யதார்த்தம் என்ன? நாம் என்ன செய்வது?

யதார்த்தம் என்ன? நாம் என்ன செய்வது?

நம்மை ஆபத்துக்கள் தள்ளிவிட்டுள்ள விடயங்களை நாம் கைவிட்டால் தான் வாழமுடியுமென்றால் நாம் கலிமாவை கைவிட்டால் மட்டுமே போதுமானது. ஏனென்றால் முஸ்லீம்களாகிய எமது இன்றைய ஆபத்து எமது அடிப்படையான கலிமாவின் வாழ்க்கை முறை நோக்கி செல்வதிலும், அந்த வாழ்க்கை முறையை சுதந்திரமாக பின்பற்றுவதற்கான தகுதியான அரசியல் இராஜதந்திர பாதுகாப்பு இல்லாமையிலேயே தங்கியுள்ளது. எனவே இந்நிலையில்  குப்ராதிக்கத்துக்கு சவால்விடும் அல்லது குப்ராதிக்கம் மாற்ற நிர்ப்பந்திக்கும் ஷரீஆ விதிகளில் நாம் ஏற்றவைகளை ஒவ்வொன்றாக இழப்பதை விட கலிமாவை இழப்பது இலகுவானது. ஆனால் அந்த முடிவில் அற்பமான ஒரு சொற்பமான உலகியல் வாழ்வை தவிர எதுவும் நிச்சயம்  கிடைக்கப் போவதில்லை.

எம்மிடமிருந்து வெளிப்படும் பெறுமதியான மார்க்க அடையாளங்களை கலையும்வரை ஆதிக்க குப்பார்களும் அவர்களால் பண்படுத்தப்பட்ட சமூகப் பின்புலங்களும் ஒருநாளும் ஓயப் போவதில்லை. எனவே சிலர் குறிப்பிடுவது போல் இலங்கைக்கென ஒரு பிரத்தியோக உடையை தெரிவு செய்வது முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் ஆபத்துக்களை விட்டும் பாதுகாக்கும் என்பது ஏற்கத்தக்க கருத்தல்ல! இங்கு விவகாரம் அதுவல்ல வெள்ளையர்களின் கோட் சூட் முதல் கோவணம் வரை அணிவதை சகிப்பவர்கள் எமது தெரிவை எதிர்க்கிறார்கள் என்றால் அதன்காரணத்தை புரிந்து கொள்வது அவசியம்.

இந்த பிரச்சினை ஒரு சர்வதேச தரம் மிக்க பிரச்சினை என்பதை மனதில் கொள்ளுங்கள். சவூதி அரேபியா உட்பட இஸ்லாமிய பூர்வீக நிலப்பகுதி கடற்கரை ஓரங்களில் அரைநிர்வாண உடையை அறிமுகப்படுத்தும் செயல் நடக்கிறது! சசமகாலத்தில் இலங்கை போன்ற நாடுகளில் அவ்ரத் எனும் ஷரீஆ விதியை மதிக்கும் உடையை விமர்சித்து கலட்டவைக்கும் அச்சுறுத்தல் மற்றும் வேறுபட்ட கோணங்களில் போராட்டங்கள் நடக்கிறது! இவைகள் வேறுபட்ட தளங்களில் நடந்தாலும் இலக்கு ஒன்றுதான். அதாவது ஒரு சர்வதேச குப்ரிய தரத்தில் முஸ்லீம்களாகிய எம்மை கலாச்சாரப்படுத்தும் ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.

ஏறத்தாழ 200 கோடியாக முஸ்லீம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டும் உலகில் மூன்றில் ஒருவராக இருக்கும் நிலையிலும் மேற்படி நிகழ்வும் இதைவிட மோசமான பல மரண பங்கங்களும் நடப்பது ஒரு வெட்கமான நிலையில்லையா!? இதற்கு முடிவாக எமது தீர்வுகள் குப்ரை சமாளிக்கும் திருப்திப்படுத்தும் அங்கீகரிக்கும் கேவலமான அரசியலாகவும் நடத்தையாகவும் இருப்பதை மறுக்கத்தான் முடியுமா? முதலில் எம் உயிரினும் மேலானது எமது தீனுல் இஸ்லாம் எனும் மார்க்கம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அந்த சத்திய மார்க்கத்திற்கும் அதன் தீர்வுகளுக்கும் எந்தவொரு குப்ரிய சக்தியும் சவால் விடுவதை தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் செய்யவேண்டும். உண்மையில் ஒரு முஸ்லிமிடம் இஸ்லாம் இதைத்தவிர எதையும் எதிர்பார்க்கவில்லை.

இந்த வரலாற்று சம்பவத்தை பாருங்கள்! கப்பாப் பின் அர்த்(ரலி) பிலால்(ரலி) போன்ற சஹாபிகள் பற்றி நீங்கள் அறிவீர்கள். சத்தியத்தை ஏற்ற காரணத்தால் மரணத்தின் எல்லைவரை சித்திரவதை கண்டவர்கள். மக்காவில் ஒரு தடவை அவர்கள் தமது நெருக்கடி நிலையில் இருந்து மீள பிரார்திக்க கூடாதா என்று அல்லாஹ்வின் தூதரிடம்(ஸல்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரது பிரார்த்தனையின் தரம் அவர்களுக்கு தெரியும். ஆனால் அதற்கு அல்லாஹ்வின் தூதர் கண்கள் சிவக்க நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள்!? என்று கேட்டுவிட்டு உங்களுக்கு முன் சென்ற சில சமூகத்தவர்கள் இந்த சத்தியத்தை ஏற்ற காரணத்தால் இரும்புச் சீப்புகளால் வாரப்பட்டார்கள்! கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கப்பட்டார்கள்! என்றெல்லாம் கூறிவிட்டு ஒரு பிரபல்யமான முன்னறிவிப்பை செய்தார்கள். அந்த முன்னறிவிப்பு  "ஒரு காலம் வரும் அக்காலத்தில் ஒரு பெண் ஸன்ஆவில் இருந்து ஹலரல் மவ்த் வரை தனியாக பயணம் செய்வாள்! ஒரு ஆட்டிடையன் தன் ஆடுகளை ஓநாய்கள் கொண்டு செல்லுமோ என்ற அச்சம் தவிர வேறு அச்சமற்றிருப்பான்!" என்று இருந்தது.

மேற்படி சம்பவத்தில் மூன்று முக்கிய முடிவுகள் சொல்லப்படுவதை நாம் அவதானிக்க வேண்டும். அதாவது....

1.இஸ்லாம் அரசியல் இராஜதந்திர ரீதியில் பலமாகாக நிலையில் ஒரு முஸ்லிம் சோதனைகளை சந்திப்பது இயல்பானது தவிர்க்க முடியாதது.

2.இறை சோதனைகளை கண்டு கலங்கி போராட்ட உணர்வை இழந்து அல்லது பலவீனமான முடிவுகள் நோக்கி நகரவும் கூடாது. அதாவது ஒதுங்கிப்போய் வெறும் துஆவுடன் மந்திரத்தால் மாங்காய் பறிக்க சிந்திக்க கூடாது.

3.ஒரு முஸ்லிமின் சுதந்திரமான பெளதீக வாழ்வுச் சூழல் இஸ்லாம் பலமான நிலையில் மாத்திரமே ஏற்படும்.

என்பதாக எம்மால் உணரக்கூடியதாக இருக்கிறது. எனவே முஸ்லீம்களாகிய எமக்கு நடப்பு சூழ்நிலை ஒரு வாழ்வா சாவா என்ற போராட்டம் தவிர வேறில்லை. இங்கு குப்பார்களின் சூழ்ச்சியை நிர்ப்பந்தத்தை காரணம் காட்டி இஸ்லாத்தின் எந்த ஒரு அங்குலத்தையும் எம்மால் விட்டுக் கொடுக்க நிச்சயமாக முடியாது. உயிரைக் கொடுத்தாவது இஸ்லாத்தின் தீர்வுகளை வென்றெடுக்க எந்த சூழ்நிலையிலும் நாம் பாடுபட வேண்டும். எம்மை சகலதுறைகளிலும் பாதுகாக்கத்தக்க பெளதீக பிண்ணனியை கொண்ட இஸ்லாமிய அரசியலான ஒரே தலமையிலான தவ்லா அல் இஸ்லாமியாவை (கிலாபா அர்ராஷிதா) கட்டமைக்கவும் அதன் பின்னால் அணி திரளவும் தயாராகுவது காலத்தின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுங்கள். முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல நீதியான வாழ்க்கையை விரும்பும் சகலருக்கும் இதில் தீர்வுள்ளது. அல்லாஹ் நம்மனைவருக்கும் இந்த அதிமுக்கிய பணியில் இணைந்து செயற்பட அருள் புரிவானாக.

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!