ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது?

ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது?


கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப் பிறகு நாளடைவில் முஸ்லிம்களின் மனதில் ஒருவித விரக்தி தோன்றியிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையும் சிறிது சிறிதாக வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. 

இன்றைய இஸ்லாமிய உலகானது, ஒற்றுமையின்மை, பாதுகாப்பின்மை, வீழ்ச்சி போன்றவற்றில் சிக்கி, ஒரு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. உலக அரங்கில் இந்த நாடுகள் ஒருபொருட்டாக மதிக்கப்படவில்லை. 

எதிரிகளின் ஆதிக்கத்தில் கீழடங்கி இரண்டாம்  நிலைநாடுகளாக வீழ்ந்தே கிடக்கின்றன. அதற்கும் ஒருபடி மேலாக அங்கு ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களும் எதிரிகட்கு கீழ்ப்படிந்து, இஸ்லாத்தை ஒதுக்கிவைத்து, அதனை எதிர்த்துப்போராடும் முஸ்லிம்களை கொடுமைக்குள்ளாக்குகின்றனர்.

இந்தப் பரிதாப நிலையில் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் சில முக்கிய கேள்விகள்எழுவது இயற்கையே.
ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது?
இஸ்லாமிய நிலங்களை ஆள்வோர் கொடுமைக்காரர்களாக இருக்கின்றனர். 

எந்தவிதவிசாரணையுமின்றி ஆயிரமாயிரம் முஸ்லிம்களை சிறைப்பிடிக்கக் காரணம் என்ன?இத்தகைய ஒடுக்கப்பட்ட சூழ்நிலையிலும் முஸ்லிம் உம்மாவிடையே ஒற்றுமையை காணஇயலவில்லை.

முஸ்லிம் சமுதாயமானது ஒருவித குழப்ப நிலையிலும், வலுவிழந்தும் காணப்படுகிறது. உதாரணமாக, தமது எண்ணை வளம் மூலம் எரிசக்தியையும், அதன்விளைவான பொருளாதார சக்தியையும் உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திற்கும் வழங்குகின்றவளைகுடா நாடுகள், உலக அரங்கில் இரண்டாம்பட்ச நாடுகளாகவே கருதப்படுகின்றன.

கோடிக்கோடியாக வருமானம் வருகின்ற பொழுதும், சிங்கப்பூர், கொரியா போலதொழிற்மயமாக்கப்பட்ட நாடாக ஆகாதது எதனால்? இத்தனை பணமும் எங்கே செல்கிறது? பூமியிலிருந்து கிடைக்கும் வளங்கள் முஸ்லிம் உம்மாவிற்கே சொந்தம் என நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள். 

முஸ்லிம் உம்மாவின் நன்மைக்காகவே அவை செலவிடப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது? ஏழை மக்களின் பசியைப் போக்கவோ, நாட்டைதொழிற்மயமாக்கவோ, ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கவோ, இராணுவ பலத்தை பெருக்கவோஇந்த செல்வம் பயன்படுத்தப்படவில்லை. 

அனைத்திற்கும் வளைகுடா நாடுகள் மேற்குலகிடமேகையேந்துகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முஸ்லிம் மக்கள் மீதுகுண்டுமழை பொழிந்த போதிலும் அந்த நாடுகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, ஒன்றும்செய்ய இயலாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றது. 

முஸ்லிம் நாடுகள் இப்படிஒற்றுமையின்றி பின்தங்கியிருப்பது எதனால்? சூடான் நாட்டின் மக்கள் வளமும், விவசாய சக்தியும், சவூதி அரேபியாவின் பண பலமும்இணைந்து முஸ்லிம் உம்மாவின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு சிறந்தவிவசாயத்துறையை உருவாக்கியிருக்க வேண்டும். 

எகிப்திய தொழிற்துறை அறிவு நேர்த்தியும்,வளைகுடா நாடுகளின் செல்வமும் இணைந்து தொழிற்துறையில் மேற்குலகை மிஞ்சியிருக்க வேண்டும். அங்குள்ள மக்கள் வளத்தால் ஒரு சிறந்த படை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோல எத்தனையோ. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

மார்க்கம், பண்டைய வரலாறு, மொழி, சிந்தனை என எல்லாவற்றிலும் ஒற்றுமை இருந்தும், இந்த முஸ்லிம் உம்மா பிளவுபட்டு நிற்பதேன். எல்லாவற்றையும் சுருக்கி ஒரே வரியில் கூறுவதென்றால்,நபிகளார் மூலம் வழிகாட்டப்பட்ட இந்த இஸ்லாமிய சமுதாயம் இன்று மிகவும் பலவீனமாக இருப்பதேன்? 

முஸ்லிம்களின் பலவீனமான நிலை இயல்பானது அன்று. மேலும் நிச்சயமாக நமதுநிலைக்கு இஸ்லாம் காரணமன்று. மாறாக முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு காரணம், நாம் இஸ்லாத்தை பின்பற்றத் தவறியதேயாகும்.
நாம் ஒவ்வொருவரும் தனிநபராக முஸ்லிமாக இருந்தபோதும், மொத்தத்தில் நமது சமுதாயத்தில் இஸ்லாம் இல்லை.

இன்றைய முஸ்லிம் சமுதாயம் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றவில்லை. வாழ்வின்கொள்கைகள், சட்டதிட்டங்கள், சிந்தனைகள், அனைத்திலும் இஸ்லாம் அல்லாத ஒருகண்ணோட்டமே நிறைந்துள்ளது. இஸ்லாத்திற்கு விசுவாசமன்றி ஜஹிலியாவை (அறியாமை) விசுவாசிக்கிறோம். 

முதலாளித்துவம், மக்களாட்சி, தேசியவாதம், சுயலாபம் போன்றவைமுஸ்லிம்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. அவை முஸ்லிம்களின் மனதிலிருந்து இஸ்லாத்தைதுரத்திவிட்டன. முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் சிந்திப்பதை விட்டும் விலகிமேற்குலகின் கொள்கைகளின் அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

1924ல் கிலாஃபாஅரசு வீழ்ந்த பிறகு இஸ்லாமிய சட்டங்களும் இவ்வுலகை விட்டும் மறைந்துவிட்டன. இறைவன்கட்டளையிட்டுள்ள ஷரீஆ வாழ்வை விட்டும் மறைந்துவிட்டது. இதுவே நமது பலவீனத்திற்கும்,பின்தங்கிய நிலைக்கும் காரணமாயிற்று.

- Mannai Bava

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!