சிரியா மக்களின் அவலங்களும் பொருத்தமில்லாத தீர்வுகளும்!!!


சிரிய மக்களின் அவலமும் பொருத்தமில்லா தீர்வுகளும்!!!

சிரியாவின் அவலம் கண்டு உலக முஸ்லிம் உம்மத் கவலையோடு இந்த அநீதிக்கு ஒரு முடிவு வராதா மீண்டும் சிரியா சுபீட்சம் பெற தீர்வு ஏதும் உண்டா என்று காணப்படுகையில் ஒரு சில உலமாக்களால்  தீர்வுகளாக சிரிய மக்களை பொறுமைகாக்க சொல்வதும், அம்மக்களுக்காக நன்கொடை வழங்குமாறு பணிப்பதும், நம்மால் முடிந்தது துஆ மட்டும்தான் என்று கூறுவதையும் அவதாணிக்க முடிகின்றது!!!

அடிப்படையில் மேலுள்ள தீர்வுகள் சிரியா அரசியல் பிரச்சினையின் விளைவான  யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாம் கூறும் தீர்வுகளா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை!!!


துஆ கேட்டல், நிதியுதவி  வழங்குதல் போன்ற விடயங்கள் சிரியா யுத்தத்ததை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாம் உரைக்கும் தீர்வினை செயற்படுத்தும் முயற்சியோடு தொடர வேண்டிய நல்லமல்களே தவிர இஸ்லாம் கூறும் உண்மைத் தீர்வை புறக்கணித்து தீர்வாகக் காட்டப்பட வேண்டிய அம்சங்களல்ல.

நிஜத்தீர்வை  நோக்கி உம்மத்தை நகரவிடாமல் செய்வது அல்லலுரும் சகோதர முஸ்லிம்கலுக்கு செய்கின்ற மிகப்பெரும்  துரோகமும்,  பாவமும் ஆகும்!!!

சிரியா யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இஸ்லாமிய தீர்வு என்ன???


உண்மையில் சிரிய மக்களை  கொடூரன்  அசாதிடமிருந்து மீட்டெடுப்பதற்க்கு இஸ்லாமிய தீர்வு  ஓர்கொடியின்  கீழ் ஒன்று திரட்டப்பட்ட முஸ்லிம் நாடுகளின் இராணுவம்  சிரியாவை நோக்கி புறப்படுவதே .

இந்த சன்மார்க்க தீர்வுக்காக இயங்குவதற்கு எம்மைப் போன்று ஏனைய நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் அழுத்தங்களை கொடுப்பவர்களாக, அதற்காக பரப்புரை செய்பவர்களாக மாற வேண்டும்.

இவ்வாறு முஸ்லிம் உலகிலுள்ள இராணுவத்தை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும் சரி, அரசியல் பொருளாதார வலிமையை ஒன்று குவிப்பதாக இருந்தாலும் சரி, அது தூய்மையான இஸ்லாமிய தலைமைத்துவமான கிலாஃபாவால் மாத்திரமே சாத்தியப்படும் என்ற செய்தியை நாம் பிரச்சாரப்படுத்த வேண்டும். அதன் வருகைக்காக அயராது உழைக்க வேண்டும்!!!

“ ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரராவார். அவர் மற்ற முஸ்லிமுக்கு துரோகமிழைக்க மாட்டார், கைவிட மாட்டார்."

கிலாபத்தின் வருகையே சிரியாவின் துயர்துடைக்கும்!!!


இன்று குண்டுமழை பொழிகின்ற சிரியாவின் அலெப்போ நகரில் முதலாம் உலகமகா யுத்தத்தின்போது அந்நகரில் காணப்பட்ட  உதுமானிய கிலாபத்தின் இராணுவ படையணியின் அணிவகுப்பே நீங்கள் காண்கின்ற படம்!!!

அன்றைய அல்ஷாமின் மிகப்பிரதான நகரங்களுள் ஒன்றாக காணப்பட்ட பிரதேசம்  அமெரிக்க, ரஷ்ய காபிர்களினால் இன்று நெருப்பு பிளம்பாக காட்சியளிக்கின்றது .!!

ஆனால்  இம் முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டிய முஸ்லிம் நாடுகளின் இராணுவமோ  தேசிய எல்லைகலுக்குள்  கட்டுண்டு கிடக்கின்றது!!!

- சிரியா விழிப்புணர்வு பிரச்சாரம்

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!