சித்ரவதை முகாமில் நிகழும் கொடுமை!!!





பெகாலி, உய்கூரில் வாழும் முஸ்லிமான இவர் சீன அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார், முகாமில் கொடுக்கப்படும் உத்தரவுகளை சரியாக பின்பற்றவில்லை. அதனால் ஐந்து மணி நேரம் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார். இதன் பிறகு இவர் தனிமை சிறைக்கு மாற்றப்படுகிறார். 

அங்கே தூங்கவே முடியாது. நாமே நம்மை அழித்து விடும் அளவுக்கு உளவியல் தாக்குதல் நடத்தப்படும் என்கிறார்.
முகாம்களில் இஸ்லாத்தின் ஆபத்துக்கள் என்ற தலைப்பில் நான்கு மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படும். அந்த வகுப்பின் முடிவில் கேள்விகள் கேட்கப்படும் சரியாக பதில் சொல்லாதவர்கள் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். 

மொத்தம் 50 பேருக்கு ஒரு வகுப்பு என்று நடத்தப்படும். இதில் முகாமில் உள்ள அனைவரும் கலந்து கொள்வார்கள். வகுப்பு முடிந்து கேள்விகள் கேட்கப்படும்.
கேள்விகள் எப்படி இருக்குமானால்.. நீங்கள் சீன அரசின் சட்டத்திற்கு கீழ்படிவீர்களா? அல்லது ஷரியா சட்டத்திற்கா?, மதம் ஏன் ஆபத்தானது என்று புரிந்து கொண்டீர்களா?... என்ற கேள்விகள் கேட்கப்படும். 

இதற்கு தகுந்தாற்போல் பதில் கூறுபவர்கள் இந்த முகாமை விட மேலான இன்னொரு முகாமுக்கு அனுப்பபடுவார்கள். அதற்காகவே ஒவ்வொருவரும் எழுந்து, " எனக்கு குரானை பற்றி ஒன்றும் தெரியாது எங்கள் அப்பா சொல்லிக்கொடுத்தார் ஆனால் அதை படிப்பதில்லை." " இதற்கு முன்னால் ஆபத்து இருக்கிறது என்று தெரியவில்லை இப்போது தெரிந்தது" என்று தன் மத நம்பிக்கையை பற்றி விமர்சித்தால் அவர்கள் விடப்படுவார்கள். 

மாறாக பதில் கூறினால் தண்டிக்கப்படுவார்கள்.
முஸ்லிம்கள் எதை செய்து தரக்கூடியதாக இருந்தாலும் அதற்கு இன்ஷா அல்லாஹ் ( அல்லாஹ் விரும்பினால்) என்று சொல்வார்கள். ஆனால் அப்படி சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டு " கம்யூனிஸ்ட் கட்சி விரும்பினால்" என்று சொல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது சீன அரசு.

ஜிங்ஜாங் டிவி உடைய பத்திரிக்கையாளர் முகாமில் சீனாவின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுக்க அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருக்கும் சூழலை விவரிக்கிறார், இந்த முகாம்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

* முதல் பகுதி, கல்வியறிவில்லாத விவசாயிகள் அதிகமாக இருக்கிறார்கள் அதன் பிறகு சீன மொழி பேசத்தெரியாத குற்றத்திற்காக அடைக்கப்பட்டவர்கள். 

* இரண்டாவது பகுதியில் தங்கள் மொபைல்களில் ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றை வைத்திருந்த குற்றவாளிகள்(?) அடைக்கப்பட்டிருக்கின்றனர். 

* மூன்றாவது பகுதியில் 10முதல் 15 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பத்திரிக்கையாளர் தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு சிறிய அளவில் உதவியதாவும் சொல்கிறார். அதாவது, கல்வியறிவில்லாத விவசாயிகளுக்கு சில வரிகளில் சீன மொழியை கற்று கொடுத்து அதனை மட்டும் எப்போதும் சொல்லச் சொல்லி தண்டனை பெற்று தராமல் பார்த்துக் கொண்டேன். 

அதுபோல் இறைவனை அரபி வார்தை கொண்டு புகழ்வதை ( மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் போன்றவை) சொல்பவர்களை நான் தண்டிக்கவில்லை. ஆனால் மற்ற ஆசிரியர்கள் அனைவரும் இதற்காக சிறுவர்களை தண்டித்தனர்.
ஒவ்வொரு நாளும் நான் உறங்க செல்லும் போதும் மக்களின் அழுகுரல் தான் கேட்டுக்கொண்டே இருக்கும். என் வாழ்க்கையில் மிக மோசமான தருணமென்றால் அது முகாம்களில் கழிந்தது தான் என்று முடிக்கிறார் பத்திரிக்கை நிரூபர்.

- Abu siddiq

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!