சிறு சிந்தனைகள் தொகுப்பு - 9

1) ஸ்டெர்லைட், விவசாயம், நிலக்கரி, ஹைட்ரோகார்பன் என மக்கள் ஜுவாதார பிரச்சனைகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டிய மாநிலத்தின் முதல்வரும் நாட்டின் பிரதமரும் வாய்மூடி மொனியாக வேடிக்கை பார்க்கின்றனர்.

மக்களிடம் ஓட்டு பிச்சை வாங்க வாய் கிழிய பேசிய பச்சோந்திகள் இன்று மக்களை வஞ்சிக்கின்றன. மாற்றம் வரும் என்று ஓட்டு போட்ட மக்கள் இன்று நடுத்தெருவில் கையேந்தி நிற்க்கும் சூழல். மக்களே #மக்களாட்சி மாய அரசியலை புரிந்து கொள்ளுங்கள் மாற்ற வேண்டியது ஆள்பவனை அல்ல ஆட்சி செய்யும் முறையை!!!

2) இந்தியாவிற்க்கு இஸ்லாமிய ஆட்சி ஒத்துவராது!!! வல்லோன் வகுத்த வாழ்வொழுங்கு எப்படி இந்தியாவிற்க்கு மட்டும் பொறுந்தாமல் போகும்! இஸ்லாம் என்பது வாழ்வியல் சித்தாந்தம்! சத்திய சோதனைகளுக்கு மத்தியில் நன்மையை ஏவி தீமையை தடுத்து மறுமைக்கான தயாரிப்பு செய்வதே அதன் சாராம்சம். மாறாக அது வெறும் சடங்கு சம்பிரதாயம் அல்ல!

3) மது, மாது என சமுக சீர்கேடுகள் அதிகரித்து போன இந்த நவீன ஜாஹிலியா காலத்தில் சத்திய மார்க்கத்தை பள்ளியில் பூட்டி முடக்கி விட்டு அமலை நிரைவேற்றினால் மட்டும் மறுமையில் கரையேறி விடலாம் என தப்பு கணக்கு போடுகிறார்கள் முஸ்லிம்கள்!!! இஸ்லாம் மார்க்கத்தை மேலோங்க செய்யவே நபிமார்கள் அனுப்பப்பட்டதாக வல்லோன் வஹியில் கூற! குப்ரு ஜனநாயகம்தான் சரி என்று ஷைத்தானுக்கு சலாம் போட்டு  வாதிக்கின்றனர் சிலர்.

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!