ஜனநாயகம் VS இஸ்லாம்




ஜனநாயகம் VS இஸ்லாம்

கலிபாவை தேர்ந்தெடுப்பதிலும் நவகால ஜனநாயக அரசியலில் ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பதிலும் மக்கள்தான் ஓட்டு போட்டு தெரிவு செய்கிறார்கள் அதனால் ஜனநாயகமும் இஸ்லாமே என்பது சிலரது வாதம்!

பன்றியிடமும் மடி இருக்குனு பசுவை விட்டுட்டு பன்றியிடம் பால் கறந்து குடிக்க முடியுமா???

ஓட்டு போட்டு தெரிவு செய்யும் ஒற்றுமை இருப்பதால் மட்டும் ஜனநாயகமும் இஸ்லாமும் ஒன்றாகி விடாது கலிபா படைத்தவன் சட்டத்தை (குர்ஆன், ஹதீஸ்) அமல்படுத்துவார் நவகால ஜனநாயக ஆட்சியாளர் படைக்கப்பட்டவன் உருவாக்கிய "அரசியல் அமைப்பை" அமல்படுத்துவார் இரண்டுக்கும் பாரிய வித்தியாசம் உள்ளதே!

கலிபா இஸ்லாத்தை தஃவாவை கொண்டும் ஜிஹாதை கொண்டும் நிலை நிறுத்துவார் மாறாக நவகால ஆட்சியாளர் தன்னை மட்டுமே நிலை நிறுத்தி குப்ரை சட்டமாக நிலைநாட்டுவார் வட்டி, மதுவை ஹலால் ஆக்குவார்!

இஸ்லாம் ஹராம் ஆக்கியதை இந்த நவகால ஆட்சியாயாளர் மனோஇச்சை சட்டங்களை கொண்டு சரி கண்டு சட்டமாக்குவது உங்கள் கண்ணுக்கும், காதுக்கும் எட்டவில்லையா?

ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்கள் கருத்தே சட்ட வடிவம் பெறும் அவை நன்மையா தீமையா என்று ஆராயப்படாது ஆனால் கலிபா ஷரிஅத்தை கொண்டே ஆட்சி புரிவார் நாட்டின் பெரும்பான்மை மக்கள் விபச்சாரத்தை விரும்புகிறார்கள் என்றால் அதை சட்டமாக்க மாட்டார் மாறாக இஸ்லாத்தின் தண்டனையை அமல்படுத்துவார்!

அபூபக்கர் (ரலி) வட்டியை அடிப்படையாக கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தினாரா? நவகால ஜனநாயக நாட்டின் பொருளாதாரம் வட்டியை அடிப்படையாக கொண்டதே!!!

உமர் (ரலி) குர்ஆன், ஹதீஸை விடுத்து மனோஇச்சை அடிப்படையில் தீர்ப்பு வழங்கினாரா? ஜனநாயக ஆட்சியில் மனோஇச்சை அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படுகிறதே???

உஸ்மான் (ரலி) மக்களின் வரிப்பணத்தை தன் கஜானாவில் சேர்த்து கொண்டாரா? ஜனநாயக ஆட்சியாளர் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து தன் கஜானாவைதானே நிரப்புகிறார்கள்!!!

அலி (ரலி) அரசு மக்களுக்கு சேவை புரியவே என்பதை மறந்து மக்களை வறுமையில் தவிக்க விட்டாரா? ஆனால் ஜனநாயக ஆட்சியாளர் தன் இருப்பை நிலை நிறுத்தி கொண்டு மக்களை வறுமையில் தள்ளுகிறார்களே!!!

ஜனநாயகத்திற்க்கும் இஸ்லாத்திற்க்கும் பாரிய வித்தியாசங்கள் உண்டு ஏற்று கொள்ளும் மனங்களுக்கு ஒரு உதாரணமே போதுமானது. வழிகேடும் நேர்வழியும் எப்படி ஒன்றாக முடியும்!!!

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!