பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு?

பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு?

பசுமைவளங்கள், நீர்வளங்கள், ஆற்றல்வளங்கள் ஆகியமூன்றையும் மக்கள் பங்கிட்டுக்கொள்வார்கள் அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் உப்பளங்கள் போன்ற இயற்கைவளங்கள் நிறைந்த நிலங்களை அளவுக்கு அதிகமாக வைத்திருந்தவர்களிடமிருந்து அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நிலங்களை திரும்பப்பெற்றிருக்கிறார்கள்.
இன்று வளைகுடா நாடுகளில் ஆட்சியாளர்களாக இருக்கும் மனிதர்கள் எண்ணெய்வளம் எரிவாயுவளம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பெரும்பணத்தை தங்கள் சொந்தநலன்களுக்கு வரம்புமீறி பயன்படுத்துவதோடு கோடிக்கணக்கான பணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டுவைத்திருக்கிறார்கள்,
ஆனால் இஸ்லாமியஅரசு இருக்கும்பட்சத்தில் இயற்கைவளங்களிலிருந்து கிடைக்கும் அபரிதமான வருமானத்தை பொதுமக்களின் நலப்பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தும். ஏனெனில் இஸ்லாத்தின் விதிமுறைகள் அவ்வாறுதான் கூறுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்,
இமாம் (இஸ்லாமிய அரசின் கலீபா) மேய்ப்பர் ஆவார் அவரே உங்களுக்குப் பொறுப்பு ஆவார், (நூல்: புஹாரி. அஹமது. பைஹாகி)

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!