மத்திய கிழக்கின் யதார்த்த நிலை இதுதான்!

மத்திய கிழக்கின் யதார்த்த நிலை இதுதான்!

நவ சிலுவைப் போரை வழிநடத்தும் இஸ்லாத்தின் எதிரிகளில் ஒருவனான விளாட்மிர் புடின் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது சிரிய பயணத்தின் போது டமாஸ்கஸில் உள்ள சலாஹுதீன் அல்-அய்யூபியின்(ரஹ்) கல்லறைக்கு சென்றுள்ளான்.

இது 100 ஆண்டுகளுக்கு முன்னர் அதே கல்லறைக்குச் சென்ற பிரான்ஸ் தளபதி ஒருவனின் செயலை நினைவூட்டுகிறது. அவன் "ஓ சலாஹுதீனே! நாம் மீண்டும் வந்துவிட்டோம்! நாங்கள் சிலுவைப்போர் சந்ததியினர்! உங்கள் சந்ததியினர் எங்கே?" என்று கர்ஜித்தான்.

முஸ்லிம் உலகை கட்டுப்படுத்துவதிலும் சுரண்டுவதிலும் அழிப்பதிலும் அமெரிக்க ரஷ்ய அணிகள் தமக்குள் முரண்பட்ட நிலையிலும் ஒன்று படுகின்றனர். இவர்களுக்கு உதவியாக....
அப்துல்லாஹ் இப்னு சபா
முஸ்தபா கமால் அத்தாதுர்க்
அப்துல் அசீஸ் பின் சவுத்
என்ற மூவரின் சந்ததிகளும் அவர்கள் சார்ந்த இனக்குழுக்களும் இந்த நவீன சிலுவை போரில் துணைபோகின்றனர்.

இவர்களில் ஒரு தரப்பு இஸ்லாமிய பெயர் தாங்கி குடியரசு கோட்பாட்டையும்....
இன்னொரு தரப்பு இஸ்லாமிய பெயர் தாங்கி மன்னரிசத்தையும்....
அடுத்த தரப்பு முற்றிலும் மேற்குலகு சார்ந்த செக்கியூலரிசத்தையும் தமது ஆட்சி வழியாக கொண்டியங்குகின்றனர்.
அமெரிக்கா ரஷ்யா சீனா பிரித்தானியா பிரான்ஸ் போன்ற வல்லரசுகள் கூட்டாகவும் தனியாகவும் இந்த இனக்குழு வகை ஆட்சியாளர்களை பயன்படுத்தி முஸ்லிம் உலகை பிணக்காடாக மாற்றியுள்ளனர்.

மேலும் இந்த இனக்குழு அரசியலை தமது பணத்தாலும் செல்வாக்கினாலும் முழு முஸ்லிம் உலகிலும் பரவவிட்டுள்ளனர். இவர்களின் அடாவடித்தனத்தை மக்கள் மத்தியில் போட்டுடைத்தால் அவர்களால் உருவாக்கப்பட்ட 'புரொக்ஸி மிக்ஸிங்' அல்லக்கைகள் போர்க்கொடி தூக்கி அவர்களது சுயரூபத்தை தோலுறித்து காட்டியவர்களை குதற ஆரம்பிப்பார்கள்.

ஓ முஸ்லீம் சமூகமே! உங்கள் உண்மை மார்க்கத்தையும் அதன் இயல்பையும் சீரழித்து சீர்குலைக்கும் இந்த அயோக்கிய இனக்குழுக்களை இன்னுமா நம்புவீர்கள்!? உண்மை மார்க்கம் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் சீனாவுக்கும் சோரம் போவதிலும் பெயரளவில் இஸ்லாத்தை பூசிக் கொள்வதிலும் இல்லை. இவர்களை விட்டும் முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!