நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அரசியல் அதிகாரத்தை அடைந்து கொண்டார்கள்? தொடர் - 3

நபி(ஸல்) தாயீப்பின் தலைமைகளிடம் நுஸ்ராவைக் கோருதல்.

நுஸ்ராவைக் கோரும் பணியின் முக்கிய முதற் கட்டமாக, அரேபிய தீபகற்பத்தின் குறைஷிகளுக்கு அடுத்தபடியான பலவாய்ந்த சக்திகளான தாயிபின் தலைமைகளிடம் நுஸ்ரா கோர நபி(ஸல்) தீர்மானித்தார்கள். பலத்திலும், சமூக அந்தஸ்த்திலும் அவர்கள் குறைஷிகளின் போட்டியிடும் சக்திகளாக இருந்தார்கள்.

ஏறத்தாழ சமதரத்தில் இவர்கள் இருந்த காரணத்தினால்தான் அல்குர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது, வலீத் பின் முகீரா "ஏன் இந்த குர்ஆன் மக்கத்தது பெருந்தகைகளுக்கோ, தாயிப்பின் பிரமுகர்களுக்கோ இறக்கப்பட்டிருக்கக் கூடாது" என்று கூறி அதனை நிராகரித்த சம்பவம் இந்த உண்மையையே உரைக்கிறது.

"மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?” (43:31)

தாயிப்பின் பலம் எத்தகையது என்றால் இஸ்லாமிய அரசு மதீனாவில் நிறுவப்பட்ட பின்னர் கூட தாயிப்பை கைப்பற்றும் நடவடிக்கை பெரும் பலப்பரீட்ச்சையாகவே இருந்தது. இரு தரப்பிலும் பலத்த இழப்புகளுக்கு பின்னர்தான் அவர்களை ஒரு வழிக்கு கொண்டு வர முடிந்தது. தாயிப் நகரை முற்றாக முற்றுகையிட்டு அவர்களின் எதிர்ப்பை முறியடிக்க பீரேங்கிகள் கோண்டு தாக்குதல் நடாத்தியே அது முஸ்லிம்களின் ஆளுகைக்குள் வந்தது.

தாயிப்பின் தலைவர்களையும், பிரபுக்களையும் சந்திக்கும் நோக்கத்துடன் நபி(ஸல்) தாயிப் நோக்கி பயணமானார்கள். அவர்களின் முக்கிய மூன்று நபர்களை அவர்கள் சந்தித்து இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி நுஸ்ரா பற்றியும் சம்பாஷித்தார்கள். எனினும் அவர்களின் முழுமையான நிராகரிப்பும், நுஸ்ரா தர மறுத்தமையும் நபி(ஸல்) அவர்களின் மனதை ஆழமாகப் பாதித்தது.

எனவே தாயிப்பிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து ஹஜ் கிரிகைக்கான காலங்களில் பலம் வாய்ந்த அரபுக் கோத்திரத் தலைவர்களை நபி(ஸல்) சந்திக்க ஆரம்பித்தார்கள். இந்த கோத்திரத்தலைவர்கள் இன்று நாம் அரபுலகில் காணும் இராணுவங்களின் தலைவர்கள் மற்றும் உயர் செல்வாக்குள்ள ஏனைய தலைவர்களுக்கு ஒப்பானவர்கள்.

இப்னு ஹிஷாமின் ஸீராவிலே, நபி(ஸல்) கோத்திரங்களை அணுகுதல் என்ற தலைப்பின் கீழே இப்னு இஷ்ஷாக் சொல்கிறார்கள், “ நபி(ஸல்) திரும்பி மக்காவுக்கு வந்தபோது இஸ்லாத்தை ஏற்றிருந்த ஒரு சிலரைத் தவிர ஏனைய குரைஷிகள் அனைவரும் முன்னிருந்ததைவிட கடுமையாக நடந்து கொண்டார்கள்.

நபி(ஸல்) ஹஜ் காலங்களில் ஏனைய கோத்திரத்தவர்களை சந்தித்து அல்லாஹ்வின் பால் அழைத்தார்கள். தான் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டிருக்கின்ற தூதர் என்பதை ஏற்று அல்லாஹ்(சுபு) எதனைக் கொண்டு அனுப்பினானோ அதனை அவன் வெளிப்படுத்தும் (நிலைநாட்டும்) வரையில் தன்னைப் பாதுகாக்குமாறும் கோரினார்கள்.”

ஹஜ் காலங்களில் யாரெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கும், பலமும் உடைய ஸ்தானத்தில் இருந்தார்களோ அவர்களையெல்லாம் நபி(ஸல்) சந்தித்து வந்தார்கள் என்பதை அனைத்து ஸீரா நூற்களும் சுட்டிக்காட்டுகின்றன.

இப்னு இஷ்ஹாக் மேலும் குறிப்பிடுகிறார், ”நபி(ஸல்) இந்த விவகாரத்தை (நுஸ்ரா கோருதலை) ஹஜ் காலங்களில் மக்கள் அவர்களை சந்தித்த வேளைகளிலெல்லாம் தொடர்ந்தேர்ச்சையாக செய்து வந்தார்கள். அவர்கள் கோத்திரங்களை அல்லாஹ்(சுபு)வின்பாலும், இஸ்லாத்தின்பாலும் அழைத்து தன்னையும், தனக்கு அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த வழிகாட்டலையும் அறிமுகப்படுத்தினார்கள்.

மக்காவுக்கு மக்களில் முக்கியத்துவமிக்க, கண்ணியமிக்க எவரேனும் வருகிறார்கள் என்று கேள்விப்படுமிடத்து அவர்களில் ஒருவரையேனும்; அல்லாஹ்(சுபு)வின்பாலும், தனது அழைப்பின்பாலும் அவர் அழைக்காமல் இருக்கவில்லை.”

- பேனா

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!