பிறைபார்த்தல்....

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்:-

"ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும். (A1- Fatawa Volume 5, page, 111)

தாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது காங்கோஹி (ரஹ்):- கல்கத்தா மக்களுக்கு வெள்ளக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது. கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பன்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும். (Sharh Tirmizi, Kaukab un Durri, pge - 336)

தமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலாஹழரத் (ரஹ்) உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும். (பாகியாத்துஸ்ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு)

தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃத்வா: பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள். தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும். (Fatawa Darul Uloom Deoband,Volu, 6, page - 380)

மௌலானா ஸஃபீகுர் ரஹ்மான் நத்வி, லக்னோ: ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டது உறுதியாவிவிட்டால் அனைவர் மீதும் நோன்பு நோற்பது கடமையாகிவிடும். (Fikhul Myassir, page - 133)

பிறை விசயத்தில் ஹனஃபி மத்ஹபு புறக்கணிக்கப்பட்டு மனோ இச்சையின் அடிப்படையில் மாநிலம், மண்டலம், மொழி, ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படுவதுதான் பிரச்சனைக்கு காரணம். பிறை விசயத்தில் اختلاف المطالع ஐ பார்க்க தேவையில்லை , எவ்வளவு தொலைவில் இருந்து வேண்டுமானாலும் தகவலை ஏற்றுக்கொள்ளலாம் என்று ஹனஃபி சட்டம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் மொழியுணர்வும் மண்டல உணர்வும் மேலோங்கி பிறை தீர்மானிக்கப்படுகிறது. மாலிகான், குல்பர்கா பகுதிகளின் பிறையை ஏற்கும் ராயப்பேட்டை காஜி அலுவகம் ,பாலக்காடு, மங்களூர், கள்ளிக்கோட்டை( கோழிக்கோடு), குளச்சல், முதலியார்பட்டி( நெல்லை மாவட்டம் ) போன்ற பகுதிகளில் பார்க்கும் பிறையை நிராகரிக்கிதது..

- Mannai Bava

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!