தாகூதுகளை உருவாக்கும் முதலாளித்துவ அரசியல்...




தாகூதுகளை உருவாக்கும் அரசியல் ஒழுங்கு முதலாளித்துவ ஜனநாயக முறைமை!

மனிதன் தனது ரப்புக்கு முழுமையாக வழிப்பட்டு நடக்கும் அப்தாக இருக்கும்படி விரும்புகிறான். இதற்கு தடையாக இருப்பவர்கள்தான் தாகூதுகள்.

இந்த தாகூதுகள் ரப்புடைய ஏவல் விலக்கல்களுக்கு வழிப்படாது தமது கட்டளைகளுக்கு வழிப்பட அழைப்பவர்கள். இன்றுள்ள தாகூதுகள்தான் மனிதச் சட்டங்களை ஆக்குபவர்கள். இவர்கள் ரப்பை நிராகரிப்பவர்கள்.

இந்த இறை நிராகரிப்புக்கு காரணமான அரசியல் முறையைத்தான் இன்றுள்ள முதலாளித்துவ ஜனநாயம் செய்கிறது. மனிதன் சட்டத்தை ஆக்க வேண்டும் என்று சொல்லும் அதேவேளை இறைவனிடம் இருந்து வரும் சட்டங்களை கருத்திற்கொள்ளக் கூடாது என்கிறது.

இத்தகைய தாகூதுகளை எதிர்கொள்வதற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் ரஸுல்மார்கள் என அல்குர்ஆன் எடுத்தியம்புகிறது. இதனை இந்த அல்குர்ஆனிய வசனத்தில் இருந்து நாம் உணரமுடியும்.

“மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; தாகூதுகளை (ஷைத்தான்களை) விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்;” (16:36)

எனவே , ஏகத்துவம் உலகில் நிலைநாட்டப்பட தடையாக இருப்பவர்கள் இந்த தாகூதுகள். இந்த தாகூதுகளை உருவாக்கும் அரசியல் ஒழுங்கு முதலாளித்துவ ஜனநாயக முறைமை என்பதனை உணர்ந்து தாகூதுகளுக்கு வக்காளத்து வாங்கும் தெரிவுமுறையாக முதலாளித்துவ ஜனநாயக தேர்தல் முறையுள்ளது என்பதனை கருத்திற்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்!

அதேவேளை நபிமார்களின் வாரிசுகளான உலமாக்கள் இந்த தாகூதிய முறைமைக்கு எதிராக மக்களிடம் கருத்தாடல் செய்ய கடமைப்பட்டுள்ளனர்.

- Abu Maryam Mohideen

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!