அரசியல் அகீதாவும் ஆன்மீக அகீதாவும். (01)

மறுமையின் விடயங்களை கற்பதன் அடிப்படை அம்சமாக அகீதாவின் ஆன்மீகம் தொடர்பான பகுதி அமைகின்றது. அதேபோல லௌகீக விடயங்களை கற்பதன் அடிப்படையாக அகீதாவின் அரசியல் பரிமாணம் அமைகின்றது. ஒவ்வொரு விடயம் தொடர்பான சிந்தனையும் அடிப்படை அகீதாவிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. அந்த சிந்தனையிலிருந்து மேலும் பல உப சிந்தனைகள் தோற்றம் பெருகின்றன.

அந்த சிந்தனை மறுமை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் ஆன்மீகப்பகுதியிலிருந்தே எழுகின்றது. மாறாக அந்த சிந்தனை இவ்வுலக வாழ்க்கை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் அரசியற்பகுதியிலிருந்து எழுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இறுதிதீர்ப்புநாள் விவகாரங்கள், நற்கூலி வழங்குதல், தண்டனை வழங்குதல், வணக்க வழிபாடுகள்; அல்லது இவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களான மறுமை நாளின் விபரீதங்கள், அல்லாஹ்வின் தண்டனை குறித்த எச்சரிக்கைகள், அல்லாஹ்வின் வெகுமதியை பற்றிய சுபசோபனங்கள் போன்ற விடயங்கள் அகீதா எமக்கு எடுத்தியம்பும் ஆன்மீகம் தொடர்பான பகுதியாகும்.

அதே நேரத்தில் மனிதனின் இவ்வுலக விவகாரங்களுடன் தொடர்புடையதாக ஒரு சிந்தனையோ, சட்டமோ அமையுமானால் அது அகீதாவின் அரசியல் தொடர்பான வழிகாட்டலாகும். அதாவது இறை சட்டங்கள், நன்மை, தீமை என்ற வழிகாட்டல்கள், வியாபரம், பங்குடமை, வாடகை, திருமணம், வாரிசுரிமை, உம்மத்திற்காக அமீர் ஒருவரை நியமித்தல், அவருக்கு கட்டுப்படுதல், அவர் நேர்வழியில் ஆட்சி செய்ய உதவுதல், நீதி தொடர்பான சட்டங்கள், ஜிஹாத் போன்ற அனைத்து விடயங்களும் இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.
(தொடரும்.....)

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!