சமூகமும் அரசியல் அதிகார பின்புலமும்...


ஒரு சமூகம் அதன் தனித்துவத்தை தக்க வைக்க வேண்டுமெனில் அதைப்பாதுகாக்கும் அரசியல் அதிகார பின்புலம் அச்சமூகத்துக்கு இருப்பது இன்றியமையாதவொன்றாகும்.
அப்படியான அரசியல் அதிகார பின்புலம் இல்லாதவிடத்து அச்சமூகம் அதன் தனித்துவத்தை பலவந்தமாகவோ, சமரசமெனும் பெயரிலோ இழக்க நேரிடும்.

அல்லது அதைவிடக்கேவளமான முறையில் சிந்தனை வீழ்ச்சியென்ற நோய் மூலம் அச்சமூகம் அதன் தனித்துவத்தில் தானே குறைதேடி அதை சீர்திருத்தம் செய்கிறோமெனும் பெயரில் வேறொரு சமூகத்தினது சாயலுக்கு மாறி விடும்.
அது இஸ்லாத்தைப்பொறுத்தளவில் இன்றைய நிதர்சனமான விடயமாகும். ஏனெனில் இன்று தன்னை, தனது தனித்துவத்தைப்பாதுகாக்கும் எந்த வித அரசியல் அதிகார பின்புலமும் அற்ற நிலையில் தான் இஸ்லாம் இன்று உள்ளது.

இதே நிலை தொடருமாயின் முஸ்லிம்களது வாழ்வில் இஸ்லாத்தினதினது தனித்துவமான அம்சங்கள் பிரதிபளிக்காமல் வெறுமனே பெயரளவில் முஸ்லிமான நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்படுவார்கள்.
இஸ்லாத்தினது தனித்துவமானது தொடர்ந்தும் முஸ்லிம்களது வாழ்வில் பிரதிபளிக்க வேண்டுமெனில் இஸ்லாம் ஒரு தகுதிவாய்ந்த அரசியல் அதிகார பின்புலத்தை தன்னகத்தே கொண்ட நிலைக்கு மீளவேண்டும். 

இதுவே இஸ்லாத்தினது தனித்துவம் பாதுகாக்கப்படுவதற்காண அரசியல் பாதுகாப்பாகும்.
அவ்வாறான நிலைக்கு இஸ்லாம் மேலோங்குவதற்கு இஸ்லாத்தை செயற்படுத்தும் அந்த வாக்களிக்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.

#சும்ம_தகூனு_ஹிலாபதின் #அலா_மின்ஹாஜின்_நுபுவ்வா

- Muhammadh Fir Nas

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!