இந்திய சுதந்திர போராட்டமும் உலமாக்களும்...

இஸ்லாமிய கல்வி என்பது வெறும் தொழுகை, ஓதுதல், சட்ட திட்டங்களை வகுத்தல் என்பதோடு இன்று முடிந்துவிட்டது, ஆனால் அது கடந்த காலங்களில் செய்த அசாத்திய புரட்சி பற்றி பெரும்பாலானோருக்கு எந்த சிந்தனையுமில்லை.

இன்று உலமாக்கள் என்றால் சமூகத்தில் இஸ்லாமிய சட்ட மற்றும் மார்க்க ஆலோசகர் என்ற அளவில் அவர்களை பற்றிய பார்வை சுருங்கிவிட்டது, இது எதேச்சையாக நடந்ததா இல்லை சிறுவட்டத்திற்குள் உலமாக்கள் தங்களை தாங்களே அடைத்துக் கொண்டார்களா? அது பெரும் விவாதம். நாம் அதற்குள் இப்போது செல்ல வேண்டாம்.

மதரஸாக்கள் ஆற்றிய சமூக அரசியல், தியாகம் இவை தலைமுறைகளை சென்றடையவேண்டும்..

பதினெட்டாம்
நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவில் பெரும் நெருக்கடி கொடுத்து வந்தவர்கள் முஸ்லிம்
உலமா பெருமக்கள்,.

அவர்களின் ஊடாக சமூகத்தில் பரவிவந்த சுதந்திர வேட்கையை எதிர்கொள்ள முடியாமல் அவர்களையும், அவர்களின் ஆன்ம பலமாக விளங்கிய திருக்குர்ஆனையும் பிரித்தானிய அரசு அழிக்க நினைத்தது..

1861 ஆம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு ஒரு ராணுவ ஆணை பிறப்பிக்கிறது,
அது 3,00,000 திருக்குர் ஆன் பிரதிகளை எரிக்க வேண்டும்..
உலமாக்களை அழித்தொழிக்க வேண்டும்..

ஆங்கில வரலாற்று ஆசிரியர் Mr.Thompson தன் சரித்திரக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

"1864 - 1867 ஆகிய இந்த மூன்று வருடங்கள் இந்திய வரலாற்றின் குரூரமான காலகட்டம் என்று பதிவு செய்கிறார், அம்மூன்றாண்டுகளில் ஏறத்தாழ பதினான்காயிரம் உலமாக்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
தில்லி சாந்தினி சௌக்கிலிருந்து கைபர் வரை ஒரு மரம் விடாது அத்துனை மரங்களிலும் உலமாக்களின் சடலங்கள் தொங்கவிடப்பட்டது.

பன்றி தோல்களில் போர்த்தி நெருப்பில் வீசி எரியப்பட்டார்கள். லாகூர் ஷஹி மசூதியின் முற்றத்தில் நாள் ஒன்றுக்கு எட்டு உலமாக்கள் தூக்கிலிடப்பட்டார்கள்,
(பிரத்யேகமாக மற்ற உலமாக்கள் போராட்டங்களை விட்டு பின்வாங்க பிரிட்டிஷ் கையாண்ட உத்தி இது).

லாகூர் ராவி நதியில் சாக்குகளில் மூட்டை கட்டி உள்ளே எரிந்து துப்பாக்கிகளால் மீண்டும் சுடுவார்கள்,.

Thompson மேலும் தன் குறிப்பில் கூறுகிறார்.

"நான் தில்லி முகாமிற்கு சென்றிருந்த பொழுது என் அறைக்கு பின்னே மனித சதைகள் நெருப்பில் எரிந்ததை போன்ற துர்நாற்றத்தை உணர்ந்தேன்.
பின்பு அறைக்கு பின்புறம் சென்ற போது நெருப்பு மூட்டப்பட்டிருந்தது,.
அங்கே நாற்பது
உலமாக்கள் நிர்வாணமாக பிரித்தானிய காவல்துறையால் தயார் நிலையில்  வைக்கப்பட்டிருந்தார்கள், அதேநொடி அடுத்த நாற்பது உலமாக்கள் இழுத்து வரப்பட்டு நிர்வாணப்படுத்தப் பட்டார்கள்.

அவர்களுக்கு நடுவே ஒரு பிரிட்டன் கமாண்டோவின் குரல் இவ்வாறு ஒரு அறிவிப்புச் செய்தது.

" ஓ மௌலவிகளே, இவர்கள் இப்போது எப்படி நெருப்பிற்கு இரையாகப் போகிறார்களோ, அதேபோலத்தான் நீங்களும் இரையாகப் போகின்றீர்கள்.
அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டுமென்றால்,
1857 ஆம் ஆண்டு சுதந்திர கிளர்ச்சியில் நாங்கள் பங்கு கொள்ளவில்லை என்று உங்களில் ஒருவராவது கூறினால் அனைவரையும் விட்டுவிடுகிறோம் " என்பதாக ஒலித்தது.

என்னைப் படைத்த இறைவனின் மீதாணையாக கூறுகிறேன், அங்கிருந்த ஒரு உலமாகூட அதற்கு அடிபணியவில்லை, அவர்களின் மிரட்டலுக்கு பயந்து உயிர்பிச்சை கேட்கவில்லை, அனைவரும் நெருப்பில் எரிந்தார்கள்..

அதன் தொடர்ச்சியாக பிரிட்டனின் உலமாக்கள் வேட்டையின் முடிவாக 1867 ஆம் ஆண்டு ஒரு மதரஸா
கூட இல்லை,.

1601 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வியாபாரம் என்று உள்நுழைகையில் தில்லியில் மட்டுமே ஆயிரகணக்கான மதரஷாக்கள் இருந்தது என்பது வரலாறு..

வரலாறு முழுக்க காட்டிக் கொடுத்தும், கூட்டிக் கொடுத்தும், உயிர்பிச்சை கேட்டும் ஈனவாழ்வு வாழ்ந்து வரும் இந்துத்துவ பாசிச அமைப்புக்களுக்கு இந்த வரலாறுகள் நன்றாகவே தெரியும், அதிகாரத் திமிரில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்,.

அன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் எதிர்கொண்ட புரட்சியை எதிர்காலத்தில் இந்துத்துவ சாம்ராஜ்ஜிய கனவில் நாட்டை துண்டாடும் சங்பரிவார கும்பல் கண்கூட பார்க்கத்தான் போகிறது.

சத்தியம்.////

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!