எங்கள் நாட்டு மேகக் கூட்டங்களை இஸ்ரேல் திருடுகிறது - ஈரான்...


கிணத்தை காணோம்குற கதையா என்னடா இவறு மேகத்தை காணோம்னு சொல்றாறுனு ஒரு பக்கமும், செல்லூர் ராஜு தப்பினும் அப்புடிக்கா கமெண்ட்ஸ் போய்கிட்டு இருக்கு...

உலகத்தை தன்னோட ஆக்டோபஸ் கரங்களால கட்டுபடுத்தி வச்சிருக்கும் அமெரிக்கா தன்னோட சாம்ராஜ்யத்தை தக்க வைக்க எதையும் செய்யும் உதாரணமா 9/11 தானே தன் சொந்த நாட்டு மக்களை கொலை செஞ்ச மாதிரி.....

#பருவநிலையை மாற்ற கூடிய #டெக்னாலஜியையும் அமெரிக்கா உருவாக்கியிருக்கலாம்.

2015 ல தி ஹிந்து பத்திரிகையில வெளிவந்த கட்டுரையை படிச்சா உங்களுக்கு கொச்சம் புரியும்...

பருவநிலை பயங்கரவாதம் உண்மையா?

பருவநிலை ஓர் ஆயுதமா?

- பேட்ரிக் பர்காம்

உலகைப் பணியவைக்க பருவநிலையையே ஆயுதமாக்க முயல்வது ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வில்லன்களின் வழிமுறையாக இருக்கலாம். ஆனால், அமெரிக்க அரசின் வலதுகரமான மத்தியப் புலனாய்வு முகமையே (சி.ஐ.ஏ.) அந்த முயற்சியில் ஆர்வமாக இருக்கிறது என்றால் என்ன சொல்வது? ‘ஜியோஇன்ஜினீயரிங்’ என்று இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பெயர். இதில்தான் சி.ஏ.ஐ. இப்போது ஆர்வம் காட்டுகிறது.

கரிப்புகை வெளியீடு அதிகமிருப்பதால் புவி வெப்பமடைவதைக் குறைக்க கரியுமிலவாயுவை அகற்றும் தொழில்நுட்பம்தான் ‘ஜியோஇன்ஜினீயரிங்’. மற்றொரு தொழில்நுட்பம், மேகங்கள் அல்லது விண்தூசு உதவியுடன் புவியின் பிரதிபலிப்புத் திறனைக் கூட்டுவதாகும்.

புவி வெப்பமடைவதை இவ்விதச் செயல்களின் மூலம் தடுத்துவிடலாம் என்று நினைப்பதை நவோமி கிளெய்ன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கண்டித்துள்ளார்கள். இந்த ‘ஜியோஇன்ஜினீயரிங்’ என்ற திட்டத்தின் உள்நோக்கம் சூது நிறைந்ததாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

அணுகுண்டு வீசப்பட்ட பிறகு தோன்றும் கடும் குளிரால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து 1980-களில் ஆராய்ந்த ஆலன் ரொபாக், பருவநிலை மாறுதல்களைச் சமாளிக்கும் பல்வேறு உத்திகளுக்காக தேசிய அறிவியல் அகாடமிக்கு நிதியுதவி அளித்து ஆய்வுகளை நடத்த சி.ஐ.ஏ. ஆர்வம் காட்டுவது குறித்து எச்சரிக்கிறார்.

அறிவியல் அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட வேண்டிய துறை குறித்துத் தனக்கென்ன அக்கறை என்று சி.ஐ.ஏ. வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.
பிரிட்டன்தான் முன்னோடி
பருவநிலையை ஆயுதமாகப் பயன்படுத்த முற்படுவது புதிதல்ல. 99 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசு அத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறது.

முதல் உலகப் போரின்போது ஜெர்மானியப் போர் விமானங்களை ஏமாற்றுவதற்காகச் செயற்கையாக மழைமேகங்களை உருவாக்க முயன்றிருக்கிறது. அதற்காக சஃபோல்க் என்ற பகுதியின் ஆர்ஃபோர்டு ராணுவத் தளத்தில் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ராணுவம் மேற்கொண்ட பல்வேறு சோதனைகளைப் போலவே இதுவும் தோல்வியில்தான் முடிந்தது.

ஆனால், மழை மேகங்கள் திரண்டால் அவற்றின் மீது ‘சில்வர் அயோடைடு’ பொடியைத் தூவி செயற்கையாக மழைப் பொழிவை உண்டாக்க முடியும் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

1967–68-ம் ஆண்டுகளில் வியட்நாமில் அமெரிக்க ராணுவம் ‘ஆபரேஷன் பொபாய்’ என்ற பெயரில் செயற்கை மழை முயற்சியை மேற்கொண்டது. வடக்கு வியட்நாமிலிருந்து வியட்காங் துருப்புகளும் ராணுவத் தளவாடங்களும் தெற்கு வியட்நாமுக்குச் செல்வதைத் தடுக்க இப்படிச் செயற்கையாக மழையை வரவழைத்தனர்.

வியட்நாமின் 30% பகுதிகளில் அந்த மழை பெய்தது. ஆனால், வியட்நாம் துருப்புகள் அதைப் பொருட்படுத்தாமல் தெற்கு வியட்நாமுக்குச் சென்று போரிட்டார்கள்.
சமீப ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் ஹார்ப் (HAARP - High Frequency Active Auroral Research Program) என்ற ஆய்வை இதே அடிப்படையில் மேற்கொண்டது.

அமெரிக்க விமானப்படை, கடற்படை மற்றும் அலாஸ்கா பல்கலைக்கழகம் இணைந்து அயனி மண்டல ஆராய்ச்சியை மேற்கொள்வதைக் குறிப்பதே இந்தப் பெயர்ச் சுருக்கமாகும்.
அயனி மண்டலத்தைக் கவனித்துப் பருவநிலையில் மாறுதல் செய்ய முடியுமா என்பதே இந்த ஆராய்ச்சி.

இது வெற்றிகரமாக அமைந்தால், ஆராய்ச்சி மேலும் தொடரும்.
பருவநிலையை இப்படி அறிவியல் ஆய்வுகள் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றால் அது தீயவர்களுக்கும் தெரிந்து, அவர்களும் பருவநிலையைக் கட்டுப்படுத்தத் தொடங்கினால் என்னாவது என்ற கேள்வி எழுகிறது.

இப்போது மட்டும் என்ன, பல்வேறு ரசாயனங்களைத் தூவியும் கரைத்தும் சோதனைகள் நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள் என்ற பதில் வருகிறது.
அமெரிக்காவின் கிழக்கில் கடும் குளிர் நிலவவும் கலிஃபோர்னியா வறட்சியில் ஆழ்ந்திருக்கவும்கூட இந்தச் சோதனைகள்தான் காரணம்; விமானத்தில் மழை மேகங்கள் படிந்து குளிர்ந்து உறையும் பகுதியில் நச்சு ரசாயனங்களை இதற்காகவே தடவி அனுப்புகிறார்கள் என்றுகூடப் பேசுகிறார்கள்.

இந்த சந்தேகங்கள் எல்லாம் வெறும் ஊகங்களே என்று அறிவியல் அறிஞர்கள் நிராகரிக்கின்றனர்.
மனிதர்களின் கற்பனையில் வேண்டுமானால் இவை சாத்தியமாக இருக்கலாம்; இதைச் செயல்படுத்தும் தொழில்நுட்பம் இன்னமும் கைவரப்பெறவில்லை என்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பங்களைக் கையாள்பவர்களை யார் கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்று ரொபாக் கவலைப்படுவது நியாயமே.
ஆனால், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட சகுனம் நல்லதே நடக்கும் என்று உணர்த்துகிறது.

பனிபடர்ந்த ஆஸ்திரியாவில் கடந்த மாதத் தொடக்கத்தில் இதே போன்ற காட்சியைப் படமாக்க படப்பிடிப்புக் குழுவினர் முயற்சி செய்தபோது பலத்த காற்று வீசி அதைத் தடுத்துவிட்டது. பருவநிலைகளுக்கென்று ஒரு கடவுள் உண்டென்றால் அது நாமில்லை!
-------------------------------------
"நாமெல்லாம் சாத்தியமில்லைனு நினைக்குற பல விசயம் டெக்னாலஜி முன்னேற்றத்தால சாத்தியமே, போனா நூற்றாண்டு வரை இல்லாத பல விசயங்கள் இப்ப சாத்தியம் ஆகியிருக்கு, அப்புடி ஒரு டெக்னாலஜி இருந்தா அமெரிக்கா, இஸ்ரேல் தனது சுயநலத்துக்கு பயன்படுத்தும் அதுல மாற்றமில்லை"

முதலாளித்துவத்தை கொண்டு உலக நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதையே அமெரிக்கா விரும்புகிறது...

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!