கிலாஃபா குறித்த சில இந்திய உலமாக்களின் கருத்துக்கள்...

கிலாஃபா குறித்த சில இந்திய உலமாக்களின் கருத்துக்கள்...

ஏராளமான உலமாக்களும் பொதுமக்களும் கலந்துகொண்ட 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 5,6 ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற கிலாஃபத்திற்கான ஆதரவு மாநாட்டில் பல்வேறு உலமாக்கள் கலந்து கொண்டு அங்கே பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில கீழ்வருமாறு:-
1. கிலாஃபா தொடர்பில் மக்கள் அபிப்பிராயத்தை ஏற்படுத்த உலமாக்கள் பாடுபட வேண்டும்.
2. கிலாஃபத்திற்கு எதிரான அறிஞர்கள் எனப்படுவோரும், முனாஃபிக்குகளும் புறக்கணிக்கப்படவேண்டும்.
3. கிலாஃபா பற்றி பேசவும் எழுதவும் தங்கள் உயிரை அர்ப்பணிக்குமாறும்இ தம்மை பின்பற்றுபவர்களிடம் உலமாக்கள் வாக்குறுதி வாங்க வேண்டும்.
4. அரசியலமைப்பு ரீதியிலான தேர்தல்களில் இருந்து முஸ்லிம்கள் விலகியிருக்க வேண்டும்.
---------------------------------
டெல்லியில் 1920 நவம்பர் 19, 20 ம் தேதிகளில் இடம்பெற்ற ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தினுடைய அகில இந்திய மாநாட்டில் கிலாஃபத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இயற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து சில வரிகள்:-
“ஆங்கிலேயர்களே முஸ்லிம்களின் பிரதான எதிரிகள், எனவே அவர்களை எதிர்ப்பது ஃபர்ளாகும்.
உம்மத்தையும் கிலாஃபத்தையும் பாதுகாப்பது மிகத்தெளிவான இஸ்லாமிய கடமையாகும்.
எனவே இந்த நாட்டிலுள்ள சகோதரர்கள் இதற்காக உதவிகளையும், ஒத்துழைப்பினையும் வழங்குவார்களேயானால் அதற்காக அவர்கள் நன்றிக்குரியவர்கள்”
------------------------------------------------
ஆங்கிலேயருக்கு எதிராக அழைப்பு விடுத்ததற்காகவும் உஸ்மானிய கிலாஃபத்திற்கு ஆதரவாக அழைப்புவிடுத்ததற்காகவும் 1911 லிருந்து 1915 வரை நான்கு வருடங்கள் சிறையில் கழித்தவரும் கிலாஃபத் இயக்கத்தை நிறுவியர்களில் ஒருவருமான மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் கூறுகிறார்கள்:-
“கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டதால் இந்திய முஸ்லிம்கள் மனதில் என்னன்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது கணிக்க இயலாத ஒன்றாகும்.
அது இஸ்லாத்திற்கும் அதன் நாகரிகத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.
இஸ்லாமிய ஒற்றுமைக்கு அடையாளமாக கருதப்பட்ட மதிப்புமிக்க அமைப்பை தகர்ப்பது இஸ்லாத்தில் பிரிவினையை உண்டாக்கும்.
தனித்துவமிக்க இந்த அமைப்பை தகர்ப்பது புரட்சிக்கும் ஒழுங்கின்மைக்கும் கொண்டு சென்றுவிடுமோ என்று அச்சப்படுகின்றேன்”
(முஹம்மது அலி ஜவ்ஹர் … டைம்ஸ், மார்ச் 4, 1924, துருக்கியில் கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டதற்கு அடுத்த நாள்)
----------------------------------------------
மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1920-ல் எழுதிய மஸ்ல- ஏ -கிலாஃபத் என்னும் நூலில் கூறியிருப்பதாவது:-
“கிலாஃபா இல்லாமல் இஸ்லாத்தின் இருப்பு சாத்தியமில்லை.
இந்திய முஸ்லிம்கள் தங்களுடைய எல்லாவிதமான சக்திகளையும் முயற்சியும் கொண்டு இதற்காக பாடுபடவேண்டும்..
இஸ்லாத்தில் இரண்டு வகை அஹ்காம் ஷரிஆக்கள் இருக்கின்றன.
ஒன்று தனிப்பட்ட, ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய ஃபர்ளுகளும் வாஜிப்களுமாகும்.
மற்றையது நிலங்களின் விரிவாக்கம், அரசியல், பொருளாதார சட்டங்கள் போன்ற தனிமனித தொடர்பில்லாத ஒட்டுமொத்த உம்மத் தொடர்புடைய சட்டங்கள்”
-------------------------------------------------
ஷைகுல் ஹிந்த் மவுலானா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி (ரஹ்) அவர்கள் மால்டா சிறையில் சிறைவாசம் அனுபவித்துவிட்டு 1920 ம் ஆண்டு இந்தியா திரும்பிய காலகட்டத்தில் வெளியிட்ட ஃபத்வா இன்றைய நிலைக்குக்குக்கூட பொருத்தமாக காணப்படுகிறது. அந்த ஃபத்வாவின் சில வரிகள்:-
“இஸ்லாத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்க எதிரிகள் சகல வழிகளையும் கையாண்டு விட்டனர்.  நபி(ஸல்)அவர்கள், ஸஹாபாக்கள் மற்றும்
அதற்குப்பின் வந்தவர்களின் கடுமையான தியாகத்தின் விளைவாக வெற்றி
கொள்ளப்பட்ட ஈராக், பலஸ்தீன், சிரியா போன்ற பிரதேசங்கள் மீண்டும்
எதிரிகளின் இலக்காகியுள்ளன.
கிலாஃபத்தின் மரியாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. பூமியிலுள்ள முஸ்லிம்
உம்மத்தை ஒன்றிணைக்கவேண்டிய, இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டிய,
முஸ்லிம்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டிய அல்லாஹ்வின்
வசனங்களை நிலைநாட்ட வேண்டிய கலீஃபா தற்போது எதிரிகளால் சூழப்பட்டு
ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இஸ்லாத்தின் கொடி
கீழிறங்கி பறக்கிறது.
ஹஸ்ரத் அபூ உபைதா(ரலி), சஅத் பின் அபிவக்காஸ்(ரலி), காலித் பின்
வலீத்(ரலி), அபூஅய்யூப் அல்அன்சாரி(ரலி) போன்றோரின் ஆத்மாக்கள் இன்று
அமைதியடையாமல் உள்ளன. முஸ்லிம்கள் தமது மதிப்பையும்,
கௌரவத்தையும்,சுயமரியாதையும் இழந்தமையே இதற்கு காரணமாகும். வீரமும்,
மார்க்கப்பற்றுமே அவர்களது விருப்பமாகவும் செல்வமாகவும் இருந்தது.
கவனயீனத்தாலும், இலட்சியமின்மையாலும் முஸ்லிம்கள் இதனை
இழந்துவிட்டார்கள்…
இஸ்லாத்தின் புதல்வர்களே! இஸ்லாமிய உலகை எரித்து கிலாஃபத்தை தீயிட்ட
இடியும் நெருப்பும் அரபிகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும்
பெறப்பட்டது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
முஸ்லிம் தேசங்களை கட்டுப்படுத்த கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய
அதிகாரத்தையும் வளத்தையும் உங்களின் கடும் உழைப்பிலிருந்தே
அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
மேற்கத்திய கிறிஸ்தவர்களுடன் ஒன்று சேர்ந்து செயல்படுவதன் விளைவுகளை
அறியாத முட்டாள் முஸ்லீம்கள் யாரும் இருக்கிறார்களா?

- Received

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!