கிலாபத் அரசாங்கம் மத்ஹப்களை எவ்வாறு கையாளும்...

கிலாபத் அரசாங்கம் மத்ஹப்களை எவ்வாறு கையாளும்:-

முஸ்லிம் ஒருவருக்கு இஜ்திஹாத் செய்யும் திறன் இருந்தால் ஷரிஆ ஆதாரங்களில் இருந்து அவர் இறைச் சட்டங்களை சுயமாக எடுத்துக் கொள்கிறார். அத்தகைய திறன் இல்லாதவர்கள் ஒரு முஜ்தஹிதின் மத்ஹப் மூலமாக இறைச்சட்டங்களை எடுத்து கொள்ளும் வகையில் அவரை பின்பற்றுகிறார். எனவே இஸ்லாமிய அகீதாவை தழுவியுள்ள அனைத்து பிரிவுகளும் அனைத்து மத்ஹப்களும் ஷரிஆ சட்டங்களை பின்பற்றுவதால் அவையனைத்தும் இஸ்லாமிய தீனின் அங்கங்களாகவே கருதப்படும். இஸ்லாமிய அகீதாவிலிருந்து விலகிச் செல்லாதவரை இந்த பிரிவுகள் விவகாரத்திலும், மத்ஹப்கள் விவகாரத்திலும் இஸ்லாமிய அரசு தலையிடாது. இவற்றில் ஏதேனும் ஒன்று தனிமனித அளவிலோ அல்லது குழுக்கள் என்ற முறையிலோ இஸ்லாமிய அகீதாவில் இருந்து விலகி செல்லும் பட்சத்தில் இஸ்லாத்தில் இருந்து வெளியேறி விட்டதாக  கருதப்பட்டு முர்தத் சட்டம் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டங்களால் கட்டுப்படுத்தப் படுகிறார்கள். இஸ்லாத்தில் சில சட்டங்கள் தெளிவாகவும்  ஒரே ஒரு அர்த்தம் மட்டும் கொடுக்க கூடியதாக உள்ளன உதாரணமாக தொழுகை நிறைவேற்றுதல், ஜகாத் கொடுத்தல் போன்றவை கட்டாய கடமை, திட்டவட்டமான சட்டங்கள் (qatai) என்பதில் முஜிதஹித்கள் மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் சில சட்டங்கள் திட்டவட்டமற்ற சட்டங்களாக இருப்பதால் (dhanni) முஜ்தஹித்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. ஒரு குறிப்பிட்ட விவகாரத்தை விளங்கி கொள்வதில் இருந்து மற்ற முஜ்தஹித் வேறுபடுகிறார். உதாரணமாக நிலங்களின் வரிவிதிப்பு, நிலங்களை குத்தகைக்கு விடுதல் இன்னும் இதுபோன்ற பல்வேறு விவகாரங்களில் முஜ்தஹித் மத்தியில் மாறுபாடன கருத்துகள் நிலவுகின்றன. இத்தகைய விவகாரங்களில் கலிஃபா ஏதேனும் ஒரு அபிப்பிராயத்தை ஏற்றுக்கொண்டு சட்டமாக அமல்படுத்துவார். அதன்பின் அனைத்து மக்களும் அதை இறைச்சட்டமாக ஏற்றுக் கொண்டு அதற்க்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இவ்வாறாக இமாம், கலிஃபாவின் தீர்ப்பு அனைத்து வகையான கருத்து வேறுபாடுகளையும் நீக்கிவிடுகிறது. (அல்லாஹ் அக்பர் இமாமின் தீர்ப்பு கருத்து வேறுபாடுகளை நீக்கி உம்மத்தின் ஒற்றுமைக்கும் வழி வகுக்கிறது. கருத்து வேறுபாடுகளால்தான் உம்மத் பிரிந்து கிடக்கிறது) இமாமிற்க்கு கட்டுபடுதல் ஒவ்வொரு குடிமகன் மீதும் வாஜிபாக இருக்கிறது. கலிஃபா ஏற்று அமல்படுத்தும் அபிப்பிராயம் இறைச்சட்டமாக அங்கீகாரம் பெற்றுவிடும்.

- இஸ்லாமிய அரசு என்னும் நூலில் இருந்து.

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!