இஸ்லாம் அனைத்திற்க்கும் தீர்வை கொண்ட மார்க்கம்...

இஸ்லாம், முழு பிரபஞ்சத்தையும் படைத்த வல்லமை பொருந்திய இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை வழிமுறை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று அனைத்து படி நிலைகளையும் கொண்டது இஸ்லாம். அனைத்திற்க்கும் தீர்வு கொண்ட மார்க்கம் இஸ்லாம் என ஏற்றுக் கொண்ட நாம் அதை செயல்படுத்துவது கிடையாது.

இஸ்லாம் அனைத்திற்க்கும் தீர்வு கொண்ட மார்க்கம் எனும் போது எவ்வாறு அரசியல் செய்வது அதன் மூலம் எப்படி இஸ்லாத்தை முழுமைப்படுத்துவது என்று இஸ்லாம் கற்று தரவில்லையா??? பின்பு ஏன் ஜனநாயக குப்ரை ஆதரிக்க வேண்டும். இமாம்கள் இஸ்லாம், இஸ்லாம் என மிம்பரில் மணிக்கணக்கில் மூச்சு திணற பேசி விட்டு தேர்தல் சமயத்தில் ஓட்டு போட வரிசையில் நிற்க்கின்றனர் நவுதுபில்லஹ்.

இஸ்லாம் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என வழிமுறையை வழங்கியுள்ளது. அதை இமாம்கள்தான் மக்களுக்கு கற்று தரவில்லை!!! கற்க்கவும் விடவில்லை மாறாக முஸ்லிம் சமுகத்தின் சிந்தனையை அமலிலேயே புதைத்து விட்டார்கள்!!! அமல் செய்வது மட்டும்தான் இஸ்லாமா??? நபி (ஸல்) அமல் மட்டும்தான் செய்தார்களா? அரசியல் செய்யவில்லையா? ஜனநாயகத்தை ஆதரிப்பதன் மூலம் இஸ்லாத்திற்க்கு மாறு செய்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.

ஜனநாயகம் மனிதன் உருவாக்கியது அது இறையாண்மையையும், உரிமையையும் மனிதனுக்கு வழங்குகிறது. கிலாபத் இஸ்லாமிய அகீதாவை கொண்டது அது இறையாண்மையை அல்லாஹ்விற்க்கும் அதை ஏற்று செயல்படுத்த கூடிய உரிமையை மனிதனுக்கு வழங்குகிறது. அல்லாஹ்வின் 99 பண்புகளில் ஆட்சி அதிகாரமும் ஒன்று அப்படிபட்ட அல்லாஹ்விறக்கே உரிய ஆட்சி அதிகாரத்தை நீங்கள் அல்லாஹ்வை மறுக்கும் காபிருக்கு வழங்குகிறீர்கள்.

முஸ்லிம் சமுகத்தை முன்னேற்ற போகிறோம் என்று கூறி முஸ்லிம்கள் அவர்கள் உருவாக்கியுள்ள  ஜனநாயக குப்ரு கட்சியில் மக்களையும் இணைத்து வழிகேட்டிற்க்கு வழி ஏற்ப்படுத்துகின்றனர். நபி (ஸல்) கூறினார்கள் ஒரு காலம் வரும் அப்போது சிலர் இஸ்லாத்தை பற்றி பேசி அதன் பக்கம் உங்களை அழைப்பார்கள் ஆனால் அவர்கள் நரகத்தின் வாசலில் நின்று உங்களை அழைப்பார்கள் என்றார்கள்.

நினைவில் கொள்க, ஜனநாயகம் குப்ரு ஆட்சி முறை! கிலாபத் மட்டுமே இஸ்லாமிய ஆட்சிமுறை! நபி (ஸல்) கூறினார்கள் இஸ்லாத்தில் முதலில் விடுபடுவது இஸ்லாமிய ஆட்சி கடைசியில் விடுபடுவது தொழுகை என்றார்கள். அதன்படி முஸ்லிம்களிடம் இருத்த ஒருங்கிணைந்த ஒற்றை தலைமைத்துவம் கொண்ட இஸ்லாமிய ஆட்சி நீக்கப்பட்டு முஸ்லிம்களை பிளவுபடுத்தி ஹராமான தேசியவாத அரசுகள் உருவாக்கப்பட்டன. கிலாபத் மீண்டும் மீள் உருவாக்கம் பெற வேண்டும் அதுவே மனிதகுல மீட்சிக்கு வழி!

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!