பொது தேவைக்கு தனியார் சொத்துக்களை கையகப்படுத்தலும் இஸ்லாமிய நீதி பரிபாலனமும்.

பொது தேவைக்கு தனியார் சொத்துக்களை கையகப்படுத்தலும் இஸ்லாமிய நீதி பரிபாலனமும்.

உமரும் - எட்டுவழிச் சாலையும்

----------------------------------------------------------------------

மதீனாவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போன சமயம் அது ,
தொழுகையாளிகளின் எண்ணிக்கையும் அதிகமானதால் ஹிஜ்ரி 17-ல் மஸ்ஜிதுந் நபவியை விரிவாக்கம் செய்யும் போது சுற்றியிருந்த இடங்கள் அரசால் விலைக்கு வாங்கப்பட்டன.
ஆனால் #அப்பாஸ்(ரழி) தன் வீட்டை விற்க மறுத்து விட்டார்கள். ஆனாலும் அதற்கீடாக பெரும்தொகை தர கலீபா  #உமர்(ரழி)  முன் வந்தார்கள், ஆனாலும் அப்பாஸ்(ரழி) உடன்படவில்லை. வழக்கு ஷரியத் நீதிமன்றம்  செல்கிறது

நீதிபதியாக #உபை_இப்னு_காப்(ரழி) உள்ளார்கள்.
வழக்கின் முடிவில்  தீர்ப்பில் என்ன வந்தது தெரியுமா ?

" பலவந்தமாக இடத்தை வாங்க உமருக்கு(ரழி) எந்த உரிமையும் கிடையாது "

என தீர்ப்பளிக்கப்பட்டது

(மேற்கண்ட சம்பவம் #அல்லாமா_ஷிப்லி #நுஃமானி (ரஹ்) எழுதிய #உமர்_கத்தாப் புத்தகத்தில் உள்ள செய்தி

((((( இதில் Abu Hafs சொன்ன கூடுதல் தகவலையும் கீழே இணைக்கிறேன்
***********************************

இந்த வழக்கை தாக்கல் செய்தவர் அப்பாஸ் (றலி) அவர்கள்.
இருவரும் விசாரனைக்கு ஆஜரான சமயம் வாதியை முந்திக்கொண்டு பிரதிவாதியான உமர் (றலி) அவர்கள் பேச முற்பட்ட போது நீதிபதியாக வீற்றிருந்த உபை இப்னு கஃப் (றலி) அவர்கள் உமரை பார்த்து வினவினார்கள்!
ஒரு வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது முதலாவதாக தன்னுடைய வாதத்தை முன்வைக்கும் உரிமை வாதிக்கே உண்டு என்பது மதீனாவில் உள்ள மிகப்பெரிய புகஹாக்களில் ஒருவரான உமர் இப்னு ஹத்தாபிற்கு தெறியாதா? ))))))

உலகமயமாதலை இன்னும் வேகப்படுத்த இன்று எட்டு வழிச்சாலை எனும் பெயரில் ஒருவனின் உழைப்பையும் - சொத்தையும் அபகரிக்க  நினைக்கும் முட்டாள் அடிமை அரசுகள் இந்த தீர்ப்பை சிந்திக்க வேண்டும்

குறிப்பு :

அதன் பிறகு அப்பாஸ்(ரழி) பொதுமக்களுக்காக விலையில்லாமல் அந்த இடத்தை வழங்கி விட்டார்கள்

By Ab Gopi Nath

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!