துருக்கி நினைத்தால் சிரிய யுத்தத்தை ஒரு நாளுக்குள் முடிவுக்கு கொண்டு வரமுடியும்!!!

துருக்கி நினைத்தால் சிரிய யுத்தத்தை ஒரு நாளுக்குள் முடிவுக்கு கொண்டு வரமுடியும். 


துருக்கி ஒரு மில்லியனுக்கு அதிகமான இராணுவத்தை திரட்டக்கூடிய தேசமாகும். டமஸ்கஸ்,அலெப்போ இரண்டையுமே கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தால் சிரிய யுத்தம் முடியும்.

துருக்கி தனது எல்லையை சிரியாவுடன் பகிர்வதால் இராணுவ வளத்தை மிக இலகுவில் வழங்கமுடியும்.
சொந்தமாக பாதுகாப்பு துறை விருத்தியை மேற்கொள்ள முடியாத  நாடாக சிரியா காணப்படுகின்றபோது, பாரிய கவச  வாகனங்களையும், இராணுவ கேடையங்களையும் உற்பத்தி செய்யும் நாடாக துருக்கி உள்ளது.

சிரிய இராணுவ தளபாடங்கள் அழித்தொழிக்கப்பட்டால், மீளவும் அவற்றை பெறுவதில் சிரியா தள்ளாடும். ஏனென்றால் அது வெளிநாட்டு உதவியை வேண்டி நிற்கும் ஒரு நாடு.
யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போதே இராணுவ கேடயங்களை உருவாக்குமளவுக்கு ஆயுதத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் வல்லமை துருக்கிக்கு உண்டு.

துருக்கி  தரைப்படை மற்றும் ஆகாய வழி தாக்குதலை தொடர்ந்தால் சிரியாவின் "SAM Battery" அதாவது விமானங்களையும் , ஏவுகணைகளையும் வீழ்த்தக்கூடிய நிலத்தில் அமையப்பெற்றிருக்கும் கட்டமைப்பை தகர்த்தெறிய முடியும்.

துருக்கி ஆளில்லா வான்வழி வாகனங்களை நன்கு விருத்திசெய்துள்ளது. இவற்றை பயன்படுத்தினாலே போதும் சிரிய ஏவுகணை பொறிமுறை கட்டமைப்பை துவம்சம் செய்துவிடலாம்.
    
துருக்கியிடம் 850 யுத்த ஜெட் விமானங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் 350 F15 "பால்கன்" அதிவேக விமானங்களாகும். அசாத்திடம் காணப்படும் சோவியத் கால 1960 களில் உற்பத்தி செய்யப்பட்ட  MIG ரக விமானங்கள் இவற்றை எதிர்வுகொள்ளும் அளவுக்கு சக்திவாய்ந்தவையல்ல.
துருக்கியின் தெற்கு தியா பாகர் மிலாத்யா தளத்தை கட்டளைத்  தலைமையமாக இந்த ஆப்பரேஷனில் பயன்படுத்த முடியும்.

பட்மேன், ஈர்க்கிளிட் ஆளில்லா விமான தளம் ஆகாய வழி உதவி செய்யமுடியும்.  
துருக்கியின் இன்சிர்லிக் விமான தளத்திலிருந்து வான்வழி தாக்குதல் செய்தால் சிரிய வான்வழி கட்டுப்பாட்டுக்குள் வரும்.
சிரியாவோடு  ஒப்பிடுகையில் துருக்கியானது வான் வழி தாக்குதல் மேற்கொள்ள  பறக்கும் விமானங்களுக்கு வலுவூட்டக்கூடிய நவீன தொழில் நுட்பங்களையும் ,மாற்றீட்டு விமான வசதிகளையும்  கொண்டுள்ளது. 

அதாவது தேவைப்படுமளவுக்கு விமானத்தாக்குதல் நடத்தும் சக்திவாய்ந்தது.
இவ்வாறான ஒரு தாக்குதலை நடாத்தும் வல்லமையையும் , வரலாற்றையும் துருக்கி உதுமானிய கிலாஃபத்திடமிருந்து கொண்டிருக்கின்றது.
இதை சாத்தியமாக்க  வேண்டுமெனில் துருக்கி மீண்டும் ஒரு இஸ்லாமிய தேசமாக எழுந்து நிற்கவேண்டும்.

- Received

Comments

கிலாபா ஏன் தேவை?

மஹ்தி (அலை) அவர்களை பற்றிய குறிப்பு..

உதுமானிய கிலாபா!!!

முஹம்மத் அல் ஃபாத்திஹ்!!!