மத்ஹப் சட்டவியல்...

மத்ஹப் இமாம்களின் மூல விதிகளாகட்டும் அல்லது அத்தகு முஜ்தஹித் அறிஞர்கள் வகுத்த கிளை சட்டங்களாகட்டும் இரண்டுமே மிக துள்ளியமானவை.

ஆனால் அவைகளை சிலர் கொச்சைப் படுத்தி கேளி பேசி வருவதை காண்கிறோம்.

அரபியில் இறங்கிய வஹீயை புரியவோ சட்டமியற்றவோ அடிப்படை சட்டவியல் ஆற்றல் அவசியம். அதாவது இஜ்திஹாத் எனும் ஆய்வில் ஈடுபடுவதற்கு ஆழமான சட்டவியல் திறன் தேவை. வெறும் மொழியாக்கத்தை வைத்துக் கொண்டே சட்டவியலின் அனைத்து எல்லையையும் தொட்டுவிட இயலாது.

முஃப்ரத் , முரக்கப் , முகய்யத் , கதயீ , ளன்னீ , ஹகீகி , மஜாஸி , ஆம் , ஹாஸ் , இல்லத் , முதவாதிர் ,  கியாஸ் என  பல பதங்களை உள்ளடக்கித்தான் சட்டவியல் துறை இயங்க முடியும்.

இது போக அந்தந்த முஜ்தஹிதின் தனித்துவமான உஸூலின் அடிப்படையிலும் ஃபிக்ஹில் வித்யாசம் உண்டாகக்கூடும். அவரவருக்கான புரிதலின் அடிப்படையில் சட்டம் யாக்கப்படுகையில் அதில் வித்யாசமிருக்க தாராளமாக  இடமுண்டு. எனவே ஒருவர் ஒன்றை மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என சொல்லியதை இன்னொருவர் முபாஹ் (ஆகுமானது) என சொல்ல முடியும். இன்னொருவர் வாஜிப் (கடமை) என்றதை வேறொரு முஜ்தஹித் முஸ்தஹப் (விரும்பத்தக்கது) என விளக்கம் தர முடியும்.
இவைகளெல்லாம் பிரிவினையென்றும் , பிரச்சனை என்றும் சித்தரிக்கப்படுவது தான் அபாயகரமான அறியாமையாகும்.

ஸஹாபாக்களிலும் கூட இவ்வாறான கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து அதை நபியவர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட சான்றுகள் பலவும் உண்டு.

ஒரே மஸாயிலுக்கு இரு கருத்துக்கள் இருக்க முடியும் என்பதை பனூகுறைளா கூட்டத்தார் மீது படையெடுத்துச் சென்று செல்லும் வழியிலும் பின்னருமாக அஸரை தோழர்கள்  தொழுத சம்பவம் மிக சிறந்த முன்னுதாரணம்.

எனவே மெத்தப்படித்த தோற்றத்தை வெளிப்படுத்தி எதிர் கருத்தியலாரை வாயடைக்கச் செய்து முற்காலத்திலிருந்தே முஸ்லிம்களிடம் நடைமுறையில் இருந்து வந்த ஆழ்ந்த ஆய்வியல் ஞானத்தை குற்றம் சொல்ல முற்பட்டு பித்அத்தான வழிமுறைகளை பிரஸ்தாபிக்கும் இந்த நவீன சிந்தனாவாத எண்ணப்போக்கு தடுக்கப்பட வேண்டும்.

இமாமின் தலை பெரிதாக இருக்க வேண்டும் பிறப்புறுப்பு சிறிதாக இருக்க வேண்டும் என்கிற அம்சத்தை விமர்சிப்போர் அதன் பின்னிருக்கும் சட்டவியல் ஆதாரத்தை ஒப்புக்கொள்ளாமல்  தமக்கென குர்ஆன் ஹதீஸில் காணப்படாத பெயர்களை சூட்டிக் கொண்டும் பைளா விதிகளை உருவாக்கிக் கொண்டு கூத்தடிப்பது தான் மிக தவறானது.

- Abukka

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!