மஹ்தி (அலை) ஹதீஸ்...

மஹ்தி காலம் ஹதிஸ்:
*மினா சண்டை*

1) அம்ர் இப்னு ஷுஅய்ப் ரஹ் அவர்கள் தன் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார்கள்:

துல்காயிதாவில்  கோத்திரத்தார்களுக்கு மத்தியில் சண்டை (வாக்குவாதம் சச்சரவு) ஏற்பட்டு வரம்பு மீறுவார்கள்
ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் (தாக்கப்பட்டு) கொள்ளையிடப்படுவார்கள். மினாவில் (மல்ஹமா) சீற்றமான போர்  ஏற்படும் அங்கு மக்கள் பலரின் இரத்தம் சிந்தப்படும் எதுவரையெனில் இரத்தம் ஜும்ராத் அல் அக்பா (ஷைத்தானுக்கு கல் எரியப்படும் இடம்) வரை ஓடும். அப்போது அவர்கள் ஒரு மனிதரை தேடி ஓடுவார்கள், அவரை (ஹஜ்ருல் அஸ்வத்) முனைக்கும் மகாமே இப்ராஹிம் இடத்திற்கும் இடையே காண்பார்கள், வழுகட்டாயமாக அவருக்கு ( இந்த உம்மத்தை தலைமையேற்று நடத்த) பையத் செய்வார்கள்.

(அச்சமயம்) அவரிடம் (மஹ்தியிடம்) கூறப்படும் நீர் பையத் வாங்க மறுத்தால் உம் கழுத்தை வெட்டிவிடுவோம் என்று
அப்போது பையத் செய்யும் மக்களின்  எண்ணிக்கை பத்ரு போரில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும் (313). அதன்பின் வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அவரைக் கொண்டு திருப்தி அடைவார்கள் என்று நபி ஸல்  கூறினார்கள்.

நூல் : நுஅயிம் இப்னு ஹம்மாத் கிதாப் அல் ஃபிதன்

2) சவ்பான்(ரலி) அறிவிக்கிறார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்கள் கஜானாவிற்காக கலீஃபாவின் மூன்று பிள்ளைகளும் போரிட்டுக் கொள்வார்கள் ஆனால் எவரும் அந்த கஜானாவை அடையமாட்டார்கள் பிறகு கிழக்கில் இருந்து கருப்புகொடிகள் ஏந்திய இராணும் தோன்றும் அவர்கள் எவரும் கொல்லாதவகையில் உங்களை கொன்று விடுவார்கள் அவர்களை நீங்கள் பார்த்து விட்டால் பனியில் தவழ்ந்து சென்றாவது பையத் செய்து விடுங்கள் ஏனெனில் அவர்தான் அல்லாஹ்வின் கலீஃபா மஹ்தி.நூல் இப்னுமாஜா:4084,

பஸ்ஸார்,ஹாகிம் , பைஹகி. இது ஒரு சஹீஹான ஹதீஸ் ஆகும். இமாம் அல்பஸ்ஸார் கூறினார் சவ்பான் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ஸஹீஹான சனது அறிப்பாளர்கள் கொண்டது ஆகும் இதன் காரணமாகவே நாம் இந்த ஹதீஸை தேந்தெடுத்தோம்.இமாம் ஹாகிம் கூறினார் இந்த ஹதீஸ் புகாரி,முஸ்லிமின் ஹதீஸ்கலை சட்டத்தின்படி சஹீஹான ஹதீஸ் ஆகும், இமாம் இப்னு கஸீர் கூறினார் இந்த அறிப்பாளர் பட்டியல் மிகவும் பலமானது ஆகும்.இமாம் அல்குர்துபி தத்கிரா என்னும் கிதாபில் இந்த ஹதீஸை ஸஹீஹ் என குறிப்பீட்டுள்ளார். இமாம் ஹமூத் அத் தவ்ஜீரி இந்த ஹதீஸை ஸஹீஹ் என கூறுகிறார்.

3) ஹஸன்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்களின் கொடி கருப்பாக இருந்தது அந்த கொடிக்கு (உகாப்) வேதனை என பெயர் அழைக்கப்பட்டது. நூல் அபீ ஷைபா: 33604. விளக்கம்

அதாவது  இஸ்லாமிய கொடி கருப்பு கொடி மேலும் குஃப்பார்களின் மீது போர்தொடுப்பதினால் இஸ்லாமிய இராணுவத்தின் தாக்குதல் முஷ்ரிக்கீன்கள் மீது பெரும் வேதனையாக இருக்கும் அதன் காரணமாகவே மக்களால் உகாப் வேதனையின் கொடி என அழைக்கப்பட்டது.

4) ஸஃபீனா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் உம்மத்தில்(எனக்கு பிறகு) கிலாஃபத் முப்பது வருடங்கள் ஆகும் அதன் பிறகு அரசர்கள் ஆட்சி ஏற்படும். ஸஃபீனா(ரலி) கூறினார் அபூபக்கர், உமர்,உதுமான்,அலி ஆகியோரின் கிலாஃபத்தை நாங்கள் கனக்கிட்டோம் அதை முப்பது ஆண்டுகளாக கண்டோம். அறிவிப்பாளர் சயீத் கூரினார் பனூ உமையாக்கள் தங்களுடைய ஆட்சியை கிலாஃபத் என கூறுகின்றனர் என ஸஃபீனா(ரலி)விடம் கூறினேன் அதற்கு இல்லை பனூ ஸர்காவினர் (உமையாக்கள்) பொய்கூறுகின்றனர். அவர்களின் ஆட்சி மோசமான அரசர்கள் ஆட்சி ஆகும் என்றார்.
நூல் திர்மிதி: 2226.

5) ஹஸன் கூறினார் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் நபியின் குடும்பத்தார் பெரும் சோதனைகளை சந்திப்பார்கள் அல்லாஹ் கருப்பு கொடி இராணுவத்தை கிழக்கில் இருந்து அனுப்பும்வரை யார் அந்த கொடிக்கு உதவி செய்தாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்வான் யார் அதனை கைவிடுவாரோ அல்லாஹ் அவரை கைவிட்டு விடுவான் அவர்களில் ஒரு மனிதர் வரும் வரை அவர் பெயர் என் பெயராக இருக்கும் அவர்களின் காரியங்களை அவர் ஏற்றுக் கொள்வார் அல்லாஹ் அவரை உறுதிப்படுத்துவான் அவருக்கு உதவி செய்வான்.
நூல் நயீம் இப்னு ஹம்மாத்:904

 
6) கஃப்(ரலி)  பைத்துல் மக்திஸின் அரசர் இராணுவத்தை இந்தியாவிற்கு அனுப்புவார் அவர்கள் இந்தியாவை வெற்றி கொள்வார்கள். மேலும் இந்தியாவின் மன்னர்களை சங்கிலிகளால் பிணைத்து அரசரிடம் கொண்டுவரப்படுவார்கள். தஜ்ஜால் வெளிப்படும் போது அந்த (இஸ்லாமிய) இராவணுவம் இந்தியாவில் நிலை கொண்டிருக்கும். நூல் நுஅயிம் இப்னு ஹம்மாத்: 1215. இது ஒரு பலவீனமான சங்கிலிதொடர் உள்ள ஹதீஸ் ஆகும்.

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!