நெருப்பு குண்டத்தில் வீசப்பட்ட பிரிட்டீஸ் கால ஆலிம்கள்!!!

வீரர்களின் மார்க்கத்தில் வந்த தியாகத்தின் விதைகளும் நாமும்!

ஆங்கில வரலாற்றாசிரியர் #தாம்ஸன் என்பவர் குறிப்பிடுகிறார்...(அந்த 1800களில் பிரத்தானிய காலனித்துவ அரசை எதிர்த்த காரணத்திற்காக) டெல்லி பெஷாவர் பிரதான சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்களில் ஆலிம்களின் சடலங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன! மஸ்ஜிதுகளுக்குள்ளேயே பல ஆலிம்கள் தூக்கிலிடப் பட்டிருந்தனர்.

இன்னும் கூறுகிறார் "நான் டெல்லியில் ஒரு கேம்பில் தங்கியிருந்தேன். அங்கு மனித உடல் எறிக்கப்படும் வாடை எனக்கு வந்தது. வெளியில் வந்து பார்த்த போது கேம்பிற்கு பின்னால் பிரிட்டிஷ் சிப்பாய்கள் நெருப்புமூட்டி அதில் ஆடையின்றி நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 ஆலிம்களை ஒருவர் பின் ஒருவராக தூக்கிப் போட்டு எரித்துக் கொண்டிருந்தனர். அந்த சுற்று முடிந்த பின் மீண்டும் 40 ஆலிம்கள் அந்த நெருப்புக் குண்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்!

ஒரே ஒரு மன்னிப்பு கடிதம் அவர்களுக்கு உயிர்ப் பிச்சை அளித்திருக்கலாம். ஆனால் அநியாயக்கார ஆட்சியின் முன்னால் சத்தியத்தை சொல்லும் உயர்ந்த ஜிஹாதின் மூலம் தம் ரப்புவை சந்திக்க துணிந்தபின் உயிர்கூட இவர்களுக்கு துச்சமாக மாறியது.

இன்று நாம் இந்த நாசகாரிகள் சுதந்திரம் என்ற பெயரில் வீசிப்போன யாப்புகள் என்ற எச்சில் பருக்கைகளை தாம் #த கிரேட் திமோகிரசி என்ற பெயரில் பொருக்கி வாழ நினைக்கிறோம்! இது ஒரு புதுவகை ஆப்பு. சுரண்டிச் சென்றதை ஏஜண்டுகளை வைத்து செய்கிறான்! இதுவா சுதந்திரம்? உங்களை கட்டிப் போட உள் நாட்டில் மத வெறியையும் தேசப் பற்றையும் விதைத்துள்ளான்!

உங்கள் போதை தெளியும் போது பாகிஸ்தானிலிருந்து சுடப்படும் ஒரு தோட்டா மூலம் நீங்கள் தேசிய வாத மட்டைகளாகி விடுவீர்கள். அப்போது அல்லாமா இக்பாலின் #சாரே ஜஹான்கே அச்சா.... என்பதை ஏறி மிதித்தவாறு ரவீந்திரநாத் தாகூரின் ஜன கன மனயை... முனங்கிக் கொண்டிருப்பீர்கள்! #நாமும் இலங்கை காட்டில் இல்லாத ஒரு சிங்கம் பதித்த கொடியின் கீழ் நின்று "நமதலை நினதடி மேல் வைத்தோமே நமதுயிரே தாயே!" என சொல்லிக் கொண்டிருப்போம்.

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!