ஆபாச திரைப்படங்களும் உளவியல் பலவீனப்படுத்தலும்...

சமகால உலகிற்கு  முதலாளித்துவம்  தந்த மிக மோசமான ஒரு உற்பத்தி ஆபாச திரைப்படங்கள். முன்பெல்லாம் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் நுகரப்பட்ட இத்தகைய முழு நீல திரைப்படங்கள் தற்பொழுது ஒவ்வொருவர் கையிலும் தவளும் ஸ்மாட் தொலைபேசிகளினூடாக தாராளமாக நுகரப்படும் நிலை உருவாகியிருக்கிறது. 

மோசமான போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை கூட ஒரு முறையான சிகிச்சையினூடாக வெளியில் கொண்டு வந்துவிடலாம். ஆனால் இத்தகைய நீல திரைப்பட உலகிற்குள் பிரவேசிப்பவர்கள் அதில் இருந்து மீட்சி அடைவது மிக கடினமான ஒரு விடயமாகும். உலகில் உள்ள அனைத்து சமூகங்களையும் இன, மத, நிற பேதங்கள் இன்றி விழுங்கிக்கொண்டிருக்கும் இந்த ராட்சத வியாபாரம் வருடாந்தம் 96 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விற்பனையை தன்னகத்தே கொண்டுள்ளதோடு 15 பில்லியன் டொலர்களை சுத்த இலாபமாக உழைக்கின்றது. உலகின் முதல்தர திரைத்துறையான ஹாலிவூட் வருடாந்தம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே இலாபமாக உழைக்கிறது.

உலகை ஒரு சொற்பமான மனிதர்கள் ஒரு சிந்தனையை மையப்படுத்தி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க அதிக எண்ணிக்கையிலானவர்களை சிந்திக்க விடாது  உடலியல் ரீதியாக அல்லது உளவியல் ரீதியாக பலவீனமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது. மனிதர்களை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி இலட்சியங்களை நோக்கி செல்லவிடாது வெருமனே தங்களுடைய உற்பத்திகளை நுகரும் பிண்டங்களாக வைத்திருப்பதற்காக படைக்கப்பட்டிருக்கும் சென்ற நூற்றாண்டின் வரலாற்று அசிங்கமே ஆபாச திரைப்படங்கள்.

ஆபாச திரையுலகிற்குள் பிரவேசிக்கும் மனிதர்கள் தங்களுடைய வாழ்வியல் இலட்சியங்களை அடைய மிக அவசியமான சுய கட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றனர். இயற்கைக்கு புறம்பான மிருகங்களை விடவும் கேவலமான பாலியல் எதிர்பார்ப்புக்களை ஆண்கள்  தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளவும் பெண்களை ஒரு பாலியல் இயந்திரமாக மாத்திரம் நோக்கும் உளப்பாங்கை ஏற்படுத்திக்கொள்ளும் நிலையையும் ஆபாச திரைப்படங்கள் ஏற்படுத்தியிருக்கின்றது. இவற்றுக்கு அடிமையான ஒரு மனிதன் மூன்று துவாரங்களை தன்னகத்தே கொண்ட ஒரு பிண்டமாக பெண்னை நோக்குவானே தவிர தன்னை போலவே ஆற்றல்கள் வழங்கப்பட்டு தன்னோடு இணைந்து சந்ததிகளை பெருக்கி உலகை இயக்க இறைவனால் படைக்கப்பட்ட ஒரு புனிதமான சிருஷ்டிப்புதான் பெண் என்பதை உணர மாட்டான்.

அமெரிக்க ஆபாச திரைத்துறையில் பிரபலமான நடிகைகளை கொண்டு வந்து மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் பேட்டி காணுவதனூடாக அவர்களின் ஆபாசங்களை நாகரீகமையப்படுத்தும் கலாச்சார வங்குரோத்து நிலையும் சமகாலத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது நாகரீக வளர்ச்சியின் தவிர்க்க முடியாத பாகங்களாக இவற்றை உள்வாங்கிக்கொள்வோம் எனும் தொனியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இத்தகைய ஊடக சிறுமைத்தனங்களால் நடிகைகளின் பெயர்களை டைப் செய்து ஆபாச வீடியோக்களை பெற்றுக்கொள்கின்றனர் இளம் தலைமுறையினர்.

ஹாலிவூட், பொலிவூட், கொலிவூட் நாயகிகளின் பெயர்களை உச்சரிப்பதை விடவும் இலகுவாக பொது வெளியில் இத்தகைய நீல நடிகைகளின் பெயர்களை உச்சரித்து பேசும் நிலை உருவாகியருக்கிறது. இவற்றின் பாதிப்புக்களை பற்றி வாய் திறக்க எந்த ஒரு அரசும் ஏன் யாரும் தயார் நிலையில் இல்லை காரணம் இடம்பெரும் மல்டி பில்லியன் வியாபாரத்தில் கடன் அட்டை பயன் பாட்டின் ஊடாக உலகில் உள்ள அனைத்து வங்கிகளும்,  தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இவர்களிடம் பெறுமதி சேர்க்கப்பட்ட மற்றும் புரல்வு வரிகளை வசூலித்துக்கொண்டிருக்கும் அரசுகளும் இவற்றின் பங்குதாரர்கள்.

- Received

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!