சவூத் குடும்பத்தை அமெரிக்கமயமாக்கல்...

சவூத் குடும்பத்தை அமெரிக்கமயமாக்கல் (Americanization)




செய்தி:
கடந்த சில காலங்களில் இருந்தே சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் வருகைப் பற்றிய சலசலப்பு அமெரிக்காவில் இருந்தது. திறனுள்ள இந்த 32 வயது வாலிபர் அமெரிக்கவுடன் உறவுகளை நீடித்திருப்பதில் கவனமாக இருக்கின்றார், இதற்காக அனைத்து துறைகளிலிருந்தும் புகழ்ப்பெற்ற அமெரிக்க பிரமுகர்களை சந்தித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு திருப்பு முனையாக இவருடைய இந்த வருகை உள்ளது.

கருத்து:
முகமது பின் சல்மானின் (MBS) அமெரிக்க வருகை, அவருடைய லண்டனின் பயணத்திற்கு பின் ஆனது. அவரது ஆட்சியின் உறுதி நிலை பற்றிய உத்தரவாதத்திற்கும், நாட்டில் தான் கொண்டுவந்துள்ள சீர்திருத்த தொகுப்புகளைப் பற்றிய தெளிவான அங்கீகாரத்திற்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை MBS அளித்தார்.

அமெரிக்காவில் MBS இன் வருகை சவுதி மற்றும் பிரிட்டனுக்கு இடையிலிருந்த நூற்றாண்டுகள் கால உறவுகளை மறைத்துவிட்டது.

இந்த முறை நடந்த இரு நாடுகளின் கூட்டத்தின் ஆழமும் அகலமும் அமெரிக்க-சவுதி உறவுகளின் வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி, அரசியல்வாதிகள், Wall Street தலைவர்கள், ஊடகத் தொழிலாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களை MBS சந்தித்தார். 

சவுதியின் ஒவ்வொரு அம்சத்தையும் அமெரிக்க கைப்பற்றியுள்ளது என்பதை இவருடைய வருகையின் நோக்கத்திலிருந்து தெரிகிறது- மேலும் அமெரிக்க தன்னுடைய புதிய காலனித்துவத்தையும் பிற நாடுகளில் தொடர்வது தெரிகின்றது.

இவை எதுவும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அடைய முடியவில்லை. ஜனாதிபதி பதவிக்கு டிரம்ப் வந்ததும் அதற்கு பின் மே மாதம் 2017 ல் சவுதி அரேபியாவிற்கு டிரம்ப் வருகை தந்ததும் ஒபாமாவின் ஆட்சியின் மதிப்பை குறைத்துவிட்டது. 

200 ஆண்டுகளாக நீடித்த சவூதி-பிரித்தானிய உறவுகளுக்கு முடிவு கொடுத்து, சவுதியில் அமெரிக்காவின் அஸ்திவாரங்களை டிரம்ப் அமைத்துள்ளார். MBS யின் இந்த மதச்சார்பின்மை ஆக்குதல் அங்குள்ள மக்களை மட்டும் பாதிக்கவில்லை மாறாக, ஹிஜாஸ் பகுதியை ஆட்சியமைக்க பிரித்தான், இப்னு சவுத் மூலம் வெற்றிகரமாக வளர்த்த வஹபி-சவுதி கூட்டணியையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. 

அமெரிக்க வழிகாட்டுதலின் கீழ், MBS தன்னுடைய சீர்திருத்த தொகுப்புகளை பயன்படுத்தி ஒரு மாற்றுத் தளத்தை வளர்த்து அதில் சவுதியின் மூன்று பாரம்பரிய தூண்களை நிறுவ இருக்கின்றார். அவை பின்வருமாறு:
முதல் தூணானது, வஹாபி சிந்தனையில் இருக்கும் கர்வமுள்ள உலமாக்களை மாற்றி அவர்கள் இடத்தில் தாராளவாத சிந்தனையில் இருக்கும் உலமாக்களை வைப்பது.

இரண்டாவது தூண், “ஊழலுக்கு எதிராக போராடுவது” என்ற சாக்குப்போக்கில் சவூத் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரித்தான் கைக்கூலிகளை அகற்றுவது.
மூன்றாவது தூண், பிரித்தானியரை மௌனப்படுத்தி MBS க்கு எதிரான சதிகளை நிறுத்துவதற்கான அவர்களின் திறனைக் கட்டுப்படுத்துவது.

அமெரிக்க உடனான MBS மாளிகையை சீர்குலைக்கக்கூடாது என்ற பிரித்தனுடன் “கனிவான உடன்படிக்கை” கையெழுத்தி அதற்கு பதிலாக, சவுதியுடன் ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளில் பில்லியன் கணக்கான டாலர்களை பிரித்தனுக்கு வழங்க MBS க்கு அமெரிக்கா அறிவுறுத்தியது. 

புதிதாக அமைக்கப்பட்ட இந்த தூண்கள் MBS யின் அமெரிக்கா மாளிகையை தாங்கிப்பிடிக்கும் என்றும், மக்களிடமிருந்து புதிய ஆதரவிற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்றும் அமெரிக்க மற்றும் MBS நம்புகின்றனர்.

இவ்வாறாக மேற்கத்திய காலனித்துவ வாதிகள் இப்னு சவுதின் வம்சாவளியை பயன்படுத்தி ஹிஜாஸின் முஸ்லிம்களையும் எண்ணெய் செல்வத்தையும் சேதப்படுத்தியுள்ளன. ஹிஜாஸின் முஸ்லிம்கள் இந்த சூழ்நிலையில் மனசை இழந்துவிடக்கூடாது, கொடுங்கோன்மையில் கட்டப்பட்ட எந்த கட்டிடமும் நீடிக்காது என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

MBS யின் அமெரிக்கவுடனான இந்த கட்டிடத்தின் உதாரணம், சீட்டுகளின் அற்பத்தனமான கட்டிடம் போன்றது, அல்லாஹ்(சுபு) யின் அனுமதியோடு மிக விரைவில் இது கவிழ்ந்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் – ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
[ஸூரா யூசுஃப்: 21]

காலனித்துவ சக்திகளின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர, சவூதி ஆட்சி மற்றும் அதனுடைய அனைத்து அடையாளங்களையும் வேரோடு அகற்றி, அதற்கு பதிலாக நபி(ஸல்)யின் சரியான வழிகாட்டுதலில் ஆன கிலாஃபாவை நிறுவவேண்டும். 

ஏனெனில், கிலாஃபா மட்டும் தான் ஹிஜாஸையும் அதன் மக்களையும் குஃபார் சக்திகளின் பிடியிலிருந்து விடுவித்து, அங்குள்ள எண்ணெய் வளத்தின் செல்வத்தை முழு உம்மத்துக்கு பயன்படுமாறு அமைக்கமுடியும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
[ஸூரா அன்ஃபால்: 24]

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!