சவுதி ஆட்சியாளர்கள்...

சவுதி ஆட்சியாளர்கள்...

செய்தி:
2018 ல் ஒவ்வொரு மாதமும் அரசு பணியாளர்களுக்கும் 1,000 ரியால் (சுமார் 266 டாலர்) வழங்க சவூதி அரசர் சல்மான் கட்டளையிட்டுள்ளார். “50 பில்லியன் ரியால் ஒதீக்கீடு செய்த இந்த அரசாணை,
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில்
சவூமி தலைமை எவ்வளவு அக்கறை எடுத்துகொள்கிறது என்பதை குறிக்கின்றது” என கலாச்சாரம் மற்றும் செய்தி துறையின் அமைச்சர் அவாது பின் ஸாலிஹ் அல் அவாது செய்தியாளர்களுக்கு கூறினார் (Source: Reuters)

கருத்து:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அறிவிக்கிறார்கள் :

«لَتَتَّبِعُنَّ سَنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ دَخَلُوا فِي جُحْرِ ضَبٍّ لَاتَّبَعْتُمُوهُمْ»قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ آلْيَهُودَ وَالنَّصَارَى؟ قَالَ:«فَمَنْ؟»

“நீங்கள் உங்களுக்கு முன்னாடி இருந்தவர்களின் அடிச்சுவட்டை முலமுக்கு முலம் ஜானுக்கு ஜான் பின் பற்றுவீர்கள், அவர்கள் ஒரு பள்ளியின் பொந்துக்குள் நுழைந்தாலும் அவர்களை நீங்கள் பின்பற்றுவீர்கள்” என கூறினார்கள். இதற்கு நாங்கள் (சஹாப்பாக்கள்) ‘ யூதர்களும் கிருஸ்தவர்களையுமா? “ என வினவினோம் அதற்கு நபி (ஸல்) “பிறகு யார் என கூறினார்கள்”(முஸ்லிம்)

குர்ஆனில் அல்லாஹ் (சுபு) கூறுகிறான்

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَن يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا

“(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? – (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் – அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.” (சூரா நிசா : 60)

சவூதியிலும் மற்ற முஸ்லிம் நாடுகளிலும் இதுவே நடந்து கொண்டிருகின்றது. அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர் என்றும், நபி அவர்கள், ஆன்மீகம்/அரசியல் என அனைத்து துறைகளுக்கும் இஸ்லாத்தை முழு வாழ்கை முறையாக வாழ கட்டளையிட்டார்கள் என்பதையல்லாம் நம்பி வழிபட்டு வருவதற்கு பதிலாக, முஸ்லிம் நாடுகள் தாகூத் அமைப்பை பொருளாதார, சமூக. அரசியல் ரீதியாக நம்பி வழிபட்டு வருகின்றனர்.

(VAT) என்று சொல்ல கூடிய மதிப்பு கூட்டு வரியை சவூதி அரசு இவ்வருடம் தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகமும் மற்ற முஸ்லிம் நாடுகளை போல இவ்வரியை அறிமுக படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஊழல் மிக்க தலைவர்களின் சொத்துகளை பாதுகாத்து மோசமான முதலாளித்துவ
(உலகில் நாசத்தை ஏற்படுத்தும் capitalisa) அமைப்பை அவர்கள் உறுதிப்படுத்த நினைக்கின்றனர்.

பெரும்பான்மையான பொதுமக்கள் வரி செலுத்துவது சிறுபான்மையான பணக்காரர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமையை திருப்தி படுத்துவதற்கே ஆகும். இங்கு ஊக்க தொகை கொடுப்பதன் மூலம் மக்களின் மீது அவர்களுக்கு அக்கறை இருக்கின்றதாக காட்டி கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் மக்களின் சொத்துகளை உரிஞ்சகூடிய வரி அமைப்பை மறைப்பதற்காகவே இதனை செய்கின்றனர்.

உண்மையில் சவூதி தலைவர்கள் மக்களின் நலன்களின் மீது அக்கறை கொண்டவர்களா என்றால் நிச்சயமாக இல்லை!

எண்ணை வளம் அதிகம் மிக்க சவூதி, வெறும் சவூது குடும்பத்தின் ஆடம்பரத்திற்கும் சுக போக வாழ்கைக்குமே பெரும் செலவுகள் செய்யப்படுகின்றன. போதாதற்கு
உம்மத்தின் சொத்தான மக்களுக்கு உரிமையுள்ள இயற்கை வளங்களின் வருமானத்தை அவர்கள் தன் வசம் ஆக்கியுள்ளனர், வரிகளும் மக்கள் மீது விதிக்க படுகின்றன.

சவூதியின் பொருளாதார சீர்திருத்தம்
Economic system of capitalism - முதலாளித்துவ கொள்கைகளை பின்பற்ற கூடியதாக இருக்கின்றது. எனவே ஏழை பணக்காரர்களுக்கு மத்தியில் உள்ள விரிசல் இன்னும் அதிகமாகும்.
இந்தியா-uk-us நாடுகளை போன்று
பணக்காரர் மேலும் பணக்காரராகிக் கொண்டிருப்பார்,
ஏழை மேலும் ஏழையாகிக்கொண்டிருப்பார்!

அதே போல அங்கு சமூக சீர்திருத்தம் என்று கூறி முஸ்லிம் பெண்களை விடுவிக்கிறோம் என்ற பெயரில் மேற்கின் வாழ்கை முறையை பின்பற்ற வைப்பது, மேற்குலகம் சமூக ரீதியாக என்ன என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறதோ அவை அனைத்தும் சவூதி சந்திக்க கூடிய ஒரு சூழல் அமைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சவூதி, அமெரிக்காவின் உற்ற பிரதிநிதியாக இருக்கும்.
அரசியல் சீர்திருத்தம் மூலம் முஸ்லிம் தலைவர்கள் குஃப்ஃபார்களுக்கு மத்தியில் தங்களுடைய கண்ணியத்தை குறைத்து கொண்டனர்.

உண்மையில் ஆட்சியாளர்கள் அல்லாஹ்வை நம்பி மறுமையை நம்பி , அல்லாஹ்வின் ஷரிஆ தான் முஸ்லிம்களின் ஒரே வழிமுறை என்று நம்பி அதனை முழுமையாக நடைமுறை படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.
இது ஏனெனில் அல்லாஹ்வின் அமைப்பு (தீன்- சித்தாந்தம்) மட்டுமே நல்ல வாழ்கையையும் கண்ணியத்தையும் இவ்வுலகில் கொடுக்க முடியும்.

முஸ்லிம்களுக்கு தங்களுடைய அமைப்பே சிறந்தாதாக இருக்கும் பொழுது குஃப்ரிய அறியாமை அமைப்பை எதற்கு நாம் தேட வேண்டும்?

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

“அறியாமை காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (சூரா மாயிதா: 50 ).

- Received

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!