தற்க்கால இந்தியா...

#தற்கால_இந்தியா

முகலாயரிடமிருந்து பிடுங்கி ஹிந்தை ஆட்சிசெய்த கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டல்கள் மக்களின் வெறுப்பை தேடித்தந்தது.  அந்நியர்களை வெளியேற்றும் முடிவுக்கு இந்தியர்கள் வர, இங்கிலாந்துத் தலைமை புது உத்தி வகுத்து, தனது நேரடி காலனியாதிக்க ஆட்சிமுறையை மறைமுக காலனியாதிக்க வடிவத்துக்கு மாற்றி ஆட்சியை தக்க வைத்தது. இதற்கென நம்பகமான அரசியல்வாதிகளை  காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வாயிலாக வார்த்தெடுத்து, செக்யூலரிஸ்டுகளை மட்டும் அதில் நுழையுமாறு சீதோஷண நிலையுண்டாக்கி, உள்ளூர் போராட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தியது.
இதுபோக இத்தகு இயக்கங்களின் பார்வைகளில் முந்தைய ஆட்சியாளர்கள் பின்பற்றிய இஸ்லாமிய ஷரீஆவின் தாக்கத்தை மட்டுப்படுத்தவும், முஸ்லிம்களின் கவனத்தை ஆட்சியியலிருந்து திசை திருப்பவும் இந்துத்துவ ஆர் எஸ் எஸ்ஸை  இன்னொரு பக்கமாக லண்டன் வளர்த்தது.

ஆங்கிலேயரின் டைரக்‌ஷனில் இயங்குகிற இக்கட்சிகள் கணகச்சிதமாக ஹீரோ, வில்லன் மற்றுமுண்டான குணச்சித்திர ரோலில்களில் தேவைக்கேற்ப களமாட, செலிப்ரிடி அந்தஸ்தை அடைய முடியாத உண்மையான போராளிகளும், தலைவர்களும் ஒதுக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவர்களும் இந்த பொதுப்புத்தியோடு  ஐக்கியமாகும் நிபந்தம் உண்டாக்கப்பட்டது. 

இப்படியாக தனக்கெதிராக கட்சிகளும்/இயக்கங்களும், தலைமைகளும் இங்கே உருவானவுடன், அவைகளை மனையிலேற்றி  பிளவுபடுத்த திட்டமிட்டிருந்த  இந்தியாவின் இரு தலைமைகளாக்கி இங்கிலாந்து வெளியேறியது(?). வெள்ளைத் தோல் ஆசாமிகள் வெளியேறிவிட்டாலும் என்றென்றும் தனக்கான அடிமை சேவகம் செய்வதை விட்டும் "ஹிந்தின்" தலைவர்கள் அகலமுடியாத வகையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவங்களையும், அதன் அரசியலமைப்புச் சட்டங்களையும், இன்ன பிற துறைகளையும் கட்டமைத்துவிட்டே அது விலகி நின்றது.

இங்கிலாந்தின் கைப்பாவைகள் நிர்வகித்துவந்த எகிப்து, இராக் உள்ளிட்ட பகுதிகளில் தனக்கான அடிமைகளை நுழைக்கும் காரியத்தில் அமெரிக்கா இரண்டாம் உலகப்போருக்கு பின் தீவிரமாக இறங்கியதைப்போலவே, பனிப்போரில் ரஷ்யா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, புதிய நாடுகள் பலவற்றை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொணர ஆசைப்பட்டது. அதில் பாகிஸ்தானும், ஆஃப்கனும், இந்தியாவும், இலங்கையும், இதர காமன்வெல்த் நாடுகளும் அடக்கம். தற்போது பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கன் போன்ற இஸ்லாமிய நாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தவும், இன்னொரு பக்கம்  சீனாவை எதிர்கொள்ளவும் இந்தியாவை கூர்தீட்டுகிற பணியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.  

மேற்சொன்ன நாடுகள் இங்கிலாந்தின் முன்னாள் காலனியாதிக்க நாடென்பதால் அதற்கேற்ப வியூகம் அமைத்தது புதிய சட்டாம்பிள்ளை அமெரிக்கா. பாகிஸ்தானின் ராணுவ தலைமையை கவர்ந்திழுக்க அனு ஆயுத ஆற்றலுக்கு வழிகாட்டி தன் பக்கம் ஈர்த்துக் கொண்டதுடன் பொருளாதார உதவிகளையும் கடன்களையும் தந்து தன் தீவிர கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வர முயன்றது.   இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுத்தலைவராக லண்டன் இருந்தாலும் அவ்விரு நாடுகளுக்குமிடையே முறுகல் நிலையை செயற்கையாக ஏற்படுத்தி பல நன்மைகளை அடைந்துவந்த இங்கிலாந்து, வெளியார் உதவியோடு பாகிஸ்தான் அடைந்து வரும் இந்த உபரி வளர்ச்சியை வெறுப்போடு சகித்துக்கொண்டது. பிற்காலத்தில் மொத்த பாகிஸ்தானும், அதற்கு நெருக்கமாக இருந்த ஆஃப்கனும் முழுமையாக அமெரிக்கா வசமாகிப்போனது.

இதே போன்றதொரு வியூகத்தோடு நூறு கோடி மக்கட் தொகையுடைய இந்தியாவிற்குள்ளும் அமெரிக்கா நவீன முறையில் படையெடுத்தது. 1990 களின் மத்தியில் கர்நாடகாவின் பெங்களூரை மையமாக்கி விஞ்ஞான புயலை ஏவியது அமெரிக்கா. எனவே, சிலிகான் பள்ளத்தாக்கு என்கிற பெயரில் பெங்களூர் அமெரிக்காவுக்காக தனது  இரவுகளை பகலாக்கியது.  கிளிண்டன் காலத்தில் உலகமயமாக்கல் கொள்கையுடன், டிஜிட்டல் உலகத்தையும் வலுக்கட்டாயமாகவுன் தேன் தடவியும் இந்தியாவுக்குள் திணித்தது அமெரிக்கா.  எனவே இங்கிருந்த மொத்த மனித வளமும் ப்ரொக்ராமிங் அறிவால் உசுப்பேறி இந்தியாவின் களமனைத்தும் அமெரிக்காவின் கை மேலோங்கும் வாய்ப்பு உருவாகியது.

மூன்றாம் தர நாடுகளில் "பதவிகளை" மட்டும் உள்ளூர் ஆசாமிகளிடம் கொடுத்துவிட்டு, மெய்யான அதிகாரம் தன்னிடம் மட்டுமே இருக்கும் வகையில் வடிவமைத்துக்கொள்வது  இங்கிலாந்தின் காலனியாதிக்க ஆட்சியியல் அணுகுமுறை.  இவ்விதிப்படி இங்கே தேர்தலின் மூலம் மேலெழுந்து வரும் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் எப்போதுமே ஆட்சியதிகாரம் சென்றுவிடாமல் பார்த்துக் கொண்டிருந்த இங்கிலாந்துக்கு அமெரிக்க தலையீடென்பது வேப்பங்காய்.
எனினும் எதிரியையும் கூட தனது சுயநலத்துக்க்கு பழக்குகிற அசாத்திய திறனால்  காங்கிரஸின்  B டீம் என அறியப்பட்ட பி.ஜே.பி யை தன் பங்காளி அமெரிக்காவே வளர்த்தெடுக்கட்டுமென ஒதுங்கிக்கொண்டு லண்டன் சற்று ஓய்வெடுத்துக் கொண்டது. 

வலுவான எதிர்கட்சி எதுவுமில்லாமல் இந்திய கைப்பாவைகளான காங்கிரஸ்ஸை  தொடர்ந்து பதவியில் வைத்திருப்பதிலிருக்கும் சிக்கலான நிலையை வளர்ந்து வந்த இந்த B டீம் இலகுவாக்கித் தந்தது. தனது பக்கவாத்திய உதவிகளுக்கென சில பல மீடியாக்களை இங்கே களமிறக்கி, சினிமாக்கள், சீரியல்கள் மூலமாகவும் இன்ன பிறவற்றாலும் உள்ளூர் நாடியை துல்லியமாக அறிந்து காய்கள் பல நகர்த்தி அரியணையில் தனக்கான ஆட்களை ஏற்றிக்கொண்டது சேட்டிலைட் ஜாம்பவானாகிய அமெரிக்கா. எனினும் மெய்யான அதிகாரம் பாராளுமன்றத்திலில்லாததால் துவக்கத்தில் (20ஆம் நூற்றாண்டில்) தடுமாறி பிறகு இந்துத்துவ குதிரை மீதேறி, கட்சிகளைத் தாண்டி வெகுசனத்தின் மனங்களிலும் அமெரிக்கா ஊடுருவியது. அதிலொரு பகுதியாக உயிரற்ற அந்த பி.ஜே.பி சடத்துக்கு E.V.M மூலமாக ஆக்ஸிஜனையும்  ஆத்மாவையும் தாரை வார்த்து பதவியில் உட்கார வைத்து ஒரு சுப முகூர்த்த தினத்தில் இந்தியாவி"லும்" இங்கிலாந்தை (அதாவது காங்கிரஸ்ஸை) ஓரம்கட்டியது அமெரிக்கா.

கஷ்மீருக்கான 370 ஆர்டிகிலும், பாபர் மசூதி தீர்ப்பு உள்ளிட்ட இன்ன பிற அம்சங்களும் குரங்கின் கைகளில் மாட்டிய பூமாலையாக அமெரிக்காவின் இந்திய கைப்பாவைகள் பிய்த்துப்போட்டாலும், தனது பிரிட்டிஷ் கம்பெனிகளின் நலனில் பெரிய ஓட்டை விழாததால் கொஞ்சம் சகித்துகொண்டிருந்தது இங்கிலாந்து. ஆனாலும் ஜிஎஸ்டி, ஒரே ராணுவ தலைமை புதிய உள்நாட்டு சட்ட விதிகள் இன்ன பிறவற்றால் பிரிட்டிஷார் நலனுக்கு இடைஞ்சலேற்பட்டதால் விஷயம் எல்லை மீறாமலிருக்க தற்போதைய குடியுறிமைச் சட்ட மசோதாவிற்கெதிரான போராட்டத்தை இந்தியர்களிடையே தூண்டிவிட்டு, தற்காலிக முட்டுக்கட்டையை லண்டன் போட முயல்கிறது.

கடந்த தசாப்தத்தில் தாவர வித்துக்கள் மூலம் கிடைக்கும் எண்ணெய்வகைகளை மீண்டும் சந்தையில் இயற்கை ஆர்வலர்கள் வாயிலாக பரவலாக்கி,  மஞ்சள் வேம்பு உள்ளிட்ட பயிர்களுக்கான காப்புரிமையை ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு இந்தியாவுக்கு மீட்டு தந்து, ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தேசிய மாடுகளின் தராதரத்தை துக்கிப்பிடித்து, மான்சாண்டோவின் பூச்சி கொல்லிகள், கேரளாவின் எண்டோ சல்ஃபான் எதிர்ப்பு தீர்ப்புக்கள்,  மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களுக்கான எதிர்ப்புகள் ஆகியவற்றின் மூலமும், தென்னிந்திய திராவிட பலத்தை தனக்கான கூட்டாக்கி அமெரிக்க சார் அரசியல் வியூகங்களுக்கு இடைஞ்சலுண்டாக்க இங்கிலாந்து எப்போதும் தயங்கியதேயில்லை.

ப்ரிடிஷின் M16 இன் இந்திய பிரிவான ஐ.பி க்கும் அமெரிக்க CIA வின் இந்திய கிளையான NIA வுக்கும் உரசல் போக்கு முற்றிய போதிலும் இந்திய ஆட்சியியல் கடிவாளத்தை அமெரிக்கா லாவகமாக லவட்டிக் கொண்டது என்பதே உண்மை நிலை.
எனினும் காலாவதியாகிப் போன காலனியாதிக்க அதிகாரத்தைக்கூட முடிந்தளவு காசாக்குகிற ஆசையோடு, கிழட்டு வல்லரசான இங்கிலாந்து  தங்க முட்டையிடும் வாத்தான இந்தியாவை தனது அனைத்து சக்தியையும் பிரயோகித்து காக்கக்கூடும். அல்லது அதன் ஒவ்வொரு பகுதியையும் அவ்வப்போது நல்ல விலைக்கு வெளியாரிடம் விற்கவும் கூடும்.

நடுநடுவே ஹஸாரேக்களும், கெஜ்ரிவால்களும், ஒவைசிக்களும்,  சீமான்களும், பியூஷ்மான்யூஷ்களும்,  மய்யங்களும், திரு/வேல் முருகன்களும், சீசனல் தலைவர்களாக இங்கே ஒரு ரவுண்டு வருகிற சூழல் உண்டாகி, இரு தலைமைகளும் அதன் விளைவுகளை பங்கு போட்டுக் கொள்ளலாம்.

விழித்துக் கொண்டோர் பலியாடாக வாய்ப்பில்லை. ஆனால் கண்ணில்லாதவர்களின் நிலை?

- Abukka

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!