கிலாபா வரும் வரை நாம் என்ன செய்யலாம்?





கேள்வி:- கிலாபா வரும் வரைக்கும் நாம் என்ன செய்யலாம்?

பதில் : முதலில் கிலாபா தானாக வானத்திலிருந்து இறங்குவதில்லை அது முஸ்லிம் உம்மத் மேற்கொள்ளும் சாத்வீகரீதியிலான  அறிவார்ந்த சித்தாந்த போராட்டத்தின் விளைவாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  

வரவிருக்கும் கிலாபாவுக்கான உழைப்பு  முஸ்லிம் உம்மத்துக்கான பொறுப்பு என்பதை மனதில் நிறுத்தி முஸ்லிம்களாகிய நாங்கள் நாளை வரவிருக்கும் கிலாபாவுக்கு சாதகமான கருத்துருவாக்கத்தை இன்று காணப்படும்

அநீதியான வாழ்வொழுங்குக்கு மாற்றீடாக இஸ்லாமிய வாழ்வொழுங்கை  முன்வைத்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இதுவே எமது தலையாய பணி .இந்தப் பணியிலிருந்து கொண்டுதான் ஏனைய பிரச்சனைகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

ஏனென்றால் இது சன்மார்க்கக் கடமை . அத்துடன்  நிரந்தர பாதுகாப்பும்  ,கண்ணியமும் , பூரண இஸ்லாமிய பின்பற்றலும் முஸ்லிம்களுக்கு சாத்தியமான ஆட்சிவடிவம் கிலாஃபா மாத்திரம்தான்.

ஆகவே நமது கேள்வி கிலாபாவுக்காக முஸ்லிம்களாக நாம் என்ன செய்யலாம் என்றளவுக்கு மாறுதல் வேண்டும். சித்தாந்தமாக இஸ்லாத்தை கற்காதவவரைக்கும்  இது சாத்தியமில்லை

அடுத்ததாக முஸ்லிம்களாகிய எங்களுக்கு இன்று  காணப்படும் சில சவால்களை கிலாஃபா ஆதரவு முஸ்லிம்களாக ,அதே நேரத்தில் குப்ரிய அரசியல் எதிர்ப்பாளர்களாக இருந்து கொண்டு நாம் எவ்வாறு எதிர்கொள்வது ?

 அரசின் கீழ் வரி செலுத்தும் மக்களென்ற அடிப்படையில் நாங்கள் எங்களது அடிப்படை உரிமைகளை அனுபவித்துக் கொண்டு வாழ்வதற்கு எந்தவித தடையும் கிடையாது .

அதற்கப்பால் நமது பாதுகாப்பு , இருப்பு போன்றவைற்றை யெல்லாம் மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் குப்ரிய  ஜனநாயக  அரசியல் பங்கெடுப்பு ஒருபோதுமே எமக்கு விடிவைத்தராது . அதற்கான  எந்தவித உத்தரவாதமும் இல்லை . ஏனென்றால் முடிவெடுப்பவர்களாக நிராகரிப்பாளர்களே காணப்படுகின்றனர்.

எமது இலக்கு உயிர்வாழ்தல் என்ற அற்ப எண்ணத்திலிருந்து தீனை நிலைநாட்டுதல் என்ற உயர்ந்த எண்ணமாக மாறுதல் வேண்டும் .அதற்கான வெகுமதி சுவர்க்கம் . அது இலகுவில் கிடைக்காது . அதற்கு பகரமாக எங்களது உயிர் உடைமைகளை அல்லாஹ் எடுத்துக் கொண்டான்.

- Ahamed Maryam Mohideen

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!