சித்தாந்த அரசியல் போராட்டம்....

ஒரு சமூகம் தான் சார்ந்துள்ள சித்தாந்தம் சார்பில் அரசியல் பேசுவது வன்முறையல்ல. அதுதான் தன் சமூகத்தையும் அதன் அடிப்படைகளையும் பாதுகாக்கும் சுய அடையாளத்திற்கான போராட்டமாகும். எந்த சமூகம் இந்த போராட்டத்தை கைவிட்டு விடுமோ அது தனது சுய அடையாளத்தையும் தனித்துவ நாகரீகத்தையும் இழக்கவோ கலங்கப்படுத்தவோ நேரிடும். மேலும் அவ்வாறான ஒரு சமூகத்தில் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் சுயநல வாதிகளாகவும் சந்தர்ப்ப வாதிகளாகவும் இருப்பர். இவர்கள் அந்த சமூகம் தனது தனித்துவத்தை இழக்க எதிரிகளின் பக்கத்தில் இருந்து நியாயப்படுத்தும் வேலையை செய்வர்.

அந்த சமூகத்தின் வீரியம் மிக்க இளைஞர் சக்தி இதை எதிர்க்கும் போது அவர்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் கேடுகெட்ட பூச்சாண்டி தனத்தையும் இவர்களே செய்வர். இறுதியில் அந்த இளைஞர்களுக்கு இரண்டு முடிவுகள் எஞ்சியிருக்கும்.
1.முதுகெலும்பற்ற நாக்கிலிப் புழுக்களாக ஒதுங்கி வாழ்வது.
2.தனது சமூகத்தையும் சேர்த்து எதிரிகள் துரோகிகளென ஒரு பேரழிப்பை செய்து இறுதியாக அழிந்து போவது.

இந்த துரதிஷ்டமான நிலையிலிருந்து தப்பிக்க சித்தாந்த சிந்தனை சார்ந்த தொடர்ச்சியான ஒரு அரசியல் போராட்டம் கட்டாயமானது. போராட்டம் என்றதும் கத்திகளும் துப்பாக்கிகளும் தான் பலருக்கு கண்ணுக்கு முன் வரும். ஆனால் அதைவிடவும் வலிமை மிக்கது தான் சார்ந்த சித்தாந்தத்தை முன்வைத்து போராடும் அரசியல் பிரச்சார போராட்டமாகும். இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் சொல்லி எதிர்காலத்தை மிக துல்லியமாக கணித்து கூறும் தீர்க்க தரிசிகளாக இவ்வாறான அரசியல் வாதிகள் உருவாகவேண்டும் இருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் சுய அடையாளம் பாதுகாக்கப்பட இதுவே மிகவும் பிரதானமான போராட்ட பாதையாகும். இன்னும் இவ்வாறான பார்வை கொண்ட அரசியல்வாதிகள் ஒரு சமூகத்தில் வெளித்தெரிய ஆரம்பித்தால் அந்த சமூகம் தனது தனித்துவத்தை சுய அடையாளத்தை நிலைநாட்ட போராடுகிறது என்றும் அர்த்தம் கொள்ள முடியும்.

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!