Posts

Showing posts from January, 2019

சித்தாந்த அரசியல் போராட்டம்....

ஒரு சமூகம் தான் சார்ந்துள்ள சித்தாந்தம் சார்பில் அரசியல் பேசுவது வன்முறையல்ல. அதுதான் தன் சமூகத்தையும் அதன் அடிப்படைகளையும் பாதுகாக்கும் சுய அடையாளத்திற்கான போராட்டமாகும். எந்த சமூகம் இந்த போராட்டத்தை கைவிட்டு விடுமோ அது தனது சுய அடையாளத்தையும் தனித்துவ நாகரீகத்தையும் இழக்கவோ கலங்கப்படுத்தவோ நேரிடும். மேலும் அவ்வாறான ஒரு சமூகத்தில் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் சுயநல வாதிகளாகவும் சந்தர்ப்ப வாதிகளாகவும் இருப்பர். இவர்கள் அந்த சமூகம் தனது தனித்துவத்தை இழக்க எதிரிகளின் பக்கத்தில் இருந்து நியாயப்படுத்தும் வேலையை செய்வர். அந்த சமூகத்தின் வீரியம் மிக்க இளைஞர் சக்தி இதை எதிர்க்கும் போது அவர்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் கேடுகெட்ட பூச்சாண்டி தனத்தையும் இவர்களே செய்வர். இறுதியில் அந்த இளைஞர்களுக்கு இரண்டு முடிவுகள் எஞ்சியிருக்கும். 1.முதுகெலும்பற்ற நாக்கிலிப் புழுக்களாக ஒதுங்கி வாழ்வது. 2.தனது சமூகத்தையும் சேர்த்து எதிரிகள் துரோகிகளென ஒரு பேரழிப்பை செய்து இறுதியாக அழிந்து போவது. இந்த துரதிஷ்டமான நிலையிலிருந்து தப்பிக்க சித்தாந்த சிந்தனை சார்ந்த தொடர்ச்சியான ஒரு அரசியல் போராட்

நெருப்பு குண்டத்தில் வீசப்பட்ட பிரிட்டீஸ் கால ஆலிம்கள்!!!

வீரர்களின் மார்க்கத்தில் வந்த தியாகத்தின் விதைகளும் நாமும்! ஆங்கில வரலாற்றாசிரியர் #தாம்ஸன் என்பவர் குறிப்பிடுகிறார்...(அந்த 1800களில் பிரத்தானிய காலனித்துவ அரசை எதிர்த்த காரணத்திற்காக) டெல்லி பெஷாவர் பிரதான சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்களில் ஆலிம்களின் சடலங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன! மஸ்ஜிதுகளுக்குள்ளேயே பல ஆலிம்கள் தூக்கிலிடப் பட்டிருந்தனர். இன்னும் கூறுகிறார் "நான் டெல்லியில் ஒரு கேம்பில் தங்கியிருந்தேன். அங்கு மனித உடல் எறிக்கப்படும் வாடை எனக்கு வந்தது. வெளியில் வந்து பார்த்த போது கேம்பிற்கு பின்னால் பிரிட்டிஷ் சிப்பாய்கள் நெருப்புமூட்டி அதில் ஆடையின்றி நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 ஆலிம்களை ஒருவர் பின் ஒருவராக தூக்கிப் போட்டு எரித்துக் கொண்டிருந்தனர். அந்த சுற்று முடிந்த பின் மீண்டும் 40 ஆலிம்கள் அந்த நெருப்புக் குண்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்! ஒரே ஒரு மன்னிப்பு கடிதம் அவர்களுக்கு உயிர்ப் பிச்சை அளித்திருக்கலாம். ஆனால் அநியாயக்கார ஆட்சியின் முன்னால் சத்தியத்தை சொல்லும் உயர்ந்த ஜிஹாதின் மூலம் தம் ரப்புவை சந்திக்க துணிந்தபின் உயிர்கூட இவர்களுக்கு துச்சமாக மா

மத்ஹப்!!!

ஒரு மத்ஹபின் இமாம், வஹீயின் வழிகாட்டுதலின்படி உருவாக்கிக் கொண்ட ஒரு தனித்துவமான மூல ஃபார்முலா (எனும் உஸூலின்) விதிக்குட்பட்டு குறிப்பிட்டதொரு கோணத்தில், அல்குர்ஆன் மற்றும் சுன்னாவை ஆய்வுக்குட்படுத்தி, ஏதேனும் ஒரு மஸாயிலுக்கான சட்டத்தை அதிலிருந்து யாத்துத் தருவதையே இஜ்திஹாத் என்போம். அந்த ஆய்வின் முடிவுகளையெல்லாம் குறித்த அந்த மத்ஹபின் ஃபிக்ஹ் சட்டங்கள் எனவும் சொல்ல முடியும். அதாவது ஏதேனும் ஒரு மஸாயிலில், அல்லாஹ்வின் கட்டளை எதுவென இந்த அறிஞர் இஸ்தின்பாத் செய்கிறார். சுயமாக எக்கருத்தையும் அவ்விதிகளில் அவர் நுழைக்க அனுமதி இல்லை.  அப்படி எவரேனும்  தமது கருத்தை நுழைக்கும் பட்சத்தில் அவர் ஈமானை இழந்தவராக கணிக்கப்படுவார்.  (எனவே தாம் அல்ஹாக்கிம் எனும் தலைப்பிட்டதொரு பாடத்தையும் தத்தமது ஃபிக்ஹ் நூலில் அனேகமாக முஜ்தஹித்  இமாம்கள் இணைப்பது வழக்கம். 'ஹாக்கிம்-- சட்டமியற்றுபவன்' என்பது, அல்லாஹ்வின் பெயர்/தன்மைகளில் ஒன்று). அல்குர்ஆன் மற்றும் சுன்னா எனும் வஹீயை ஆகச் #சிறந்த_முறையில் எந்த முஜ்திஹிதுடைய உஸூல் கூடுதல் திறனோடு அனுகுவதாக ஒரு சாமானியர் கணிப்பாரோ, அந்த குறிப்பிட்ட முஜ்தஹிதின