நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அரசியல் அதிகாரத்தை அடைந்து கொண்டார்கள்? தொடர் - 4

நபி(ஸல்) பனு கல்ப் எனும் கோத்திரத்தை அவர்களின் இடத்திற்கு சென்று சந்தித்தார்கள். எனினும் நபி(ஸல்) அவர்களை, அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அல் யமாமாஹ்வைச் சேர்ந்த பனீ ஹனீபாவை அவர்களின் இடத்தில் சந்தித்தபோது வேறெந்த கோத்திரத்தவர்களும் நடந்துகொள்ளாத அளவிற்கு மிகவும் கர்வத்துடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள்.

நபி(ஸல்) பனீ ஆமிர் இப்னு ஸாஃஸா ஐ சந்தித்தபோது அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு தமக்கு அதிகாரத்தை தந்தால்தான் தாம் ஆதரவு நல்குவோம் என நிபந்தனை விதித்தபோது அதனை நபி(ஸல்) நிராகரித்து விட்டார்கள். பின்னர் யெமன் வரையில் சென்று நபி(ஸல்) பனீ கிந்தாவை சந்தித்தபோது அவர்களும் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு அதிகாரத்தை தந்தால்தான் ஆதரிப்போம் என்றார்கள்.

எனவே அவர்களின் நுஸ்ராவையும் நபியவர்கள் நிராகரித்தார்கள். பக்ர் பின் வைல்லினரை அவர்களின் முகாம்களில் சென்று அழைத்தார்கள். எனினும் தாங்கள் பாரசீகர்களின் எல்லைக்குள் இருந்ததால் நபி(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்க முடியாத நிலையைக்கூறி மறுத்தார்கள். பனீ ரபீஆவின் முகாம்களுக்கு சென்றபோது அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

பாரசீகர்களின் எல்லைக்கு அண்மித்து வாழ்ந்த பனீ சைபான்களை அவர்களின் முகாம்களில் சந்தித்தபோது அவர்கள் அரபுக்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்க நாங்கள் தயார், ஆனால் பாரசீகர்களுக்கு எதிராக அதனைச் செய்ய முடியாது என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்.

உங்கள் உண்மையின் சொல்வன்மை ஏறத்தாழ அதன் (நுஸ்ராவின்) நிராகரிப்புக்கு கிட்டியதே. அல்லாஹ்(சுபு)வின் தீனை அனைத்துப் பக்கங்களாலும் பாதுகாக்காத நிலையில் அவனது தீனுக்காக நிற்க(உதவ) ஒருவராலும் முடியாது.” என்று கூறி அதனையும் மறுத்துவிட்டர்கள்.

அரபுக்களினால் தனக்கு ஏற்பட்ட வெறும் அச்சுறுத்தல்களுக்காகத்தான் நபி(ஸல்) கோத்திரங்களைச் சந்தித்து உதவி தேடினார்கள் என சிலர் கூறும் வாதம் உண்மையென்றிருந்தால் இந்த கோத்திரத்தவர்கள் அரபுக்களுக்கு எதிராக உங்களைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனக் கூறிய சமயத்தில் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

மாறாக அவர்களின் நோக்கம் இஸ்லாத்திற்கு பூரணமான அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதாகவே இருந்தது. அதற்காவே அவர்கள் நுஸ்ராவைக் கோரினார்கள். இஸ்லாத்தை முழு உலகிலும் நிலைநாட்டும் பாதையில் பாரசீகர்களுக்கு எதிராகவும் களத்தில் நிற்க வேண்டி ஏற்படும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி(ஸல்) பல்வேறு கோத்திரத்தவர்களால் தொடர்ந்தேர்ச்சையாக நிராகரிக்கப்பட்ட நிலையிலும் நுஸ்ராவைக் கோருவதை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்கள். அவர்கள் தடுமாறவில்லை, விரக்தியடையவில்லை, தனது இந்த முயற்சியை கைவிடாது, மாற்றாது தொடர்ந்து செய்து வந்தார்கள். அல் வாக்கிதியிடமிருந்து ஷஅத் அல் மஆத்தில் பின்வரும் தகவல் பதியப்பட்டிருக்கிறது.

“நபி(ஸல்) அணுகி, அழைத்த கோத்திரங்களாக நாங்கள் அறிந்தவையாவன, பனு ஆமிர் இப்னு ஸாஃஸா, முஹாரிப் இப்னு ஹப்ஸா, பஷாரா, கஷ்ஷான், முர்ரா, ஹனீபா, ஸ}லைம், அப்ஸ், பனு நதார், பனு பிகாஃ, கிந்தா, ஹாரித் இப்னு கஅப், உர்வா மற்றும் ஹத்ரமிஸ் என்பனவாகும். இவர்களில் ஒருவரேனும் நேர்மறையாக பதிலளிக்கவில்லை.”

- பேனா

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!