கம்யூனிச தேசத்தில் முஸ்லிம்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் இனப்படுகொலை!!!




உலகத்தில் முஸ்லிம் மக்கள் அனைத்து பகுதிகளிலும் கொடுமைகளை சந்தித்து வருபவர்களாக உள்ளனர். இதில் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில், லட்சங்களில்,கோடிகளில் கொல்லப்படுகின்றனர். இந்த பட்டியலில் சீன அரசு, சீனாவில் உள்ள முஸ்லிம்களை கொடூரமான முறையில் அடக்குமுறைக்கு உட்படுத்தி ஓர் இனப்படுகொலையையே அரங்கேற்றி வருகிறது.

ஆனால் இந்த கொடுமைகளை சர்வதேச நீதிமன்றங்கள் மட்டுமல்ல முஸ்லிம் நாடுகள் கூட கண்டுகொள்ளவில்லை.
சீன அரசு, கிட்டத்தட்ட பத்து லட்சம்(தற்போது மூன்று லட்சம் என சில பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன.)  உய்கூர் முஸ்லிம்களை சித்ரவதை முகாமில் அடைத்துள்ளது. 

ஆனால் இந்த சித்ரவதை முகாமிற்கு சீன அரசு வைத்த பெயர் " மறுகல்வி நிலையம்". இங்கே அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கையை விட்டு விடும் படி உளவியல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களையும் அனுபவிக்கின்றனர். முகாமில் இருக்கும் மக்கள் கண்டிப்பாக கம்யூனிஸ சித்தாத்தங்களை படிக்க வேண்டும். சீன தலைவருக்கு விசுவாசமாக நடப்பது எப்படி என்று பாடமும் நடத்தப்படுகிறது.

சீனாவில் தன்னாட்சி உரிமைகளை பெற்ற பகுதிகள் திபெத் மற்றும் ஜிங்ஜியாங் பகுதிகள். இதில் ஜிங்ஜியாங் பகுதியில் தான் தற்போது முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் நடந்து வருகிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருப்பதால் அவர்களை தங்கள் சோதனைகளுக்கு உபயோகப்படுத்தி கொள்கின்றன சீன அரசு.

கடந்த காலங்களில் முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா குவாண்டனாமா சிறையை எப்படி முஸ்லிம்களை துன்புறுத்துவதற்கு பிரத்யேகமாக தயார் செய்ததோ அதே போல் ஒரு சிறையை சீனா தயார் செய்திருக்கிறது. ஆனால் சீனாவில் உள்ள இந்த சிறை முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையையே மாற்றியமைப்பதற்கான முயற்சியாக சொல்லப்படுகிறது. 

கம்யூனிஸ சித்தாந்தத்தை அடக்குமுறை மூலம் அனைவரின் எண்ணத்திற்குள் புகுத்தி முஸ்லிம்களை அவர்களின் நம்பிக்கைகளை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கோடு இந்த நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.

முஸ்லிம்கள் தொழுவதற்கு தடை, மசூதிகள் இடிப்பு, பன்றி கறியை கட்டாயமாக்குவது, மதுவை கட்டாயமாக்குவது, தாடிக்கும் புர்காவுக்கும் தடை என வெளிப்படையாக இஸ்லாத்திற்கு எதிரான போரை தொடங்கியிருக்கிறது சீன அரசு. இதனை " தீவிரவாத அழிப்பு" என்ற முத்திரையுடன் செய்தும் வருகின்றது .

- Abu siddiq

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!