Posts

Showing posts from March, 2020

இரசாயன பூச்சிக்கொல்லிகள் மனிதனையும், மண்ணையும் பாதிப்பது எப்படி?

இரசாயன பூச்சிக்கொல்லிகளால் மனிதருக்கு ஏற்படும் நோய்கள் குறித்த அபாயத்தை விளக்கும் இந்த பதிவு, எந்தெந்த விதங்களிலெல்லாம் இரசாயன நஞ்சு நம்மை வந்தடைகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது! இரசாயன பூச்சிக்கொல்லிகளால் மனிதருக்கு ஏற்படும் நோய்கள் குறித்த அபாயத்தை விளக்கும் இந்த பதிவு, எந்தெந்த விதங்களிலெல்லாம் இரசாயன நஞ்சு நம்மை வந்தடைகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது! பூச்சிக்கொல்லிகளை பூச்சிக்கு மட்டும் அடிப்பதில்லை பயிருக்கும் சேர்த்தே அடிக்கிறோம். கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகம், பல வகைகளில் நம் உடலில் சேரும் இப்பூச்சிக்கொல்லி விஷம், மனித உடலை கொல்லக் கூடிய அளவில் இல்லை என்றாலும், இது மரணத்தை ஏற்படுத்தாமல் கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது. படிப்படியாக உடலில் சேர்ந்து உள் உறுப்புகளை பாதித்து நம்மை நிரந்தர நோயாளியாக்குகிறது. *எண்டோசல்பான் என்ற எமன்* *இராசயன பூச்சிக்கொல்லிகள்* *மனிதனையும், மண்ணையும் பாதிப்பது எப்படி?* கேரளாவில் காசர்கோடு மற்றும் சில பகுதிகளில் 4696 ஹெக்டேரில் கேரள அரசாங்கத்துக்குச் சொந்தமான முந்திரித் தோப்புகளில் 1976 முதல் 2001 வரை ஹெல