Posts

Showing posts from November, 2018

ஆபாச திரைப்படங்களும் உளவியல் பலவீனப்படுத்தலும்...

சமகால உலகிற்கு  முதலாளித்துவம்  தந்த மிக மோசமான ஒரு உற்பத்தி ஆபாச திரைப்படங்கள். முன்பெல்லாம் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் நுகரப்பட்ட இத்தகைய முழு நீல திரைப்படங்கள் தற்பொழுது ஒவ்வொருவர் கையிலும் தவளும் ஸ்மாட் தொலைபேசிகளினூடாக தாராளமாக நுகரப்படும் நிலை உருவாகியிருக்கிறது.  மோசமான போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை கூட ஒரு முறையான சிகிச்சையினூடாக வெளியில் கொண்டு வந்துவிடலாம். ஆனால் இத்தகைய நீல திரைப்பட உலகிற்குள் பிரவேசிப்பவர்கள் அதில் இருந்து மீட்சி அடைவது மிக கடினமான ஒரு விடயமாகும். உலகில் உள்ள அனைத்து சமூகங்களையும் இன, மத, நிற பேதங்கள் இன்றி விழுங்கிக்கொண்டிருக்கும் இந்த ராட்சத வியாபாரம் வருடாந்தம் 96 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விற்பனையை தன்னகத்தே கொண்டுள்ளதோடு 15 பில்லியன் டொலர்களை சுத்த இலாபமாக உழைக்கின்றது. உலகின் முதல்தர திரைத்துறையான ஹாலிவூட் வருடாந்தம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே இலாபமாக உழைக்கிறது. உலகை ஒரு சொற்பமான மனிதர்கள் ஒரு சிந்தனையை மையப்படுத்தி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க அதிக எண்ணிக்கையிலானவர்களை சிந்திக்க விடாது  உடலியல் ரீதியாக அல்லது உளவிய