ஐ.நா, வீட்டோ, பார்வையில் உலகம். (ஒரு குறிப்பு)...

ஐ.நா, வீட்டோ, பார்வையில் உலகம். (ஒரு குறிப்பு)

1.கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்.

2.பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.

3.மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.

4.இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

5.உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.

மேற்படி இலக்குகளை கொண்டு உருவாக்க பட்டதே ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்ற பல நாடுகளைக் கொண்ட பன்னாட்டு  அமைப்பாகும். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத்  தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல்,  கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. செப்டெம்பர் 2010 நிலைவரப்படி 192 உறுப்புநாடுகள் இருந்தன. யூலை 9, 2011 இல் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன. (ஆனால் மேலே தந்த 5 விதிகளையும் ஐ.நா கனகச்சிதமாக செய்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடுவது அவசியம்.)

ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளியுலகுக்கு தெரிய வந்ததால் ஐநா அமைக்கப்பட்ட 1946 ஆம் ஆண்டு முதல் வீட்டோ (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன.

இந்த அதிகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபையின் பச்சை அறிக்கை (The green papers of U N Security Council) தெளிவுபட அறிவித்துள்ளது. இதன் படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் ஏவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுத்துள்ளது. உண்மையை சொல்லப்போனால் இந்த கேலிக்கூத்து அரசியலில் முழு உலகமும் பணயம் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது சர்வதேச விதிகள் என்ற நாடகத்தின் மூலம் ஒட்டுமொத்த மனித குலத்தின் நடத்தைகளை குறித்த சில வல்லரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப அடிபணிய சொல்வது அல்லது அடிபணிய வைப்பதே இந்த ஐ.நா.வின் சேவையாக நடந்துவருகிறது. அந்த வகையில் இந்த ஐ.நா சமாதானத்தை ஏற்படுத்தியதைவிட சர்ச்சைகளையும் பேரழிவு யுத்தங்களையும் ஏற்படுத்தியதே அதிகமாகும். குறிப்பாக பாலஸ்தீன விவகாரம் தொடங்கி முஸ்லீம் உலகின் அவல வரலாற்றில் பெரும்பங்கு ஐநாவுக்கு உண்டு. ஆனாலும் இந்த ஐ.நா எதையாவது பெற்றுத்தரும் என்ற குருட்டு நம்பிக்கை முஸ்லீம்களில் பலருக்கு தொடர்ந்து இருக்கிறது!

இன்று பேசப்படும் சர்வதேச சட்டங்கள் என்ற போலித்தனத்தின் பின்னாலும் வெளிநாட்டுறவு மற்றும் ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல் தளமாற்றங்கள் என ஒவ்வொரு அம்சத்திலும் ஏகாதிபத்திய வல்லரசு அரசியலின் கரங்கள் ஆழப்பாய்வதற்கும் புகுந்து விளையாடுவதற்கும் உதவி புரியும் இந்த ஐ.நா எப்படி ஒரு தேசத்தின் சுதந்திர இயக்கத்தை பாதுகாக்கிறது என்று கூறமுடியும்!? பாலஸ்தீன், ஈராக், காஸ்மீர், ஆப்கானிஸ்தான், சூடான்..... என பலவிவகாரங்களில் கையாலாகாத முடிவுகளை வழங்கி வேடிக்கை பார்ப்பது தவிர ஐ.நா அதிகமாக எதுவும் செய்யவில்லை.

ஒரு தீர்மானத்தை கொண்டுவர அதை யாராவது எதிர்த்து வீட்டோவை பிரயோகிப்பர்! பின்னர் தமக்கு சாதகமான அரசியல் பொருளாதார இராணுவ நடவடிக்கைகளை வல்லரசுகள் செய்ய போலியான மீடியா அறிக்கை கண்ணீர் விடுவதில் இந்த ஐ.நா பக்கா கில்லாடி! ஈராக்கிய ஆக்கிரமிப்பும் தற்போதைய சிரியாவின் விவகாரமும் இதற்கு சிறந்த உதாரணமாகும். இப்படி ஒரு கையாலாகாத உலக நியதியை நம்பித்தான் நாம் பணயம் வைக்கப்பட்டுள்ளோம். முஸ்லீம்கள் காட்டுமிராண்டி தனம் செய்கின்றனர்; என்று கூறியவாறு முஸ்லீம் உலகை ஆக்கிரமிக்க தவிர வேறு உறுப்படியாக எதையும் ஐநா சாதிக்கவில்லை. அதை நம்பி செயற்படுவது

*மார்க்க ரீதியிலும் அறிவார்ந்த பார்வையிலும் பிழையானது தவிர வேறில்லை.

- Abdur Raheem

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!