்பான பகுதியாகும். அதே நேரத்தில் மனிதனின் இவ்வுலக விவகாரங்களுடன் தொடர்புடையதாக ஒரு சிந்தனையோ, சட்டமோ அமையுமானால் அது அகீதாவின் அரசியல் தொடர்பான வழிக