மன மாற்றம் கண்டு வரும் தமிழக/இந்திய முஸ்லிம்கள்...

மன மாற்றம் கண்டு வரும் தமிழக/இந்திய முஸ்லிம்கள் .


மேட் இன் அமெரிக்க நவீன (மாடரேட்) இஸ்லாத்தை வளைகுடா நாடுகள் உள்ளிட்ட  முஸ்லிம் நாடுகளுக்கு சமீபத்தில் ஏற்றுமதி செய்ததன் பலன் வெளிப்பட ஆரம்பிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சவூதி மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்கள் போர்த்தி இருந்த ஆன்மீக போர்வையின் சாயம் வெளுத்து , இற்றுப் போய் கிழிந்து தொங்குகின்றது.

முன்பெல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஆட்சியாகவும் ,  பெருவாரியான இந்திய முஸ்லிம்களால் குறை காணப்படாத அரசாகவும்
அரபுலக நிர்வாகம் திகழ்ந்து வந்தது என்றால் அது மிகையல்ல .

ஆனால் தற்போதைய சூழலில் முஹம்மத் இப்னு சல்மானின் நடவடிக்கைகள் முற்றிலும் அமெரிக்க அடிமைத் தனத்தை  ஒத்திருப்பதாகவும் , தீனை தகர்க்கும் நேரடி செயல்பாடாகவும் , சாதாரண அரசியலறிவுடைய மக்களும் உணரத் தலைப்பட்டுவிட்டனர்.


பொதுவாகவே அரசியல் ஞானத்தில் பின் தங்கிக் காணப்படும்  மூன்றாம் உலக மக்களான இந்தியர்களும்  கூட மேற்கண்ட ஆட்சியாளர்களது அயோக்கியத்தனத்தால் மிகவும்  திடுக்குற்றுள்ளனர்.

முந்தைய காலங்களில் அரபுலகிற்கென தனித்த மரியாதையை உள்ளத்தில் சுமந்து , அவர்களின் மத்ஹபாக திகழ்ந்த வஹ்ஹாபிய்ய சிந்தனையை உவப்புடன் ஏற்று பின்பற்றி வந்த ஹிந்த் முஸ்லிம்கள் , தற்போது ஒன்றைக் கண்டு இன்னொன்றில் ஏமார்ந்துவிட்டோமோ என சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் சிறிது காலத்துக்கு முன்பாக #இதே_ஆட்சியாளர்கள் மகோன்னதமான இஸ்லாமிய இலக்குகளுக்காக தமது அரசியல் வியூகத்தை அமைத்துக் கொண்டு செயலாற்றியவர்கள் போல மக்களின் பார்வையில் தென்பட்டனர். 

மேற்குலக குஃப்பார்களுடன் ஆகக் கிழ்தரமான உறவை மேற்கொண்டும் , முஸ்லிம்களை யமன் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகவும் , மற்ற இஸ்லாமிய பகுதிகளில் மறைமுகமாகவும் கொன்றொழித்து வந்த போதிலும்  ஊருக்குள் நற்பெயரை தக்க வைத்துக் கொண்டிருந்தனர். 


ஆனால் சமீப காலத்திய நிகழ்வுகள் சாமானிய முஸ்லிம்களிடம் கூட அவர்களது செல்வாக்கை கடுமையாக சரித்துள்ளது.

அரசியலை அவசியமில்லா விவகாரமாய் கருதி விலகி இருந்த இந்திய முஸ்லிம்களை மோடியின் பிரதமர் பதவி பிரவேசம் , எப்படி மாற்றி அமைத்து , அவர்களின் apolitical Islamic mind set இல் இருந்து நகர்த்தி ஆன்மீகத்தோடு அரசியல் களத்திலும் ஆர்வத்தை உண்டாக்கியதோ  அவ்வாறே சாமானிய உள்ளங்கள் சர்வதேச களத்தை அரசியல் பார்வையுடன் நோக்குமாறு மாற்றிவிட்டது.

தூதர் (ஸல்) அவர்களால் வாக்களிக்கப்பட்ட இரண்டாம் கிலாஃபா ராஷிதாவின்  மீள் உருவாக்கத்திற்காக தொடர்ந்து  உலகெங்கும் உழைத்து வரும் அரசியல் அழைப்பாளர்களுக்கு இந்த மாற்றம் மாபெரும் நற்செய்தியும் இறை அருளுமாகும் .

வல்லாஹு ஹைருல் மாக்கிரீன்.

- Abukka

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!